9/30/2013

| |

கிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன? முன்னைய ஆட்சியுடன் ஓப்பிடுகையில் தற்போதைய ஆட்சியில் ஒருவித தேக்கநிலை

இலங்கையின் தற்போது கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்துவரும் அரசு பதவிக்கு வந்து ஒரு வருடமாகிறது.
மக்களுக்காக பல பணிகளை தாங்கள் செய்துள்ளதாக அரசு கூறினாலும், ஆளும் கூட்டணியில் உள்ளவர்களே அரசின் மீது தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் கிழக்கு மாகாண சபையின் தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய செயல்பாடுகள் இல்லை என்பதை சபையின் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் ஓப்புக்கொள்கிறார்கள்.
முன்னைய ஆட்சியுடன் ஓப்பிடுகையில் தற்போதைய ஆட்சியில் ஒருவித தேக்கநிலை தென்படுவதாக பொதுமக்களிடம் பேச்சு அடிபடுகிறது..
பொதுமக்களிடையே காணப்படும் இத்தகைய கருத்து பற்றிதொடர்பாக பிபிசி தமிழோசை மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டது.
பொதுவாக விமர்சனங்கள் உள்ளதை ஆளும் தரப்பை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தன் ஒப்புக்கொண்டார்.
மாகாணசபை அரசின் மூலமாக குறிப்பிட்டு சொல்லக் கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளோ புதிய சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளோ இடம்பெறவில்லை என்று அவர் கூறுகிறார்.
கிழக்கு மாகாண அமைச்சர்கள் வாரியத்தில் நான்கு முஸ்லிம்களும் சிங்களர் ஒருவரும் அமைச்சர்களாக பதவி வகிக்கின்றார்கள். தமிழர்கள் எவரும் அமைச்சராக இல்லை.
சிற்றூழியர் நியமனம் தொடக்கம் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் வரை தமிழர்களுக்கு அமைச்சர்களினால் பாராபட்சம் காட்டப்படுவதாக பிரதான எதிர்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இரா. துரைரெத்தினம் குற்றஞ்சாட்டுகிறார்.

பொம்மை ஆட்சி

கிழக்கு மாகாண சபையில் மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி ஆட்சி அமைப்பதற்கு பெருன்பான்மை தேவைப்பட்டபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியது. அக்கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாகவும் தற்போது பதவி விக்கின்றார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் பங்காளிக் கட்சியாக இருந்தாலும் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினரான ரம்ழான் அன்வர் தற்போதைய ஆட்சி தன்னைப் பொறுத்தவரை பொம்மை ஆட்சி என்கிறார்.
முஸ்லிம் ஒருவர் தற்போது முதலமைச்சர் பதவியிருந்தும் காணி பிரச்சினை உட்பட சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெறமுடியாத நிலையில் அந்த பதவியிலும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

அமைச்சர் மறுப்பு

மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எத்தகைய கருத்துக்களை கொண்டிருந்தாலும் கிழககு வாழ் மூவினங்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய தமது செயல்பாடுகள் இருப்பதாக அமைச்சர்கள் வாரியத்தின் பேச்சாளரும் மாகாண வீதி அபிவிருத்தி , வீடமைப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சரான எம். எஸ். உதுமாலெப்பை கூறினார்.
தனது அமைச்சின் நிதி ஒதுக்கீடுகளில் இனரீதியான பாகுபாடுகள் இல்லை என்றும் அவர் வாதிட்டார்.
»»  (மேலும்)

| |

மத்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவு

மக்களின் நன்மை கருதியும் காலத்தின் தேவை கருதியும் நாம் அரசாங்கத்துடன் இணைந்து மத்திய மகாண சபையில் செயல்படுவதென தீர்மானித்து ள்ளோம் என மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவி த்துள்ளார். மத்திய மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் மகாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ் ஊடகவியலாளர் மகாநாட்டில் மலையக மக்கள் முன்னணி சார்பில் வெற்றி பெற்ற இராதாகிருஸ்ணன் ராஜாராம், பிரத்தியேக செயலாளர் இரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக் கையில்
மத்திய மாகாண சபை தேர்தலில் நாம் தனித்து போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளோம். இதன் மூலம் நாம் ஆளும் கட்சியுடன் இணைந்து செயல்படுவதா அல்லது எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வதா என்ற தீர்மானத்தை எடுக்க முடியும்.
அதற்கான அங்கீகாரத்தை மக்கள் எமக்கு வழங்கியுள்ளார்கள். ஆனால் நாம் எமது மக்களின் நன்மை கருதியும் காலத்தின் தேவை கருதியும் அரசாங்கத்துடன் இணைந்து மத்திய மாகாண சபையில் செயல்படுவதென ¨தீர்மானித்துள்ளோம்.
கடந்த வருடத்தில் 121 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்களை எமது மக்களுக்காக முன்னெடுத்துள்ளேன்.
பல பாதைகளை காபட் இட்டு புனரமைப்பு செய்துள்ளேன். இதற்கெல்லாம் காரணம் நான் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதே. நாம் தேர்தலில் வாக்கு கேட்பது எமது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே அதைவிடுத்து எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு குறைகளை சுட்டிக்காட்டுவதற்சகாகவல்ல. ஜனாதிபதி எமக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக் முழுமையான சந்தர்ப்பத்தை வழங்கி வருகின்றார்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம் என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த மலையக மக்கள் முன்னணி சார்பில் வெற்றி பெற்ற இராதாகிருஸ்ணன் ராஜாராம்.
இந்த வெற்றியின் மூலம் இன்னும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கின்றேன். கட்சி பேதங்களை மறந்து அனைவருக்கும் எனது சேவை சென்றடைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
மாகாண சபையின் மூலம் கிடைக்க வேண்டிய அபிவிருத்திகளையும் வேலைத்திட்டங்களையும் அனைவருக்கும் கிடைக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன். நாம் ஆளும் கட்சியுடன் செயற்பட தீர்மானித்துள்ளதால் அமைச்சர்கள் மூலமாகவும் முதலமைச்சர் ஊடாகவும் அதிகளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என எதிர் பார்க்கின்றேன்.
»»  (மேலும்)

| |

சங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன்!! த.தே.கூ பதவிப்போர் உச்சக்கட்டமா?

வட மாகாண சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர் மட்ட கூட்டம் இன்று பின்னேரம் யாழ்ப்பாணத்தில் உதயன் விருந்தினர் விடுதியில் மூடிய அறைக்குள் பலத்த சச்சரவுகளுக்கு மத்தியில் இடம்பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தனை இங்கு காண முடியவில்லை.
 
சம்பந்தன் முன்கூட்டியே நிலைமையை யூகித்து வராமலேயே நழுவிக் கொண்டாரா? அல்லது ஓரம் கட்டப்பட்டு இருக்கின்றாரா? என்பது தெரியவில்லை. ஆனால் முதலமைச்சராக தெரிவாகி உள்ள சி. வி. விக்னேஸ்வரனே கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
 
 
போனஸ் ஆசனங்கள் மற்றும் அமைச்சு ஆசனங்கள் ஆகியவற்றின் நியமனம் குறித்து இங்கு மிகவும் சூடான சொற்போர்கள் இடம்பெற்றன.
 
சொற்போர்கள் உக்கிரம் அடைந்தபோது தேசியப் பட்டியல் எம். பி எம். ஏ. சுமந்திரன் சுயம் சுதாகரித்துக் கொண்டு சாக்குப் போக்கு சொல்லி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
 
ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்துக்கு போன விக்னேஸ்வரன் சகாக்களைப் பார்த்து இப்படித்தானா இவ்வளவு காலமும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றனர்? என்று வினவினார். எவரையும் அமைச்சர்களாக நியமிக்காமலேயே தனியாக ஆட்சி அமைக்க தயங்கவும் மாட்டார் என்று கடுமைத் தொனியில் எச்சரித்தார்.
 
ஈ. பி. ஆர். எல். எப் சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியில் இருந்து விவசாய அமைச்சராக சூழலியலாளர் ஐங்கரநேசன் நியமிக்கப்படுகிறார் என்று விக்னேஸ்வரன் கூற சுரேஸ் பிரேமச்சந்திரன் எம். பிக்கு கோபம் பொத்திக் கொண்டு வந்தது.
 
சொந்த சகோதரர் கலாநிதி சர்வேஸ்வரனுக்கு அமைச்சு பதவி கிடைக்கும் என்கிற கனவிலும், அது கிடைத்தே ஆக வேண்டும் என்கிற வெறியிலும் கொந்தளித்துக் காணப்பட்ட சுரேஸ் எம். பி கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தார்.
 
மாவை சேனாதிராசா எம். பியை பார்க்க பரிதாபமாகவே இருந்தது. குழறினார். கும்பிட்டார். மாகாண அமைச்சர் பதவியில் எதுவுமே இல்லை, இதற்காகவா அடிபடுகின்றீர்கள்? என்று விலக்கு பிடிக்க முயன்றார்.
 
மாகாண அமைச்சர்கள் நியமனம் குறித்து எவ்வித முடிவுக்கும் வராமலேயே கூட்டம் அடுத்த திகதி குறிக்கப்படாமலேயே முடிவுறுத்தப்பட்டது.
 
 
ஆயினும் மிக நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர்  போனஸ் ஆசனங்களை வழங்குவது குறித்து முடிவுக்கு வந்து உள்ளனர் என்று தெரிகின்றது.
 
