8/22/2013

| |

பட்டதாரி பயிலுனர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான திறன் அபிவிருத்திப் பயிற்சிப்பட்டறை நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.
 மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிறைவு நாள் நிகழ்வில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன், உதவி திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.சுதாகரன், எஸ்.முரளிதரன், ஏ.சுதர்சன், எஸ்.கங்காதரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மாவட்ட திட்டமிடல் செயலக த்தின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்ற இப் பயிற்சி நெறியில், 106 பட்டதாரிப் பயிலுனர்கள் கலந்து கொண்டனர். இந்த இறுதி நிகழ்வின் போது, அவர்களுக்கான சான்றிதழ்களும், சீருடைகளும் வழங்கப்பட்டன.