8/14/2013

| |

TNA – PMGG ஒப்பந்தம் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படும் முஸ்லிம்கள் சாந்த புரிந்துனர்வு ஒப்பந்தத்தை வடக்கு தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னால் கிழக்கு மாகாண சபை வேட்பாளர் VTM முபாறக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது வடக்கு தேர்தலுக்கு முன்னர் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் சமூகம் சார்பாக ஒரு புரிந்துனர்வு ஒப்பந்தம் செய்யப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாராயின் அப்வொப்பந்தத்தில் வடக்கு முஸ்லிம்கள் சார்ந்து எவ்வாரான விடயங்கள் உள்ளக்கட்பட்டுள்ளது. என்பதை முதலில் பகிரங்கமாக வெளியிட வேண்டும். அவ்வொப்பந்தம் வெறுமனே ஒரு போனஸ் ஆசனத்தை பெற்றுக் கொண்டு தங்களது தொழில் வளங்களை பெருக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தமா? அல்லது வடக்கு முஸ்லிம்களின் வாழ்வாதாரம், மீள்குடியேற்றம், மற்றும் பாதுகாப்பு, இன ஒற்றுமைக்கான ஒப்பந்தமா? அல்லது கடந்த காலத்தில் ஹக்கீம் பிரபாகரன் செய்து கொண்டு கிழித்தெரியப்பட்பட்ட விருந்தோம்பல் ஒப்பந்தமா? என்பதை மக்களுக்கு பகிரங்கப்படுத்துவது இன்றைய காலத்தின் தேவையாகும்.
கடந்த 1990ம் ஆண்டு வடக்கு முஸ்லிம்கள் இரவோடு இரவாக உடுத்த உடையுடன் புலிகளால் விரட்டியனுப்பட்ட போது அவர்களை மீள்குடியமர்த்துவதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோர்கள் கடந்த 2002ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை செய்ததாக தெரிவித்தனர் ஆனால் அவ்வெப்பந்தத்தில் எவ்வாரான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது என்பதை வெளிப்படுத்தப்படாமல் பிரபாகரனால் கிழித்தெரியப்பட்ட வரலாறு இன்னும் மறையவில்லை. அன்றைய புலிகளின் ஊது குழுலாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று வரைக்கும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சம்மந்தமாக எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் மேற்கொள்ளாததுடன் முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்கள் மீள்குடியமர்த்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளையும் முழுமையாக தடுத்து வருகின்றனர்.
இலங்கையில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் கொள்கையும் நடைமுறையும் இலங்கைக்கு பொறுத்தமற்றது என கூறியதோடு அதனை முழுமையாக விமர்சித்ததுடன் புதிய அரசியல் சித்தாந்தை உருவாக்கி அதன் அடிப்படையில் மக்களை அரசியல் நாகரித்திற்கு கொண்டுவரப் போவதாக கூறி கடந்த 2006ம் ஆண்டு காத்தான்குடி நகர சபைத் தோர்தலில் முதலாவதாக சுவேட்சைக் குழுவாக களமிறங்கி ஒரு உறுப்பினரை பெற்றுக் கொண்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அடுத்து வந்த 2011ம் நகர சபைத் தேர்தலில் இரண்டு உறுப்பினர்களை பெற்றுக் கொண்டனர்.
அத்தேர்தலைத் தொடர்ந்து நாங்கள் அரசியல் உச்சக்கட்ட வளர்ச்சியடைந்து விட்டோம் என்றும் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மாணிக்கின்ற ஒரு ஆசனமாக எமது ஆசனம் அமையும் என்ற மமதையோடு கிழக்குமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகிய போது ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கொமும்பிலிருந்து காத்தான்குடிக்கு வருகை தந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதனை முற்று முழுதாக நிராகரித்து கட்சியே இல்லாத தங்களது கட்சிக் கொள்கையை கட்சிதமாக கூறி சூரா சபையின் மசூராவை மீறுவது தமது இயக்கக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது என ஐக்கிய தேசியக் கட்சியை வழியனுப்பி வைத்து விட்டு தங்களது நல்லாட்சிக்கான மக்கள் இயக்க முக்கியஸ்தர்களில் ஒருவரான சூரா சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வழியனுப்பி வைத்த பெருமை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தையே சாரும்.
அத்தோடு நின்று விடாமல் தங்களது வரட்டுக் கௌரவத்திற்காக நல்லாட்சிக்காக மக்கள் இயக்கம் மீண்டும் ஒரு சுயேற்சைக் குழுவாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிரங்கி சுமார் 5500 வாக்குகளை சிதரடித்து காத்தான்குடிக்கான ஒரு முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை இல்லாது செய்த பெருமையும் புகழும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தையும் அதன் சூரா சபையின் மசூராவையுமே சாரும்.
அத்தேர்தலில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதியைக் பெற்றுக் கொண்டு முஸ்லிம்களின் வாக்குகளை சிதரடித்து முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை குறைப்பதற்கு திரைமறைவில் தமிழ் தேசியக் கூட்மைப்பிற்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் உதவி வருவதாக பல விமர்சனங்கள் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்வைக்கப்பட்ட போது அதனை அப்போது நிராகரித்தனர்.
அன்றைய குற்றச் சாட்டை அடியொட்டியதாக நடைபெறப் போகும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மீண்டும் வடக்கு முஸ்லிம்களின் வாக்குகளை மிகத் தந்திரமாக பெற்றுக் கொடுத்து வடக்கு முஸ்லிம்களின் பிரதி நிதித்துவத்தை குறைப்பதோடு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முழுமையாக தடுத்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை வேட்ப்பாளர் பட்டியலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கொள்கைகளையும் சூரா சபையின் மசூராவையும் புரம்தள்ளி விட்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் புதிய அரசியல் கொள்ளையை உருவாக்கியுள்ள இவர்கள் எதிர் காலத்தில் சிங்கள பெரும்பான்மை மக்கள் வாழும் மாகாணங்களில் ஒரு போனஸ் ஆசனத்தை யாசமாக தருவோம் என்று கூறினால் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஒரு உறுப்பினர் பொதுபல சோனா இயக்கத்தின் வேட்ப்பாளர் பட்டியலில் நிறுதப்படலாம் எனவும் தெரிவித்தார்.