மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த செல்வக்குமார் வறுமையான குடும்பத்தில் பிறந்து தனது சிறுவயதிலையே தந்தையை இழந்து தாயின் கடின உழைப்புடன் கூடிய அர்ப்பணிப்பினால் தனது முகாமைத்துவ படிப்பினை முடித்தவர். குடும்பத்தில் இவருக்கு இரண்டு சகோதரிகள் இவரது குடும்பமானது வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஒரு குடும்பமாகும்.இவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டமையால் இவருக்கு முதலாவது அறுவைச்சிகிச்சை கடந்த 30.09.20012 அன்று மேற்கொள்ள்ளட்டது.இச் சிகிச்சை ரூபா 10இலட்சம் இவரது குடும்பத்தினரால் அவர்களது சகல வளங்களையும் விற்று ஒரு சிறுநீரகம் மாற்றப்பட்டது.தூரதிஸ்டவசமாக அவரது உடம்பில் அதிகமான கல்சியம் ஆக்ஸலேட் படியத் தொடங்கிவிட்டமையால் மாற்றிய சிறுநீரகங்கம் மீண்டும் அகற்றப்பட்டது .இன்று மீண்டும் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டமையால் உயிருக்கா போராடிக்கொண்டுடிருக்கிறார்.இவருக்கு மீண்டும் அறுவைச்சிகிச்சை மேற்கொள்வதாயின் இந்தியா அப்பலோ மருத்துவ மனையிலே மேற்கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் கூறி விட்டனர்.
அங்கு சென்று சிறுநீரக கல்லிரல் மாற்று சிகிச்சை மேற்கொள்வதாயின் இந்திய ரூபா 27 ரூபாய் தேவைப்படுகிறது.இத்தொகையானது செல்வகுமாரின் குடும்பத்தினரால் முடியாத ஒரு தொகையாகும்.
வாழும் நாட்களை எண்ணி துடிக்கும் செல்வக்குமரின் நிலையை நினைத்து கருணை உள்ளம் கொண்ட எமது புலம்பெயர் உறவுகளே இவர் உயிர் வாழ உதவுங்கள். நீங்கள் ஒவ்வொரும் செல்வக்குமாருக்கு செய்யும்சிறு தொகைப்பணம் கூட அவர் உயிர் வாழும் நாட்களை நீடிக்க உதவும் தொகையாக அமையும் .
பிரான்ஸ் நாட்டில் தளமாக கொண்டியங்கும் பாடுமீன் அபிவிருத்தி சங்கமானது இத்தகவலை எமது புலம்பெயர் உயவுகளுக்கு பணிவுடனும் உரிமையோடும்தெரியபடுத்துகிறது.
உங்களால் முடிந்த சிறு தொகை என்றாலும் கீழே உள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பி உதவுவீர்கள் என்று திடமாக நம்புகிறோம்
Mr. S.Selvakumar
Saving A/C No: 7246294
Branch: Batticaloa
Code No: 012