மன்னாரில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளருக்கும், முல்லைத்தீவில் போட்டியிட்ட மேரி கமலா குணசிங்கத்துக்கும் போனஸ் ஆசனங்களை வழங்குவதாக வெளியில் வேடிக்கை பார்த்து காத்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களுக்கு அறிவித்தார் திரும்பி திடீரென்று வந்து சேர்ந்த சுரேஸ் எம்.பி.
 
மாகாண அமைச்சர்கள் நியமனம் குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
 
இதே நேரம் இவர்களின் இன்றைய கூட்டம் குறித்து ஏற்கனவே அறிந்து வைத்திருந்த நிலையில் வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி முதலமைச்சராக தெரிவாகி உள்ள சி. வி. விக்னேஸ்வரனை சந்திக்கின்றமைக்காக அவசரமாக கொழும்பில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு வந்து கொண்டிருக்கின்றார்.




தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வட மாகாண சபையில் கிடைத்துள்ள இரு போனஸ் ஆசனங்களில் ஒன்றை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி ஐயாவிற்கே வழங்க வேண்டும் எனவும் இவ்வாறு ஆனந்த சங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படாதவிடத்து தீக் குளிப்பு போராட்டம் அல்லது சாகும் வரையிலான உண் ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை என தம்பிராசா (தம்பி) தெரிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.

கிளிநொச்சியில் கூட்டணியின் தலைவர் சங்கரி ஐயா திட்டமிட்ட முறையில் தோற்கடிப்பட்டுள்ளார். அவராலேயே கிளிநொச்சி தனி மாவட்டமாக உருவானதை மக்கள் மறந்துவிடாது வாக்களிக்கத் தயாரான வேளையில் சக கட்சியில் போட்டியிட்ட சிலர் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர் வெற்றியைத் தடுத்துவிட்டதாகவும் தம்பிராசா தெரிவித்தார்.

இதேவேளை ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிளிசொச்சியில் தனது யாளுராக்கும்பலைக் கூட்டிய சிறிதரன் அமையப்போகும் மாகாண சபையில் சங்கரிக்கு தேசியப்பட்டியலில் இடம்வழங்கினாலோ , சித்தார்த்தனுக்கு அமைச்சுப்பதவி வழங்கினாலோ தான் பதவியை ராஜனாமா செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். எலும்புத்துண்டு சூப்பி அதன் ருசி கண்ட நாய் என்றும் எலும்புத்துண்டை வெறுக்காது என்பது யாவரும் அறிந்த உண்மை. இந்த நிலையில் இந்த நாய் வித்தியாசமான நாயா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

மேலும் வட மாகாணசபையின் அமைச்சு பதவியொன்றை மூவின மக்களும் செறிந்து வாழும் வவுனியா மாவட்டத்திற்கு வழங்கவேண்டுமென வட மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி.ரி.லிங்கநாதன் தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

பேத்தாழை பொதுநூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு

வாழைச்சேனை பிரதேச சபையால் நடத்தப்படும் பேத்தாழை பொதுநூலகத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான நூல்கள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. 

பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன்,

'நூலகத்தில் புத்தகத்தை அதிகரிப்பதால் மாத்திரம் அதில் வெற்றி காண முடியாது. அங்குள்ள புத்தகங்களை வாசிக்கின்ற பழக்கத்தினை அப்பகுதி மக்கள் அதிகரிப்பதனால் மாத்திரம்தான் சிறந்த நூலகத்தினை உருவாக்க முடியும்.

இங்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இணையத்தள வசதி, சிறுவர்களுக்கான பகுதி, மாணவர்களுக்கான பகுதி, பெரியோருக்கான பகுதி என்று சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பயன்படுத்துபவர்களின் தொகை குறைவாகக் காணப்படுவது கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைக் கூட்டி வந்து இங்குள்ள சிறுவர் பகுதியில் உள்ள கேலிச்சித்திரங்களை  காட்டி படிப்படியாக அவர்களை வாசிப்பு திறமைக்கு மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும். சிறுவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குவதில் கூடிய பங்களிப்பு பெற்றோருக்கு உள்ளது.

அறிவியல் ரீதியாக சாதனை படைத்த எவரை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் அவர் வாசிப்புத் துறையில் அதிகம் ஈடுபாடு உடையவராகத்தான் இருந்திருப்பார்.  அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.  எனவே நமது பகுதியில் உள்ள வளத்தினைக் கொண்டு நமது பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உதவுபவர்களாக நாம் ஒவ்வொருவரும் மாற வேண்டும்' என்றார். 
»»  (மேலும்)

9/29/2013

| |

மரண அறிவித்தல்- முருகுப்பிள்ளை நிர்மலன்(நிமோ)

திரு முருகுப்பிள்ளை நிர்மலன்
மலர்வு : 28 பெப்ரவரி 1964 — உதிர்வு : 26 செப்ரெம்பர் 2013
முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை நிர்மலன் அவர்கள் 26-09௨013 வியாழக்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னார், முருகுப்பிள்ளை பொன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,கலா அவர்களின் அன்புக் கணவரும்,அஜிந்தன், அனிகா, அனிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவா, வளர்மதி(லண்டன்), சுமதி(லண்டன்), ராசாத்தி(லண்டன்), வவா(ஜேர்மனி), வபி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தீபக், தீபிக்கா, கெளஷி, நிலோஜன், நிலோஜிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிஷேக், ஆகிதன், பிறதீகா, அகிதன், சுருதிக், சுருதிக்கா, சாருக் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,யூஜின், நகுல், ஜெயந்தி, சிவாணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் . 28.09.2013-அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
வளர்மதி – சகோதரி – லண்டன்
தொடர்புகளுக்கு
வளர்மதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447940404086
வளர்மதி — இலங்கை
செல்லிடப்பேசி:    +94779101155
பவி(தம்பி) — இலங்கை
செல்லிடப்பேசி:    +94776313043
சிவனழகன் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94772172487
»»  (மேலும்)

| |

வாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கு தமிழர்களுக்கு, தமக்கென ஓர் வீட்டை உருவாக்கவேண்டிய தேவையை கடந்த கிழக்கு தேர்தல் உணர்த்தியுள்ளது -

