8/15/2013

| |

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உள்ளூர் காய்­க­றி­களின் விலைகள் பாரிய வீழ்ச்சி

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உள்ளூர் காய்­கறி வகை­களின் விலை­களில் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது.வெண்­டிக்காய், கத்­த­ரிக்காய், பாவற்காய், பயற்­றங்காய், புடோல் உட்­பட இம்­மா­வட்­டத்தில் உற்­பத்தி செய்­யப்­படும் மரக்­க­றி­களின் விலை­களே பெரு­ம­ளவில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளன.
இதற்­கி­ணங்க மேற்­படி மரக்­கறி வகைகள் ஒரு கிலோ 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்­பனை செய்­யப்­பட்டு வந்­தது. ஆனால் தற்­போது ஒரு கிலோ 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்­பனை செய்­யப்­பட்டு வரு­கின்­றது.
இதே­வேளை, ஒரு கிலோ முருங்­கைக்காய் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை இம்­மா­வட்­டத்தில் விற்­பனை செய்­யப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது
களு­வாஞ்­சிக்­குடி பிர­தேச செய­லகப் பிரிவில் களு­தா­வளை, செட்­டிப்­பா­ளையம், ஓந்­தாச்­சி­மடம், மாங்­காடு மற்றும் குருக்கள் மடம் போன்ற இடங்களில் அதிகளவில் இம்மரக்கறி வகைகள் உற்பத்தியாவது குறிப்பிடத்தக்கது.