கிழக்குப் பல்கலைக்கழக 2011/2012 ஆம் கல்வியாண்டுக்கு விஞ்ஞான மற்றும் கலை கலாசார பீடங்களுக்கு அனுமதிக்கபபடடுள்ள 1 ஆம் வருட புதிய மாணவர்களுக்கான விரிவுரைகள் 14.08.2013 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதிவாளர் கே.மகேசன் அறிவித்துள்ளார்.
விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள மேற்படி பீடத்தினைச் சார்ந்த மாணவர்கள் தத்தமது விடுதிகளுக்கு தங்களது பீடங்களின் விரிவுரைகள் ஆரம்பமாகும் திகதிக்கு முதல் நாள் (13.08.2013) அன்று பி.ப 05.00 மணிக்கு முன்னர்; கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, செங்கலடி எனும் விலாசத்திற்குச் சமூகமளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனார்.
மேலதிக விபரங்களுக்கு பீடாதிபதி/ விஞ்ஞான பீடம்: 065- 2240528, பீடாதிபதி/ கலை கலாச்சார பீடம் : 065 -2240165, சிரேஷ்ட உதவிப் பதிவாளர்/பரீட்சைகள் : 065-2240584 , உதவிப் பதிவாளர்/மாணவர் நலன்புரிச்சேவைகள் : 065-2240731 ஆகிய இலங்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் பதிவாளர் அறிவித்துள்ளார்.