21.09.2013 அன்று நடந்து முடிந்துள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) அளிக்கப்பட்ட வாக்குகளில் 353,595 (78.48%) வாக்குகளைப் பெற்று போனஸ் ஆசனங்கள் இரண்டு உட்பட மொத்தம் 38 ஆசனங்களில் 30 ஆசனங்களை வென்று மூன்றிலிரண்டு பங்குஅறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மீட்சியின் மீது அக்கறை கொண்ட அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட, விரும்பப்பட்ட விடயம் இது. இன்றைய ஈழத் தமிழ்ச் சூழலில் முழுத் தமிழ் உலகும் அகம் மகிழ வேண்டிய நிகழ்வு இது.
ஆளும் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 07 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 01 ஆசனத்தையும் பெற்றிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களைக் கைப்பற்றுவது வடக்கு மாகாணத்தில் சாத்தியமே. வடக்கு மாகாணத் தமிழர்கள் உணர்வுபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் வாக்களித்துள்ளனர் என்பதேபொதுவான மதிப்பீடு.
ஆனால் இது கிழக்கு மாகாணத்தில் சாத்தியமா? இல்லை. எனவே வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான அளவுகோலைக் கிழக்கு மாகாணத்துக்கும் பயன்படுத்த முடியுமா?
இதற்கான விடையைச் சென்ற வருடம் 08.09.2012 அன்று நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து பெறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
கிழக்கு மாகாண சபையின் மொத்த உறுப்பினர்கள் 37 பேர். அதில் தேர்தலில் நேரடியாகத் தெரிவு செய்யப்படுபவர்கள் 35 பேர். 02 போனஸ் ஆசனங்கள். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் தனிக் கட்சியொன்று ஆகக் குறைந்தது தேர்தலில் நேரடியாக 17 ஆசனங்களையாவது (போனஸ் ஆசனங்கள் தவிர) பெற்றாக வேண்டும். இது ஒருபோதும் சாத்தியமில்லை.
ஒட்டு மொத்தமாகக் கிழக்கிலுள்ள தமிழ் முஸ்லிம், சிங்களவாக்காளர்களின் விகிதாசாரத்தை வைத்துப் பார்க்கும் போது கிழக்கில் ஒரேயோரு தமிழ்க் கட்சிபோட்டியிட்டு அக்கட்சிக்குக் கிழக்கில் 100% தமிழர்கள் வாக்களித்தாலும்கூட அத்தமிழ்க் கட்சிதானும் மேற்படி 17 ஆசனங்களைப் பெறச் சாத்தியமே இல்லை.
எனவே கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கைப் போல் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று மாகாண ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் சாத்தியம் எக்காலத்திலும் இல்லை. இதுவே யதார்த்தம்.
சென்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது கிழக்கு மாகாணசபையைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றும் எனஆரம்பத்தில் கூறியது தவறானது என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மொத்தம் 37 ஆசனங்களில் 11 ஆசனங்களையே கைப்பற்ற முடிந்தது.
இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் நோக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறு ஏதாவதொரு கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து தான் ஆட்சியமைக்க முடியும். இதனால் தான் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து முதலமைச்சர் பதவியையும் அவர்களுக்குக் கொடுக்கச் சம்மதித்து ஆட்சியமைப்போம் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறியது. ஆனால் அதுநடைபெறவில்லை. நடந்தது அனைவருக்கும் தெரியும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரை அது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியென்றாலும் சரி தான் அல்லது ஐக்கிய தேசியக் கட்சி யென்றாலும் சரிதான் அல்லது வேறொரு கட்சியென்றாலும் சரிதான் மத்தியில் அதிகாரத்தில் உள்ள ஆளும் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துஅதனால் வரும் ஆதாயங்களைப் பெற்றுக் கொள்ளுமே தவிர தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து எதிர்ப்பு அரசியலை எக்காலத்திலும் முன்னெடுக்கமாட்டாது.
விதிவிலக்காகச் சில வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைத்தால் கூட அது கிழக்குத் தமிழர்களுக்கு எந்த விதமான சமூக, பொருளாதார, அரசியல் நன்மைகளையும் பெற்றுத்தரப் போவதில்லை.
மாறாக வழமை போல் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் மேலாதிக்கமே அங்கு தலைதூக்கும். அது கிழக்குத் தமிழர்களுக்கு உதவப் போவதில்லை.
கிழக்கில் எம்.எஸ்.காரியப்பர் காலத்திலிருந்து எம்.எச்.எம்.அஸ்ரப் காலம் வரையிலானஅறுபது வருடகால அரசியல் அனுபவம் கிழக்குத் தமிழர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளபாடம் இது.
இந்தப் பின்புலத்தில் கிழக்குத் தமிழர்களுக்கு நன்மையளிக்கக் கூடிய மாற்று வழி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்தியில் அதிகாரத்தில் உள்ளஆளும் கட்சியுடன் அது ஐக்கியமக்கள் சுதந்திரக் கட்சியென்றாலும் சரி அல்லது ஐக்கியதேசியக் கட்சியென்றாலும் சரிஅல்லது வேறொரு கட்சியென்றாலும் சரி அத்துடன் கூட்டுச் சேர்வதேயாகும். இதுவும் நடைபெறப் போவதில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை கிழக்கில் சிங்களப் பேரினவாதக் கட்சியொன்றுடன் கூட்டுச் சேர்வதன் மூலம் வடக்கில் தனதுஅரசியல் தளத்தை இழக்க அல்லது புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திடம் தன் செல்வாக்கை இழக்க அது தயாராயில்லை. இந்ந நிலையில் கிழக்குத் தமிழர்கள் கிழக்கைத் தம் வசம் வைத்துக் கொள்ளக் கூடிய மற்றுமொரு மாற்று வழி எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘வைக்கோல் பட்டறை நாய்’போல் நடந்து கொள்ளாமல் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கி விடுவதாகும்.
கடந்ததேர்தலில் (2012), அதற்கு முந்திய முதலாவது கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது (2008) நடந்து கொண்டது போல் பிரிக்கப்பட்டவடக்குக் கிழக்கில் போட்டியிடமாட்டோம் என்ற நிலைப்பாட்டை எடுத்து அத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியதைப் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டிருக்குமானால் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலை கிழக்குத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்க மாட்டாது.
ஏனெனில், மாகாண சபை இனப் பிரச்சனைக்கான தீர்வினை எட்ட தெரிவுக்குழு அமைத்துச் செயற்படும் அரங்கு அல்ல. குறைகள் இருந்தாலும் நடைமுறையில் இருக்கும் 13 வது அரசியல் திட்டத் திருத்தத்தின் மூலம் பெறக்கூடிய அனுகூலங்களைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடியஓர் நிர்வாகப் பொறிமுறையாகும்.
தேசிய அரசியலிலும் சர்வதேச அரசியலிலும்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகள் இராஜதந்திர ரீதியாகக் கொண்டு செல்லப்பட வேண்டுமே தவிர அதற்கான பொருத்தமான தளம் மாகாண சபை அல்ல.
மேலும், தென்னிலங்கை அரசியலில் – இந்துசமுத்திரப் பிராந்திய அரசியலில் – சர்வதேச அரசியலில் ஏற்படும் மாற்றங்களால் எதிர்காலத்தில் சிலவேளை வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டி வந்தால் கூட கிழக்கு கிழக்காக இருந்தால் தானே வடக்குடன் இணைய முடியும். இல்லாத ஒன்றை எப்படி வடக்குடன் இணைக்க முடியும். கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் பண்ண முடியாது.
இனப்பிரச்சினைக்கான அதிகுறைந்த பட்ச அரசியல் தீர்வாக ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட ஒரு மொழிவாரி சுயாட்சிமாநிலம் தான் (வடக்குக்கிழக்கு இணைந்த) அமைய முடியும் என்பதே இக்கட்டுரையாசிரியரின் கருத்தாகும்.
ஆனால் நாம் விரும்புவது வேறு. யதார்த்தம் வேறு. எதிர்காலத்தில் அரசியலமைப்பு ரீதியாகவோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளினூடாகவோ வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைவதற்குரிய சாத்தியப்பாடுகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இந்த நடைமுறை யதார்த்தத்தையும், அரசியல் களநிலையையும் புரிந்து கொண்டு கிழக்கு மாகாண சபையைத் தமிழர்கள் தங்கள் வசம் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்குத் தடையை ஏற்படுத்தாது கிழக்குமாகாணத் தமிழர்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே தீர்மானிப்பதற்கு இடமளித்து எதிர்காலத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கிவிடுவதே அறிவுபூர்வமான இராஜதந்திர அணுகு முறையாகும்.
வடக்குக் கிழக்கு இணைந்த தனிமாகாண சபை மீண்டும் உருவாகும் காலம் வரையாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனைச் செய்ய வேண்டும். இந்த அரசியல் செயற்பாடு நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தீராத நோயொன்றைக் குணப்படுத்தி உயிரொன்றைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சை போன்று தவிர்க்க முடியாததும், விஞ்ஞான பூர்வமானதுமாகும்.
இதனை நடை முறைப்படுத்துவதற்கான மாற்று அரசியல் சிந்தனை – புதியஅரசியல் யுக்தி- பொறிமுறை கிழக்கு மாகாணத் தமிழர்களிடையே இப்போதிருந்தே உருவாகி வளர வேண்டும். ஏனெனில் அழுதும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்றுவரை 65 வருடகால அரசியலைப் பொறுத்தவரை வாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கிலங்கைத் தமிழருக்கு இன்று சொந்த வீடொன்றின் தேவையை 08.09.2012 ல் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் முடிவுகளும், விளைவுகளும் உணர்த்தியுள்ளன.
எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு ஓர் சுயமான மாற்று அரசியல் பாதை (தளம்) தேவை. அந்த மாற்று அரசியல் தளம் என்பது சிங்களப் பேரினவாதக்கட்சியொன்றில் சங்கமமாகி விடுவதல்ல. பதிலாக கிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, அரசில் பிரச்சினைகளின் வடிவங்களைப் பொறுத்துச் சுயமான அரசியல் தளத்தில் நின்று கிழக்குத் தமிழர்களைச் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டை நோக்கி அறிவுபூர்வமாக ஆற்றுப்படுத்தும் பொறிமுறையே ஆகும்.
அப்பொறி முறையானது எந்த இனத்திற்கோ, எந்த மதத்திற்கோ, எந்தப் பிரதேசத்திற்கோ, எந்தக் கட்சிக்கோ எதிரானதல்ல. இத்தகைய பொறிமுறை யொன்றினுள் தற்போது சகல அரசியல் கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் சகல கிழக்குத் தமிழ் அரசியல்வாதிகளும் – கிழக்குத் தமிழர்களிடையேயுள்ள சமூக அக்கறை கொண்ட சகல கல்விமான்களும் -எழுத்தாளர், கலைஞர், ஊடகவியலாளர்களும் -தொழில்சார் நிபுணர்களும், ஆர்வலர்களும் கட்சி அரசியல் போட்டா போட்டிகளுக்கப்பால் மக்களுக்கான அரசியல் கலாசாரமொன்றினைக் கட்டியெழுப்பும் நோக்கமாகக் கொண்டு உள்வாங்கப்படவும் அணிதிரளவும் வேண்டும்.
இப்பொறி முறையினூடாக எதிர்காலத்தில் கிழக்கிலிருந்து மேற்கிளம்பக் கூடிய தமிழ் அரசியல் சக்தியானது ஈழத் தமிழ்த் தேசிய இனத்திற்கு நன்மையளிக்கக் கூடிய பொதுவான வேலைத்திட்டமொன்றின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பங்காளியாக இணைந்து செயற்படவும் தடையேதும் இல்லை.
தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்
»»  (மேலும்)

| |

நிதிமோசடி தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவிசாளர் கைது

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட வெருகல் பிரதேச சபையின் தலைவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஐந்து இலட்சம் ரூபாவுக்காக செல்லுபடியற்ற காசோலைகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாடசாலையொன்றின் மைதானத்தை அமைப்பதற்காக கடந்த வருடம் மண் விநியோகித்த டிப்பர் உரிமையாளருக்கு இந்த காசோலைகள் வழங்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெருகல் பிரதேச சபைத் தலைவர் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான வழக்கு விசாரணை ஒக்டோபர் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

9/28/2013

| |

எமது கடல்எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவப் படகுகள் பறிமுதல் செய்யப்படும்

சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி நம்நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறிப் புகுந்து மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு இனிமேல் தயவுதாட்சண்யம் காண்பிக்கப் போவதில்லை என்று கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை செய்துள்ளார்.
இந்திய மீனவர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் சொற்படி பொம்மலாட்டம் ஆடுவதை நிறுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றக் கூடிய வகையில் யதார்த்தபூர்வமாக சிந்தித்து நடந்துகொண்டால் அவர்களுக்கும் இலங்கை கடற்படை யினருக்கும் இடையில் எக்காரணம் கொண்டும் மோதல்களோ, பகைமை உணர்வோ ஏற்படாது. அதனால் இந்திய மீனவர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் அதிகாரத்தை பெருக்கிக் கொள்ளும் போராட்டத்தில் பகடைக்காய்களாக இருக்கலாகாது.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் நேரடி அல்லது மறைமுக தூண்டு தலின் பேரிலேயே இந்திய மீனவர்கள் தாங்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கையின் கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடித்து வருகிறார்கள். இவர்கள் இத்தகைய மீன் திருட்டை பல தடவைகள் பிரச்சினையின்றி நடத்தினாலும் பலநாள் கள்வன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கு அமைய ஒருநாள் இலங்கைக் கடற்படை வீரர்களிடம் வகையாக மாட்டிக் கொள்வார்கள்.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீன் பிடி படகுகள் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்படும் என்றும் எக்காரணம் கொண்டும் அவை இந்திய மீனவர்களுக்கு திரும்பிக் கொடுக்கப்படாதென்றும் அமைச்சர் ராஜித சேனாராத்ன அறிவித்துள்ளார்.
நாம் இவ்விதம் தங்கள் படகுகளில் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கைது செய்து அவர்களை துன்புறுத்தாமல் உடனடியாக இந்தியாவுக்கு திரும்ப அனுப்பி விடுவோம் ஆனால் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படும் என்று அமைச்சர் மேலும் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த நம் நாட்டு மீனவர்கள் இந்திய மீனவர்கள் இங்கு வந்து திருட்டுத்தனமாக எமது மீன்வளத்தைச் சூறையாடிச் செல்வதனால் பெரும் பொருளாதார கஷ்டநிலையை எதிர்நோக்கி இருக்கின்றார்கள்.
இந்திய மீனவர்கள் இங்கு தொடர்ந்தும் வந்து மீன்பிடிப்பதனால் எமது மீனவர்களின் வாழ்வாதா¡ரம் மோசமான முறையில் பாதிப் புக்குள்ளாவதைத் தடுப்பதற்காக நாம் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டத்தை கண்டிப்பான முறையில் அமுலாக்கப்போவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் அங்குள்ள அதிகாரிகள் தமிழ்நாட்டு மீனவர்கள் எமது கடல்எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிப்பதை வன்மையாக எதிர்த்து அவர்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்ற போதிலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டின் மீனவர் பிரச்சினையை அரசியலாக்குவதற்கு முயற்சி செய்வதாக இந்திய அதிகாரிகள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
இலங்கை கடற்படை கப்பல்கள் இலங்கை இந்திய கடல் எல்லையில் தற்போது அதிகமாக கண்காணிப்பு ரோந்துகளில் ஈடுபட்டு வருகின்ற காரணத்தினால் சமீப காலமாக இந்திய மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் ஊடுருவி வருவது குறைந்திருக்கிறது என்றும் அறிவிக்கப்படுகிறது.
30 ஆண்டுகால யுத்தத்தின் போது நாம்நாட்டு மீனவர்களை எமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஆழமற்ற கடல்பிரதேச த்தில் தரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் வரையில் தான் மீன்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆயினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் கடற்றொழில் அமைச்சரின் தலையீட்டின் மூலம் பாதுகாப்பு அமைச்சு படிப்படியாக எமது கடற் றொழிலாளர்கள் மீதான இந்த தடை உத்தரவை நீக்க ஆரம் பித்தது. இப்போது கடற்றொழிலாளர்களுக்கு எமது கடல் எல்லைக்குள் எங்கும் சென்று மீன் பிடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதேவேளையில் 2018ம் ஆண்டளவில் நம்நாட்டுப் பிரஜைகள் போஷாக்குணவான மீனை நியாயவிலைக்கு வாங்கி 3 வேளை உணவுக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு மகிழ்ச்சிக்குரிய காலம் உதயமாகவுள்ளது. அடுத்த 6 வருடங்களில் இலங்கையில் வருடாந்தம் பிடிக்கப்படும் மீனின் அளவை 8 இலட்சம் தொன்னாக அதிகரிப்பதற்கு மஹிந்த சிந்தனை வேலைதிட்டத்தின் கீழ் சிறந்த அடிதளம் அமைக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கும், நன்னீரில் மீன்பிடித்து வரும் மீன வர்களின் படகுகள், படகுகளுக்கு பயன்படுத்தப்படும் இயந் திரங்கள், எரிபொருள்கள், மீன்பிடி வலைகள் ஆகியவற்றையும் நியாயவிலைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக் கப்படும் என்று கடற்றொழில், நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தமது அமைச்சு கடற்றொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக மீன் உற்பத்தியை பெருக்குவதற்கு எடுத்து வரும் செயற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் இந்த இலக்கை அடையக்கூடிய வகையில் மின் உற்பத்தி அதிகரித்து வருகின்றது என்று தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

இலங்கை-ஈரான் தலைவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேச்சு

வளர்முக நாடுகளுக்கு இணைந்து குரல் கொடுக்கவும் தயார்
இலங்கை மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையில் பலமான நல்லுறவைக் கட்டியெழுப்புதல் மற்றும் வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தல் தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சர்வதேச அரங்குகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து இப்பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது. நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இணைந்து குரலெழுப்புவது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் எதிர்கால பயணத்திற்கு உதவும் எனவும் இதன்போது ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரொஹானி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரொஹானிக்குமிடையிலான இரு தரப்புப் பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது. இப்பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.
ஈரான் அரசாங்கமானது இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் எரிசக்தித் துறைக்கும் வழங்கி வருகின்ற ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஈரானிய ஜனாதிபதிக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். ‘நீங்கள் எமக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பை நாம் மதிக்கின்றோம்’ என இதன்போது ஜனாதிபதியவர்கள் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று தசாப்த கால பயங்கரவாத பாதிப்புகள் பற்றியும் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரான அபி விருத்தி, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியமர்த்தல் மற்றும் முரண்பாடு நிலவிய பிரதேசங்களில் தேர்தல் நடத்தியமை உட்பட நாட்டை இயல்பு நிலைக்கு மீளக் கொண்டுவந்துள்ள நிலைமைகளை ஜனாதி பதியவர்கள் ஈரானிய ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினார். ‘நல்லுறவுகளைப் பேணு வதில் நாம் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகிறோம்’ எனவும் ஜனாதிபதி இதன் போது உறுதிபடத் தெரிவித்தார்.
சர்வதேச அரங்குகளில் இஸ்லாமிய நாடுகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் நன்றி தெரிவித்ததுடன் சர்வதேச அரங்குகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பிலும் இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். தொடர்ச்சியான நட்புறவைப் பேணுவதற்கு ஒருவருக்கொருவர் தொடர்ந்தும் உதவுதல் சிறந்ததாகுமென சுட்டிக்காட்டிய ஈரானிய ஜனாதிபதி, தமது பிராந்தியங்களில் பிரிவினை வாதம் மற்றும் மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதில் நாடுகள் முனைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டளஸ் அழகப்பெரும, ஐ. நா. வின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன்ன உட்பட உயரதிகாரிகள் பலரும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர். ஈரானிய ஜனாதிபதியுடன் ஐ. நா. விற்கான அந்நாட்டின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மொஹமட் கசாயீ உட்பட உயர் மட்ட அதிகாரிகள் பலரும் இச் சந்திப்பில் பங்கேற்றனர்
»»  (மேலும்)

9/27/2013

| |

கல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் கோரிக்கை

மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த செவ்வாயக்கிழமை நடைபெற்ற ஏறாவூர் நகர சபை கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேயவிக்ரமவிடம் புதன்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்ததாக ஏறாவூர் நகர சபை தலைவர் அலிஸாஹீர் மௌலானா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளரின் நடவடிக்கைகளினால் வலயம் பின்னடைவை நோக்கிசென்று கொண்டிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

