தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் தேசிய பிரகடனத்தினை முன்வைக்கின்ற போது யதார்த்த பூர்வமான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து செயற்பட்டிருந்தால் தமிழ் மாணவர்கள் தட்டாந்தரையிலும் மரத்தடியிலும் உட்கார்ந்து கல்வி கற்கவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்காது என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் குறுமன்வெளி மட்ஃசிவசக்தி வித்தியாலயத்தின் ஆயிரம் பாடசாலைகள் மகிந்தோதய திட்டத்தின் ஆய்வுகூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சி.சந்திரகாந்தன் அவர்கள் 1976 வட்டுக்கோட்டை தமிழ் ஈழ பிரகடனத்தினை செய்யும்போது தமிழ் ஈழம்தான் ஓரே தீர்வு என குறிப்பிட்ட தமிழ் தலைமைகள் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கோடிக்கணக்கான உடமைகள் இழந்த பின்னர் தமிழ் ஈழம், சமஸ்டி, வடகிழக்கு இணைப்பு என்று கூறியவர்கள் கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் ஒற்றுமைக்கு ஆணையைத்தாருங்கள் சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது என்று கூறி கிழக்கு மாகாணசபை அதிகாரங்களையும் இல்லாமல் செய்துவிட்டு எதிர்கட்சியில் குந்திக் கொண்டிருக்கின்றார்கள்.
போதாததிற்கு வடக்கு மாகாணசபை தேர்தலிலும் விக்னஸ்வரனை களம் இறக்கவிட்டு உள்ளுக்குள் அடிபிடிப்படுகின்றார்கள்.
விக்னோஸ்வரன் முதலமைச்சராக வந்தால் கூட எப்படி அபிவிருத்தி செய்யப் போகின்றார்கள். எங்கிருந்து நிதி பெறப் போகின்றார்கள் கடந்த 4 வருடம் கிழக்கு மாகாணசபையை வழி நடத்திய அனுபவம் எனக்கிருக்கிறது. கற்றறிந்து அரசியல் ஞானம் பெற்றோ? பட்டம் பெற்றோ? நான் அரசியலுக்கு வரவில்லை.
எமது மக்களுக்காக களமுனையில் உயிரை தியாகம் செய்யத் துணிந்து போராடியுள்னோம். எமது மக்களுக்காக விடிவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கிழக்கு மாகாணசபையை பொறுப்பேற்ற நாம் மிகத் திருப்தியாக செய்து காட்டிய அனுபவம் எமக்கு இருக்கிறது. நிதி பெறுவதானால் ஆளும் அரசின் பலம் இல்லாது விட்டால்முடியாது.
1978 ம் வருடம் மட்டக்களப்பு மாவட்டம் சூறாவளியால் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து மக்கள் அல்லோலகல்லோப்பட்ட வேளையில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக மட்டக்களப்பில் பிரேமதாசா கலந்துரையாடல் நடத்தியபோது அபிவிருத்திக்காகவே சொல்லின் செல்வர் அமைச்சர் ராஜாதுரை கலந்து கொண்டார் இக் கூட்டத்தில் ஏன் கலந்து கொண்டீர்கள் என்று ராஜதுரை அவர்களுக்கு தமிழ் அரசிக் கட்சியின் செயலாளர். அன்று விளக்கம் கோரி கடிதம் அனுப்பி இருந்தார். இதுவே பின்னாளிலர் இராஜதுரை அவர்கள் கட்சியை விட்டு செல்வதற்கு காரணமாக அமைந்தது.

இன்று அபிவிருத்திக்காக இணைபவாம் என்ற தமிழ் தேசியக் கூட்மைப்பு ஏன் அன்று சிந்திக்கவில்லை? அது மாத்திரம் அன்றி கிழக்கு மாகாண சபை தேர்தலில் சிந்திக்கவில்லை? தமிழ் தேசியக் கூட்டணியினர் சாதி ரீதியாக எம்மை ஒதுக்குகின்றனர். சாதி வேற்றுமை தலைதூக்குகின்றது. என்று வேட்பாளர் தெரிவின் போது முன்னால் தவிசாளர் கந்தையா அவர்கள் வடக்கில் உண்ணா விரதம் இருந்தார். இதற்கு ஊடகங்கள் முன்னுரிமை வழங்காது இருட்டடிப்பு செய்தன. இவை எல்லாம் தனிப்பட்ட சிலரின் அரசியலை வெளிக்காட்டுகின்றதே தவிர தமிழர்களை பற்றி சிந்திக்கும் நிலையினையல்ல என கூட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனவும் கூறிப்பிட்டார்.
தொடர்ந்து தமிழ் மக்கள் ஏமாளிகளாக இருக்கும்வரை இந்த பழுத்த தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ந்து எம்மை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் இனிவருகின்ற காலங்களில் சரியான வழியில் சிந்தித்து தமிழ் மக்களுக்கான நேர்த்தியான பாதையை தோர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான காலம் தற்போது கனிந்துள்ளது. தொடர்ந்து எம்மை ஏமாற்றி அரசியல் செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்;பினர் அவர்களது அரசியல் பின்புலத்தினால் விசேடமாக கிழக்கு தமிழ் மக்களுக்கு எதனை செய்திருக்கின்றார்கள்? இவர்கள் எம் மக்களுக்காக ஏதாவது நல்ல விடயங்களை செய்ய இன்னும் எவவளவு காலம் அவகாசம் கொடுப்பது? மக்களே சிந்தியுங்கள். நீங்கள்தான் இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். இவர்கள் தொடர்ந்து தேர்தல் காலங்களில் உங்கள் இல்லங்கள் நாடி வந்து தமிழ் பாசிசத்தை வெறும் வாக்கு வங்கிக்காக உங்களுக்கு ஊட்டி வாக்கைப் பெற வருவார்கள். இனிவருகின்ற காலங்களில் கிழக்கு தமிழ் மக்கள் உண்மையான சிந்தனையாளர்களாக மாறி சரியான எமக்கான உண்மை அரசியல் பாதையை தேர்ந்தெடுக்க உறுதி பூண வேண்டும் எனவும் அவர் தனதுரையிலே குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பபின் மாகாண சபை உறுப்பினர்கள்; அனைவரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் முதல்வரின் உரையினை மிகவும் அவதானத்துடன் இரசித்து கேட்டமை குறிப்பிடத்தக்கது.