8/25/2013

| |

கூட்டமைப்பின் சாதி வெறி அம்பலம் --அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க TNA தலைவர்கள் தீர்மானம் -


வடக்கே வடமராட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியிலுள்ள வலி வடக்கு, கரவெட்டி மற்றும் பருத்தித்துறை பிரதேச சபைகளின் உப தலைவர்கள் இருவரும் தமது ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் சகிதம் ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டனர்.
கொழும்பு வந்திருந்த உப தலைவர்களான மாணிக்கம் லோகசிங்கம், க. சாந்தசொரூபன் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்வைச் சந்தித்துரையா டியதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தமது அங்கத்துவத்தையும் ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் மேட்டுக் குடியினருக்கான முன்னுரிமை வழங்கல் தன்னைப் பாதித்துள்ளதாகத் தெரிவித்த பருத்தித்துறை பிரதேச சபை உப தலைவர் மா. லோகசிங்கம், வடக்கில் இன்று ஐம்பது சதவீதத்திற்கும் மேலாக சிறுபான்மையின மக்களே வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். எந்தவிதமான அபிவிருத்தி களையும் முன்னெடுக்காத நிலையில், அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்திகளுக்கும் முட்டுக் கட்டையாக இருக்கும் தமிழ்க் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் இருப்பதில் பிரயோசனம் இல்லை என்பதால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வந்ததாக மற்று மோர் உப தலைவரான க. சாந்தசொரூபன் தெரிவித்தார். தம்முடன் இணைந்து ஆளும் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்க பல்லாயிரக்கணக்கான மக்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் செய்யும்போது தமக்கு அங்குள்ள தமது பலத்தைக் காட்டுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.