| |

காணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு

காணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது

உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு

அரச காணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கு உரியதென உச்ச நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்தது. அக்காணிகள் தொடர்பாக செயற்படும் அதிகாரம் மத்திய அரசினால் வழங்கப்பட்டால் மட்டும், அது தொடர்பாகச் செயற்படும் மட்டுப்படுத்தப்பட்ட சில அதிகாரங்கள் மட்டும் மாகாண சபைக்கு உரியதென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன் பிரகாரம் அரச காணியை பயன்படுத்துதல், நிர்வாகம், பராமரிப்பு ஆகியவை மத்திய அரசின் கொள்கை களுக்கும், சட்டப் பிரமாணங்களுக்கும் ஏற்றதாக மேற்கொள்ள மாகாண சபைக்கு இயலுமென்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சட்டத்துக்கு ஏற்ப மாகாண சபைக்கு அந்த மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தை அமுலாக்குவதற்காக அரச காணிகள் தொடர்பாக அதிகாரம் வழங்கப்பட்டாலும் அரச காணிகள் தொடர்பாக செயற்பட ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரம் எந்த வகையிலும் குறையமாட்டா தென்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாகாண சபை அட்டவணைக்கு உரிய காணி தொடர்பாக செயற் படும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தை வழங்கி னாலும் மத்திய அரசிடம் உள்ள சுயாதீன அதிகாரம் அவ்வாறே அமுலாகும். மக்களின் சுயாதீன அதிகாரத்தின் பேரில் அமுலாகும் உச்ச அதிகாரம் கொண்ட பாராளுமன்றம் மூலம் வழங்கப்படும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் அங்கு செயற்படுத்தப்படலாம் என்றும் இந்தத் தீர்ப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் காணி அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே இருக்கிறதென்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தீர்ப்பளித்தார்.
பிரதம நீதியரசர் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தில் அவருடன் நீதியரசர் சிறி பவன் மற்றும் நீதியரசர் ஈவா. வனசுந்தர ஆகிய இருவரும் பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சு தாக்கல் செய்த மேன்முறையீட்டைப் பரிசீலனை செய்த பின்னர் இந்தத் தீர்ப்பை ஏகமனதாக வழங்கியது.
நீதியரசர்கள் மூவரும் வெவ்வேறான தீர்ப்புகளை வழங்கிய போதிலும் மூன்று நீதியரசர்களும் அரசியல் சாசனத்தின் 13வது திருத்தச் சட்டத்தின் படி காணி அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்தனர்.
ராகல, ஹல்கிரன்ஒய, எல்டெபர்ட் தோட்ட சுபிரிடன்ட் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் ஆலோசகரான எஸ். சீ. கே. டி. அல்விஸ் ஆகியோர் இந்த மேன்முறையீட்டை தாக்கல் செய்தனர்.
நீதியரசர் கே. சிறிபவன் இந்த மனு தொடர்பாக வழங்கிய தீர்ப்பில் இறைமை தொடர்பாக பாராளுமன்றம் வழங்கியுள்ள மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் மாகாண சபைக்கு இல்லையெனத் தெரிவித்திருந்தார்.
மாகாண சபை அட்டவணைக்கு இணங்க சொந்தமான காணிகளை பயன்படுத்துதல், நிர்வாகம் பராமரிப்பு ஆகியவற்றின் போது அது தொடர்பாக தேசியக் காணி ஆணைக்குழு தயாரித்த தேசிய கொள்கைக்கு ஏற்ப மாகாண சபை செயற்பட வேண்டும்.
நாட்டில் நிலவும் அரச காணிகள் தொடர்பான தேசிய கொள்கை தயாரிப்பானது ஆணைக் குழுவின் பொறுப்பு என்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச காணிகளில் அவ்வாறு செயற்பட அரசினால் மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கினாலும் அந்த காணிகளின் உரிமை அரசிடமே தொடர்ந்து இருக்கும். அது மாறாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் உயர்ந்த மட்ட மத்திய அதிகாரம் தொடர்பாக தெளிவான குறிப்பு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் இடம்பெற்றிருப்பதாக நீதியரசர் ஈவா வனசுந்தர தமது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். இதன் பிரகாரம் அரசுக்குரிய காணிச் செயற்பாடுகளில் அந்த ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வண்ணம் நாட்டில் நிலவும் சட்டம் பிரமாணங்களை யாப்பின் வரைவுக்குள் செயற்படுத்த மாகாண சபைக்கு நேரிடுமென தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரச காணியில் இருந்து நபர் ஒருவரை அப்புறப்படுத்துவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் அதிகாரம் தமக்கு இல்லையென 2000 ஆண்டு அக்டோபர் 25 ஆம் திகதி கண்டி மாகாண மேல் நீதிமன்றில் வழங்கிய தீர்ப்பையும் ஏகமனதாக உறுதிப்படுத்துவதாக உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு தீர்மானித்துள்ளது.
»»  (மேலும்)

9/26/2013

| |

அணுத்திட்டம் குறித்த பேச்சுக்கு தயாரென ஈரான் ஜனாதிபதி ஐ.நா.வில் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி வரவேற்பு
ஈரானின் அணுத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்கான கால எல்லையை வகுப்பதற்கும் அது குறித்து தீர்வை எட்டுவதற்கும் தயாராகி வருவதாக அந்நாட்டின் புதிய ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி அறிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ. நா. சபையின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிகிழமை உரையாற்றிய ரவ்ஹானி, ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் அத்துமீறிய செயல் என வர்ணித்தார். இதில் இரசாயன ஆயுத உடன் படிக்கைக்கு இணக்கம் தெரிவித்த சிரிய அரசை வரவேற்ற ரவ்ஹானி, அவ்வாறான ஆயுதங்களை பயன் படுத்துவதற்கு கண்டனம் தெரி வித்தார்.
முன்னதாக ஐ. நா.வில் உரை யாற்றிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஈரான் ஜனாதிபதியின் சீர்திருத்த செயற்பாடுகளுக்கு வரவேற்பு தெரிவித்தார். ஈரானின் சர்ச்சைக்குரிய அணுத் திட்டம் குறித்து தீர்வை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிக்கு ஒபாமா வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஈரான் ஜனாதிபதியாகத் தேர்வான ரவ்ஹானி, தமது நாட்டின் சர்வதேச உறவில் வெளிப்படைத் தன்மையைப் பேண வாக்குறுதி அளித்திருந்தார்.
ஈரானின் சர்ச்சைக்குரிய அணு செயற்பாட்டால் அந்நாடு ஐ. நா. மற்றும் மேற்கு நாடுகளின் பல்வேறு தடைகளுக்கும் முகம் கொடுத்து வருகிறது. ஆனால் தனது யுரேனியம் செறிவூட்டும் திட்டம் அமைதியான நோக்கத்தைக் கொண்டது என தெஹ்ரான் தொடர்ந்தும் கூறிவருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உட்பட அதன் கூட்டு நாடுகள் ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்ய முயற்சித்து வருவதாக சந்தேகம் வெளியிடுகின்றன.
ஆனால் “ஈரானின் அச்சுறுத்தல்” என்று கூறப்படுவது வெறும் கற்பனையானது என்று ரவ்ஹானி கூறினார். “ஈரான் பிராந்தியத்திற்கோ உலகுக்கோ அச்சுறுத்தலாக இருக்காது. நாங்கள் அரசுகளை மாற்ற முயற்சிக்கவில்லை. ஈரான் மக்கள் அமைதியான அணு சக்தியை பெறும் உரிமையை மதிக்குமாறே நாம் கோரி வருகிறோம்” என்று அவர் ஐ. நா. வில் கூறினார்.
“பாரிய அழிவை ஏற்படுத்தும் இரசாயன ஆயுதம் மற்றும் ஏனைய ஆயுதங்களுக்கு எமது பாதுகாப்பு திட்டத்தில் இடமில்லை. அது எமது மதக்கொள்கைக்கும் முரணானது. ஈரானின் அமைதியான அணு திட்டத்திற்கு பாதகமான அனைத்து செயற்பாடுகளும் அகற்றப்படும்.” என்றும் அவர் கூறினார்.
எனினும் ஈரான் ஜனாதிபதியின் ஐ. நா. உரையை ஒரு கபட நாடகம் என இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு வர்ணித்துள்ளார். “அவரது உரையில் ஈரான் இராணுவத்தின் அணு செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நடைமுறைச்சாத்தியமான எந்த விளக்கமும் கூறப்படவில்லை. ஐ. நா. பாதுகாப்பு சபையின் தீரமானத்தை கடைப்பிடிப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை” என்று நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே ஐ. நா.வில் உரையாற்றிய ஒபாமா சிரிய இரசாயன ஆயுதங்கள் குறித்து ஐ. நாவில் கடுமையான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பரிந்தரைக்கப்படும் தீர்மானமானது சிரிய அரசு தனது உடன்பாட்டை மீறாமல் செயற்படுவதை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று ஒபாமா கூறினார்.
சிரியாவிடமுள்ள இரசாயன ஆயுதங்களை அழிக்கும் ரஷ்யா- அமெரிக்காவுக்கு இடையில் ஏற்பட்ட உடன்பாட்டுக்கு அமைய அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் சிரியாவின் அனைத்து ஆயுதங்களும் அகற்றப் படவுள்ளன. இது குறித்து மேற்கு நாடுகள் ஐ. நா. பாதுகாப்புச் சபையில் ஐ. நா. சாசனத்தின் 7ஆவது கட்டுரையின் கீழ் தீர்மானம் கொண்டுவர முயற்சிக்கிறது. எனினும் இந்த தீர்மானத்தின் மூலம் சிரியா மீது இராணுவ நடவடிக்கைக்கு வாய்ப்பு ஏற்படுவதால் அதற்கு ரஷ்யா எதிர்ப்பு வெளியிட்டு வருகிறது.
இதில் ஈரான் அணு விவகாரத்தில் அமைதியான தீர்வை அமெரிக்கா எதிர்பார்ப்பதாகக் கூறிய ஒபாமா ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார். முன்னதாக ரவ்ஹானி பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்டேவை சந்தித்து கைலாகு கொடுத்தார். அதன்போது ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்பதை உறுதி செய்யும் என தாம் எதிர்பார்ப்பதாக ஹொலன்டே வலியுறுத்தினார்.
எனினும் ஒபாமாவுக்கும் ரவ்ஹானிக்கும் இடையில் சந்திப்பொன்று ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அது நிகழவில்லை. இந்நிலையில் ஈரானின் அணு செயற்பாடு குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜவாத் சாரிப் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரியை இன்று வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான மிக அரிதான சந்திப்பாக இது கருதப்படுகிறது. இதன்போது ஈரான் வெளியுறவு அமைச்சர் பாதுகாப்புச் சபையின் ஏனைய நான்கு நிரந்தர அங்கத்துவ நாடுகளான பிரிட்டன், சீனா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர்கள் உட்பட ஜெர்மனி வெளியுறவு அமைச்சரையும் சந்திக்கத்திட்டமிட்டுள்ளார்.
»»  (மேலும்)

