ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக் கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் யாழ். விஜயத்தின் போது அங்கு வட மாகாண சபை தேர்தலுக்காக போட் டியிடும் ஏனைய கட்சிகளினது பிரதிநிதிகளைச் சந்திக்காமல் வெறுமனே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி களை மட்டும் சந்தித்துள்ளமை ஏனைய கட்சிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக கருதுகிறேன் என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் தற்போது தேர்தலொன்றுக்கான ஆயத் தங்கள் இடம்பெற்று வரும் நிலையில் களத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் சந்திப்பதே அவர்களுக்கு வழங்கும் சம உரிமையும் தார்மீக பொறுப்பும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கண்டி ஜனமெதுர கேட்போர் கூடத்தில் (27) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே பணிப்பாளர் நாயகம் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்று கையில்: வட மாகாண சபை தேர்தல் முழு சர்வதேச மட்டத்தில் அவதானத்துடன் நோக்கப்படும் வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பை மட்டும் சந்தித்து செல்வது ஒரு குறித்த பிரிவினருக்கு மட்டும் வழங்கப்படும் விளம்பரமாகும். ஆகவே இவ்வாறான இந்த நடவடிக்கையை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே இன்னும் சில தினங்கள் இலங்கையில் தங்கவிருக்கும் மனித உரிமைக்கான ஆணையாளர் இந்த நேரத்தில் குறைந்தது அரை மணி நேரமாவது காலத்தை ஒதுக்கி வட மாகாண சபையில் போட்டியிடும் ஏனைய கட்சிகளையும் அதன் ஒரு சில பிரதிநிதிகளையும் சந்தித்துச் செல்ல நேரமெடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.