மாமனிதர் அஷ்ரபின் பணியினைத் தொடர்வதனாலேயே எனது அரசியல் பணயம் வெற்றி பெற்றுள்ளது என தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
கல்முனை சந்தாங்கேணி மைத்தானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் உரையாற்றும்போதே அமைச்சர் அதாவுல்லா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடாந்து உரையாற்றுகையில்,
"கட்சிகள் காலத்தின் தேவை. முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும்போதே தேசிய ஐக்கிய முன்னணியினை தலைவர் அஷ்ரப் உருவாக்கினார். கட்சியின் பெயர் முக்கியமல்ல. அதன் தலைமைத்துவமும் வழி நடத்தல்களுமே முக்கியமானது. பெரும் தலைவர் அஷ்ரபோடு போராளிகளாக பயணித்து அவரின் பயணத்தின் வழி நடத்தல்களை கற்றுக்கொண்டதன் பயனாகவே இன்று எமது அரசியல் பயணம் வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஏந்தவொரு விடயமாக இருந்தாலும் அது தொடர்பில் நல்ல எண்ணம் வேண்டும். அப்போதுதான் அது சிறந்த வாழ்வை நமக்குத் தரும். எண்ணமே வாழ்க்ககையாக அமைகிறது. ஒரு குடும்பத்தில் 3 ஆண் பிள்ளைகளை பரிபாலிக்க முடியாது எத்தனை பெற்றோர்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறு நமது சொந்தப் பிள்ளைகளிடையே ஏற்படும் சிக்கல்களைக் கூட சரியான முறையில் கையாள முடியாத நாம், மூவின மக்களும் வாழும் இந்த நாட்டில் சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சினைகளை அவசரப்பட்டு கையாள முற்படுவதேன். இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தி, பொது மேடைகளில் வாய்கிழியப் பேசி, பின்னர் அவை எல்லாமே திறக்கப்பட்ட சோடா போத்தலின் நிலையை அடைய வேண்டுமா?
முஸ்லிம்களால் வாய் கிழியப் பேச மாத்திரம்தான் முடியும் என்று நம்மை நாம் பகிரங்கப்படுத்திக் காட்ட வேண்டுமா? அதை விட பேசாமல் இருந்து எவ்வாறு சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற முடியும் என்று சிந்திப்பது மேல் என்று எண்ணுபவன் தான் நான்.
கல்முனைக் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று நினைத்து பல தடவைகள் பல அபிவிருத்தி பணிகளை மேறகொள்ள வந்தபோது அவை தடுக்கப்பட்டன.இருந்தும் இன்றும் நான் இந்த கல்முனைப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து வருகிறோம். இந்த சந்தாங்கேணி மைதானம் அபிவிருத்தி செய்யப்படாது இருப்பது கவலையளிக்கிறது.
இம்மைதானத்தை எல்லோரும் இணைந்து அபிவிருத்தி செய்து இதற்கு மறைந்த தலைவரின் பெரைச் சூட்டுவோம் என்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன். அரசியலுக்காக பிரதேசங்கள் கூறுபடுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். ஒருவர் ஒரு பதவிக்கு வருவதை தீர்மானிப்பது இறைவன் செயல்.
எவர் தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் ஒருவருக்கு பதவி கிடைக்க வேண்டுமென்றால் அது கிடைத்துத்தான் தீரும். நான் கல்முனைக் மக்களிடம் வாக்குக் கேட்கவில்லை. இந்த மண்ணை சுதந்திரமாக அபிவிருத்தி செய்ய விடுங்கள் என்று கேட்கின்றேன்.
30 வருடங்களின் பின் இந்த மைதானத்தில் இந்த இரவுப் பொழுதில் இவ்வாறனா ஒரு கால்ப்பந்தாட்டப்போட்டிப் பரிசளிப்பு விழாவை நடாத்தக் கிடைத்தையிட்டு நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். பயங்கரவாதம் நம்மை எந்தளவுக்கு பாதித்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இன்று அந்த நிலை இல்லை. அமைதியாக வாழ்கின்றோம்.
நமது பிரதேசத்தை நமது பதவிகளினூடாக சுதந்திரமாக அபிவிருத்தி செய்யக்கிடைத்தமை கூட ஒரு விடுதலைதான்.
இந்த கிழக்கு மாகாணம் இந்த அமைதியைக் காண வேண்டுமென்ற கனவோடு நாம் பயணித்தோம். அந்த அமைதியை கடந்த 4 வருடங்களாக நாம் அனுவித்து வருகின்றோம்.அவசரப்பட்டு நமது இளைஞர்களை உணர்ச்சிவசமாக்கி நமது நிம்மதியைக் கெடுக்க முனையாது, எந்தப் பிரச்சினை வந்தாலும் நிதானமாக சிந்தித்து அப்பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முயலவேண்டும்" என்றார்.
பிர்லியன்ட கழகத்தின் தலைவர் ஐ.எல்.சம்சுத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கல்முனை மேயர் சிராஸ் மீராசஹிப், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், ஏ.எம்.றஹிப் மற்றும் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் ஜவாட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.