9/25/2013

| |

இலங்கையில் உலக சுற்றுலா பொருட்காட்சி


2013ஆம் ஆண்டு காமன்வெல்த் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறும் அதேநேரத்தில், உலக வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீடு பற்றிய பொருட்காட்சி இலங்கையில் நடத்தப்படும்.
இலங்கை மனப்பதிவு என்ற பெயரிலான இப்பொருட்காட்சி நவம்பர் 13 முதல் 17ஆம் நாள் கொழும்பு நகரப்புறத்தில் ஒரு கலைக்கண்காட்சி மையத்தில் நடைபெறும் என்று கொழும்புப் பக்கம் என்ற இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
»»  (மேலும்)

| |

பாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 238 பேர் உயிரிழப்பு




செப்டம்பர் 24ஆம் நாள் பாகிஸ்தானின் தென் மேற்குப் பகுதியில் நிகழ்ந்த ரிக்டர் அளவில் 7.7ஆகப் பதிவான கடும் நிலநடுக்கத்தில் குறைந்தது 238 பேர் உயிரிழந்தனர். அதிக மண் வீடுகள் இடிந்தன. இந்நிலநடுக்கத்தால் குவாதர் துறைமுகத்துக்கு அருகிலான கடல் படுகை உயர்ந்து ஒரு புதிய தீவாக உருவாகியுள்ளது என்று அந்நாட்டின் அரசு வெளியிட்ட தகவல் தெரிவித்தது.
நிலநடுக்கத்தின் மையம் பலுச்சிஸ்தான் மாநிலத்து தலைநகர் குவேட்டாவின் தென் மேற்குப் பகுதியிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த அவரான் பிரதேசத்தில் இருக்கின்றன. அவரான் பிரதேசத்தின் 90 விழுக்காடு வீடுகள் இடிந்துள்ளன என்று அப்பிரதேசத்தின் அலுவலர் ஒருவர் கூறினா
»»  (மேலும்)

| |

பாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சீனா கண்டனம்







பாகிஸ்தான் பெஷாவர் நகரிலுள்ள கிரிஸ்துவ தேவாலயத்தில் 22ஆம் நாள் நிகழ்ந்த தாக்குதலைச் சீனா கடுமையாகக் கண்டித்து அதில் பாதிக்கப்பட்டோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது. அனைத்து வடிவங்களிலான பயங்கரவாதத்தையும் சீனா எதிர்க்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹொங்லே 23ஆம் நாள் வலியுறுத்தினார்.


»»  (மேலும்)

| |

புஷெர் அணு மின் நிலையம் ஈரானுக்கு ஒப்படைப்பு



ஈரானிற்கு ரஷியா கட்டியமைத்த முதலாவது அணு மின் நிலையமான புஷேர் அணு மின் நிலையத்தை அந்நாடு 23ஆம் நாள் கையகப்படுத்தியது. ஈரான் மற்றும் ரஷியாவின் தொடர்புடைய வாரியங்கள் நடத்திய ஒப்படைப்பு விழாவுக்குப் பின், இந்நிலையத்தின் முதலாவது மின்னாக்கி அமைப்பு அதிகாரப்பூர்வமாக ஈரான் தொழில் நுட்பப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புஷேர் அணு மின் நிலையத்தின் இயக்கப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் வகையில், ரஷிய நிபுணர்கள் அடுத்த 2 ஆண்டுகள் இந்நிலையத்தில் தங்கி தொழில் நுட்ப ஆலோசனையையும் உதவியையும் வழங்குவர் என்று ஈரான் துணை அரசுத் தலைவரும் அணு ஆற்றல் அமைப்பு தலைவருமான அலி அக்பர் சலேஹி ஒப்படைப்பு விழாவில் கூறினார். புஷேர் அணு மின் நிலையம் ஈரான் மக்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது, ஈரான் மக்களின் 37 ஆண்டுகள் தொடரும் கனவை நிறைவேற்றியுள்ளது. ரஷியாவுடன் ஒத்துழைப்பு மூலம் புதிய அணு மின் நிலையத்தை ஈரான் கட்டியமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
புஷேர் அணு மின் நிலையத்தின் கட்டுமானம் 1976ஆம் ஆண்டு ஜெர்மனியின் சீமென்ஸ் நிறுவனத்தால் துவக்கப்பட்டது. அமெரிக்காவின் எதிர்ப்பு காரணமாக, சீமென்ஸ் நிறுவனம் ஈரானுடனான ஒத்துழைப்பை நிறுத்தியது. 1992ஆம் ஆண்டு பிப்ரவரி, ரஷியாவின் உதவியுடன் இந்நிலையத்தின் கட்டுமானம் மீண்டும் துவங்கியது. ஒப்பந்தப்படி, இந்நிலையம் 1999ஆம் ஆண்டு ஜுலை திங்களில் கட்டிமுடிக்கப்பட வேண்டும். ஆனால் அரசியல், நிதி, தொழில் நுட்பம் உள்ளிட்ட பல காரணங்களால், 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் தான் இந்நிலையம் அதிகாரப்பூர்வமாக இயங்கி மின்சார உற்பத்தியைத் தொடங்கியது.
புஷேர் அணு மின் நிலையம் பல ஆண்டுகளாக சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் கண்டிப்பான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. அதன் ஆக்கப்பணி நோக்கம் பற்றிய சர்ச்சை குறைவு. அணு கழிவுப் பொருட்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படாமல் தவிர்க்கும் வகையில், ரஷியா ஈரான் ஆகிய இரு நாடுகள் உடன்படிக்கை ஒன்றை உருவாக்கியுள்ளன. அதாவது, பயன்படுத்தப்பட்ட எரிபொருள் துண்டுகள் அனைத்தும் ரஷியாவில் கையாளப்பட அவற்றை ரஷியாவுக்கு ஈரான் அனுப்ப வேண்டும்.
ஜப்பானில் நிகழ்ந்த அணு மின் நிலையத்தின் கசிவு விபத்துக்குப் பின், அணு ஆற்றலின் பாதுகாப்பில் பல்வேறு நாடுகள் பெரும் கவனம் செலுத்தி வருகின்றன. தற்போது புஷேர் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு தான் கவனத்தை ஈர்க்கும் முக்கிய அம்சமாகும். முதலில், இந்நிலையத்தின் கட்டுமானக் காலம், 37 ஆண்டுகள் நீளமானது. அதில் சில சாதனங்கள் பழுதடைந்து, விபத்து ஏற்படும் ஆபத்து நிலவுகிறது. இரண்டாவதாக, ஈரான், நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் நாடாகும். இவ்வாண்டு ஏப்ரல் திங்கள் கடும் உரியிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, புஷேர் அணு மின் நிலையத்துக்கு சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அப்போது உள்ளூரிலும் அண்டை நாடுகளில் கூட பதட்ட சூழ்நிலையை ஏற்படுத்தியது. மேலும், 2 ஆண்டுகளுக்கு முன் இந்நிலையத்தின் கணினி அமைப்பு முறை ஸ்டக்ஸ்நெட்(stuxnet) எனும் வைரஸால் தாக்கப்பட்டது. இதுவும் பாதுகாப்பு பற்றிய கவலையை ஏற்படுத்தியது.
»»  (மேலும்)

| |

கென்யாவில் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர படையினர் போராட்டம்

கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள வணிக வளாகத்தில் கடந்த நான்கு தினங்களாக தொடரும் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். குறித்த கட்டிடத்திற்குள் நுழைந்திருக்கும் படையினர் அங்கு தனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தி வருவதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் நேற்று செவ்வாய்க்கிழமை காலையிலும் மேற்படி வெஸ்ட்கேட் கட்டிட தொகுதியிலிருந்து வெடிச்சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டு சத்தங்களும் கேட்டவாறு இருந்ததாக அந்த இடத்திற்கு அருகில் இருப்போர் குறிப்பிட்டுள்ளனர்.
அல் ஷபாப் ஆயுதக் குழு பொறுப்பேற்றுள்ள இந்த முற்றுகை நடவடிக்கையில் குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு 170 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே ஆயுததாரிகளில் இரு அமெரிக்கர்களும் பிரிட்டன் நாட்டு பெண் ஒருவரும் இருப்பதாக கென்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தொலைக்காட்சி செய்திக்கு பேட்டியளித்த கென்ய வெளியுறவு அமைச்சர் அமினா மொஹமட், 18 அல்லது 19 வயதுகள் உடைய சோமாலிய அல்லது அரபு பூர்வீகத்தைக் கொண்ட அமெரிக்கர்களும் பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவரும் தாக்குதல்தாரிகளில் இருப்பதாக குறிப்பிட்டார்.
ஆனால் இந்த தகவல் கென்ய உள்துறை அமைச்சர் முன்னர் வெளியிட்ட தகவலுக்கு முரணாக உள்ளது. உள்துறை அமைச்சரின் தகவலில் தாக்குதல்தாரிகள் அனைவரும் ஆண்கள் என்றும் ஒருசிலர் பெண்கள் போல் ஆடை அணிந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதில் கடந்த 2005 இல் லண்டன் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரின் விதவை மனைவியான சமன்தா லோத்வை என்ற பெண் மேற்படி முற்றுகையில் பங்கேற்றிருப்பதாக ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையிலேயே கென்ய உள்துறை அமைச்சர் பிரிட்டன் பெண் ஒருவரின் தொடர்பு பற்றி தகவல் அளித்துள்ளார்.
எனினும் தாக்குதல்தாரிகள் குறித்த அடையாளம் பற்றி இன்னும் உறுதியாகவில்லை என்றும் அது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பிரிட்டன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்தும் 63 பேர் குறித்து தகவல் இல்லை என கென்ய செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் கட்டிடத்திற்குள் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆயுததாரிகளே எஞ்சி இருப்பதாக சம்பவ இடத்தில் இருக்கும் கென்ய அதிகாரி ஒருவர் நேற்றுக் காலை தெரிவித்திருந்தார்.
அத்துடன் இதுவரை மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப் பதாகவும் 10 பேர் கைது செய்யப்பட்டி ருப்பதாகவும் கென்ய அதிகாரிகள் முன்னர் கூறியிருந்தனர்.
சோமாலியாவில் கென்ய படையினரின் இராணுவ நடவடிக்கைக்கு பழிவாங்கும் முகமாகவே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படுவதாக சோமாலிய இஸ்லாமிய ஆயுதக் குழுவான அல் ஷபாப் குறிப்பிட்டது.
கென்ய உள்துறை அமைச்சர் ஜோசப் ஒலெலென்கு திங்கட்கிழமை இரவு பி.பி. சிக்கு அளித்த தகவலில், முற்றுகையை முடிவுக்கு கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை தொடர்வதாகவும், அது இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாகவும் கூறினார்.
“தீவிரவாதிகள் தப்பிச் சென்றோ அல்லது கட்டிடத்தில் ஒளிந்திருக்கவோ வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய நிலையில் அனைத்து மாடிகளும் எமது கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்களுக்கு தப்பிச் செல்ல எந்த வழியும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
ஆயுததாரிகளிடம் பிடிபட்டிருந்த அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்டிருப்பதாக நம்புவதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை வணிக வளாக பகுதியில் நான்கு பாரிய வெடிப்புகள் கேட்டதாக அருகில் இருக்கும் குடியிருப்பாளர்கள் கூறியிருந்தனர். தொடர்ந்து திங்கட்கிழமை இரவு குறித்த கட்டிடத்தில் இருந்து தீப்பிளம்புகள் மற்றும் புகை மூட்டங்கள் வெளிவந்தன.
கடந்த சனிக்கிழமை 12 முதல் 15 ஆயுததாரிகள் வெஸ்ட்கேட் கட்டிடத் தொகுதிக்குள் ஊடுருவி அங்கிருக்கும் கடைகள் மற்றும் பணியாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 6 பிரிட்டன் நாட்டவர், பிரான்ஸ், கனடா, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, பெரு, இந்தியா, கானா, தென்னாபிரிக்க மற்றும் சீன நாட்டவர்கள் உட்பட குறைந்த 18 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் ஒரு கொடூரமான செயல் என விபரித்திருக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இது தொடர்பில் கென்யாவுக்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்தோருக்கு இரத்ததானம் வழங்க ஆயிரக்கணக்கான கென்ய நாட்டவர்கள் முன்வந்துள்ளனர்.
சோமாலிய அரச படைக்கு உதவும் ஆபிரிக்க ஒன்றிய படைகளில் சுமார் 4000 கென்ய நாட்டு வீரர்கள் இணைந்துள்ளனர். எனினும் இந்த வீரர்களை வாபஸ்பெறும் படி அல் ஷபாப் கென்யாவுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
சோமாலியாவில் இஸ்லாமிய தேசம் ஒன்றை உருவாக்க அல் ஷபாப் போராடி வருகிறது.
தெற்கு சோமாலியாவின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அல் ஷபாப் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரதான நகரங்களில் இருந்து பின்வாங்கியுள்ளது. சோமாலியாவின் ஒருசில கிராமப் பகுதிகள் மாத்திரம் தற்போது அல் ஷபாப் வசமுள்ளது.
»»  (மேலும்)

| |

மாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்திவைப்பு

தேர்தல் மோசடி முறைப்பாட்டையடுத்து நீதிமன்றம் உத்தரவு
மாலைதீவின் இரண் டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. முதல் சுற்று தேர்தலில் மூன்றாம் இடத்தை பிடித்து தோல்வியடைந்த வேட்பாளர் தேர்தல் முறைகேடுகள் குறித்து செய்த முறைப்பாட்டையடுத்தே நேற்று முன்தினம் திங்கட்கிழமை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
மாலைதீவு இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தல் எதிர் வரும் சனிக்கிழமை (செப்டெம்பர் 28) நடத்த அட்ட வணைப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் தேர்தல் முறைகேடு குறித்த தீர்ப்பு வெளியாகும்வரை தேர்தலை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. முதல் சுற்று தேர்தலில் ஜம்ஹ¥ரி கட்சி சார்பில் போட்டியிட்ட சுற்றுலா ஹோட்டல் உரிமையாளரான காசிம் இப்ராஹிம் கடந்த வாரம் தொடுத்த வழக்கில், வாக்காளர் பதிவில் இறந்தவர்கள் அல்லது கற்பனையானவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி தேர்தல் முடிவை ரத்துச் செய்யுமாறு கோரியிருந்தார்.
கடந்த செப்டெம்பர் 7 ஆம் திகதி நடைபெற்ற முதல் சுற்று தேர்தலில் இப்ராஹிம் இரண்டாவது இடத்தை பிடிக்கும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார். மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் றiட் முதல் சுற்றில் 45 வீத வாக்குகளை வென்று முதலிடத்தை பெற்றார். எனினும், அவர் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்கு தேவையான 50 வீத வாக்குகளை வெல்லாததால் தேர்தல் இரண்டாவது சுற்றுக்கு சென்றது. இரண்டாவது சுற்றில் அவர் மாலைதீவின் முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளராக திகழ்ந்த மஹ்மூன் அப்துல் கையூமின் சகோதரர் யாமின் அப்துல் கையூமுடன் போட்டியிட வுள்ளார்.
இந்நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து நiதின் மாலைதீவு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் வீதியில் இறங்கி திட்டமிட்டவாறு தேர்தலை நடத்தும்படி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல் சுற்று தேர்தல் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் நடத்தப்பட்டதை அமெரிக்கா, ஐ.நா. சபை மற்றும் பொதுநலவாய நாடுகள் வரவேற்றிருந்தன.
»»  (மேலும்)

| |

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியதோர் ஆரம்பமாக எடுக்க வேண்டும்

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலின் மூலம் பிரதான எதிர்க்கட்சிகளான இடதுசாரிகளினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் வாக் குகளின் சதவீதம் மற்றும் ஆசனங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியுற்று காணப்பட்ட மையானது அவர்கள் மரணிக்கும் தறுவாயில் உள்ளதையே எடுத்துக் காட்டுகிறது என ஜனநாயக இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது.
ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் வாசு தேவ வெளியிட்டுள்ள அறிக் கையிலேயே மேற்கண்ட வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாகாண சபைத் தேர்தலில் பொதுவான முடிவாக வெளிப்படுத்தப் படுவது என்னவெனில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் கீழ் ஜனநாயகம் செயற்படுவதாகும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதனை புதியதோர் ஆரம்பமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு ள்ளதாவது,
மூன்று மாகாணங்களிலும் இடம்பெற்ற தேர்தலின் முடிவானது பொதுவாக வெளிப்படுத்துவது யாதெனில் நாட்டு மக்களின் எண்ணங்களானது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மீதே காணப்படுகிறது என்பதாகும்.
சரத் பொன்சேகா அவர்களின் தலைமையிலான ஜனநாயக கட்சியானது வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மூன்று ஆசனங்களை பெற்றுக் கொண்டமையினால் மக்கள் விடுதலை முன்னணி இடமற்றுப் போயுள்ளதானது, விசேட அம்சமாகும்.
வட மாகாணத்தில் சகல மாவட்டங் களிலும் தமிழ் கூட்டமைப்பானது 2/3ற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளமையின் மூலம் தெளிவாவது யாதெனில் அப்பிரதேசங்களில் தமிழ் தேசிய உணர்வானது அதிகமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளமையாகும். கடந்த 3 வருடங்களாக அரசினால் செலவீனங்களை மேற்கொண்டு செயற்படுத்தப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் இதற்கு முகம் கொடுக்க போதுமானதாக இல்லாமையானது தெளிவாகின்றது. 2011ல் இடம்பெற்ற உள்ளூர் ஆட்சி தேர்தலின் போது வட மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையானது இம்முறை குறைவடைய காரணம் என்பதை நாம் உண்மையில் பரிசீலித்து பார்ப்பது அவசியமாகும்.
யுத்தத்துக்கு பின்னே உள்ள காலத்தில் வடபுலத்து மக்கள் சிங்கள மேலாதிக்கத்தின் அடிமைகள் என்ற மனோ நிலையிலிருந்து மாறுபட்ட நிலையில் சுதந்திரமான வாக்கெடுப்பின் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் பேரினவாதிகளின் இந்த பிழையான கருத்தை முறியடித்துள்ளனர். மேற்படி முடிவுகள் அரசின் சமூக பொருளாதார சீர்திருத்தங்கள் மூலமாக வடபுல மக்களுக்கு பலன்களை பெற்றுக் கொடுப்பது அரசின் பொறுப்பாகும். அதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசுடன் இணைந்து செயற்படும் பங்காளிகளாக ஆக்குவதனை குறிக்கோளாக கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக ஒன்றிணைந்த மத்திய அரசின் நிர்வாகத்தினால் தற்போது மாகாண சபைகளுக்கு பெற்றுக் கொடுத்துள்ள அதிகாரங்களை வடக்கிற்கும் வழங்கி அம்மாகாண சபையுடன் ஒத்துழைத்து செயற்படும் ஆளுநர் ஒருவரை தெரிந்தெடுப்பது அவசியமாகும்.
இச்சூழ்நிலையின் கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையில் வடக்கு மாகாண சபைக்கு பெரும்பான்மை யாக நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளினதும் எதிர்க்கட்சியினதும் பொறுப்புக்களாக ஐக்கிய இலங்கையை ஏற்படுத்துவதற்கு அதிகாரங்களை பெற்றெடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்பதை நாம் அவதானிக்கின்றோம்.
இந்த மாகாண சபைத் தேர்தலில் பொதுவான முடிவாக வெளிப்படுத்துவது சுதந்திர முன்னணி அரசின் கீழ் ஜனநாயகமானது செயற்படுவதாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பானது இதனை புதியதோர் ஆரம்பமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
»»  (மேலும்)

