8/29/2013

| |

அமைச்சர் வாசு தலைமையில் மட்டக்களப்பில் சமாதான பேரணி


ஒற்றுமை மிக்க சகோதரத்துவத்துடன் இணைந்த ஒரே இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம் எனும் தலைப்பி லான சமாதானப் பேரணியொன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது. தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இந்த பேரணி நடைபெற்றது.
இதில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒற்றுமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. பாஸ்கரன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர், கே. சிவநாதன் உட்பட தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேச நாணயக்காரவின் இணைப்புச் செயலாளர் கலாநிதி எஸ்.
மோகன் உள்ளிட்ட அரச அதிகாரிகள், சமய பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், தமிழ், முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்தப் பேரணி மட்டக்களப்பு கச்சேரி முன்பாக ஆரம்பமாகி மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரத்தடி ஊடாக சென்று மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நிறைவுபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தின் முன்பாக அமைக்கப்பட்ட விஷேட மேடையில் பொதுக் கூட்டமொன்றும் நடைபெற்றது.