| |

உலக நாச்சியின் சிலை உடைப்பு - வன்மையாக கண்டிக்கின்றோம் ! பூ.பிரசாந்தன்



உலக நாச்சியின் சிலை உடைப்பு - வன்மையாக கண்டிக்கின்றோம் ! பூ.பிரசாந்தன்
ஆரையம்பதி பிரதான வீதியில் பொதுச் சந்தையின் முன்பாக நிர்மானிக்கப்பட்டிருந்த கி.மு 315ம் நூற்றாண்டளவில் வாழ்ந்த மட்டக்களப்பின் முதல் சிற்றரசி உலக நாச்சியின் திருவுருவச்சிலை 23.09.2013ம் திகதி நள்ளிரவு 11.45 மணியளவில் ஓட்டமாவடி கடதாசி ஆலை வீதியைச் சேர்ந்தவர் என தன்னை அடையாப்படுத்தியுள்ள நியாஸ் என்பவர் உடைத்து சேதப்படுத்திக் கொண்டிருந்த வேளையில் காத்தான்குடி பொலிசாரின் நடமாடும் பாதுகாப்பு பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர். இதற்காக காத்தான்குடி காவல் துறையினை பாராட்டுவதுடன் இச்சிலை உடைப்பின் பிண்ணனியில் உள்ளவர்களை அடையாளப்படுத்தும்படியும் பொலிசாரினை கோரியுள்ளோம்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் கதருவெலயில் இருந்து பஸ்சில் புறப்பட்டு தனது கிராமமான ஓட்டமாவடி தெரியாமல் ஆரையம்பதிக்கு வந்திறங்கியதாக குறிப்பிடப்படும் வாய் முறைப்பாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை காரணம்  கதுருவெலயில் இருந்து ஆரையம்பதிக்கு வரும் வழியிலேயே ஓட்டமாவடி உள்ளது. எனவே குறித்த சிலை உடைப்பு ஆரையம்பதி மீது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட செயலாக இருக்குமோ என சந்தேகம் கொள்ளத் தோன்றுகின்றது.
அண்மைக்காலமாக ஆரையம்பதி மீதான காணி சுவிகரிப்பு அடக்கு முறைகள் மிகத் துரிதமாகவும்  பலவந்தமாகவும் நடத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக பல அதிகாரிகளிடம் குறிப்பிட்டும் எந்தப் பயனும் இல்லை என்பதனையும் இங்கு சுட்டிக்காட்டுவதுடன்,
10.01.2012ம் திகதி ஆரையம்பதி காத்தான்குடி எல்லையில் அமைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தரின் திருவுருவச்சிலையும் இவ்வாறே திட்டமிட்டு உடைக்கப்பட்டது. இவ்வாறானா நடவடிக்கைகள் முஸ்லீம்கள் மீது தமிழர்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலையை மீண்டும் தோற்றுவித்து விடும் என்பதனை உணர்ந்து இது போன்ற ஒரு சில குழுக்களின் விசமத் தனங்களை சம்பந்தப்பட்ட சமுகத் தலைவர்கள் தட்டிக் கேட்க முன்வர வேண்டும்.
மேற்படி செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன் எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான சமுகங்களுக்கு இடையேயான முரண்பாட்டு செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளப்படுத்துவதுடன் மக்களும் குளப்பமடையாது பொறுமை காக்க வேண்டும் எனவும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான திரு.பூ.பிரசாந்தன் தெரிவித்தார்
»»  (மேலும்)

9/24/2013

| |

விவசாய பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகப் பிரிவில் 2013ஆம்  2014ஆம் ஆண்டுகளுக்கான விவசாய பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டம்  நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இதன்போது கிரான் பிரதேச செயலகப் பிரிவில் 2013ஆம் 2014ஆம் ஆண்டுகளுக்கான பெரும்போகச் செய்கை பண்ணும் திகதி, அறுவடை செய்யும் திகதி, நீர்ப்பாய்ச்சும் நடவடிக்கை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்பட்டன.
மேலும், விவசாயிகளினால் இங்கு முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் தீர்த்து வைக்கப்பட்டன.
கிரான் பிரதேச செயலக மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, கிரான் பிரதேச செயலாளர் எஸ்.தனபாலசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
»»  (மேலும்)

| |

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 2011/2012 கல்வி ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கடந்த 16ம் திகதி திங்கட்கிழமை அன்று 2011/2012 கல்வி ஆண்டின் தொடக்கநிகழ்வும் அனுமதி பெற்ற மாணவர்களுக்கான வரவேற்பும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி.க.பிரேமகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி.கி.கோபிந்தராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு புதிய மாணவர்களை வரவேற்று வாழ்த்தியமை சிறப்பம்சமாகும்.மற்றும் நிறுவக முகாமைத்துவ சபை உறுப்பினர் பேராசிரியர்.சி.மௌனகுரு, நிறுவகத்தின் சிரேஸ்ட உதவிப்பதிவாளர் திரு.எ.ஜே. கிறிஸ்ரி மற்றும் நிறுவகத்தின் விரிவுரையாளர்கள்இ மாணவர்கள்இ கல்விசாரா ஊழியர்கள் இவர்களுடன் புதியமாணவர்களின் பெற்றோர்கள்இ உறவினர்கள் எனப்பலர் கலந்துகொண்டு இத்தொடக்கவிழாவை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தமிழ்பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் நிறுவகத்தின் இன்னிய அணியின் றம்மியமான வாத்திய இசையோடும் நடனத்தோடும் பிரதமஅதிதிகள் மற்றும் புதுமுகமாணவர்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டனர். மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்ட்ட இந்நிகழ்வில் வரவேற்புப்பாடல்,வரவேற்புநடனம் மற்றும் கலைநிகழ்வுகள் என்பன மேடையை அலங்கரித்தன. நிறுவகத்தின் இயங்குநிலை குறித்த தெளிவான பார்வையை தலைமையுரையில் பணிப்பாளர் பதிவு செய்ததைத்தொடர்ந்து பிரதமஅதிதி கலாநிதி.கி.கோபிந்தராஜா அவர்களின் உரையும் ஏனைய அதிதிகளின் உரைகளும்இடம்பெற்றது.
 
»»  (மேலும்)

| |

ஜனாதிபதியுடன் டுவிட்டரில் கேள்வி பதில்





ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 68ஆவது அமர்வில் இன்று உரையாற்றிய பின்னர் நியூயோர்க்கிலிருந்து டுவிட்டர் ஊடாக கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.


நாளை புதன்கிழமை  நியூயோர்க் நேரம் மு.ப 9 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப. 6.30) டுவிட்டர் ஊடாக கேள்வி பதில் நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

அரை மணித்தியாலம் நடைபெறும் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின்போது நியூயோர்க்கிலிருந ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்த வார நடவடிக்கை பற்றியும் ஐ.நா. அமர்வு பற்றியும் கவனம் செலுத்தப்படும்.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இந்த கேள்வி பதில் நிகழ்சியை நெறிப்படுத்துவார்.@PresRajapaksa என்ற ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் ஊடாக இந்த கேள்வி பதில் நிகழ்வு நடைபெறும். 

ஜனாதிபதியிடம் கேள்வி கேட்க ஆர்வமுள்ளவர்கள் தமது கேள்விகளை காலதாமதமின்றி பதிவு செய்யவும். உங்கள் கேள்விகளைப் பதிவு செய்யும்போது #AskMRஎனப் பதிவு செய்ய வேண்டும்
»»  (மேலும்)