8/19/2013

| |

ஆழம் தெரியாமல் காலை விட்ட விக்கி

வடக்கில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தாம் அதிக விருப்பு வாக் குகளைப் பெறுவதற்காக தமக்கிடையே கோஷ்டி மோதல் களில் உக்கிரமாக ஈடுபட்டு வருவதைக் காண முடிகிறது. ஒருவர் ஒட்டும் போஸ்டருக்கு மேலாக உடனே அடுத்தவர் வந்து தமது போஸ்டர் களை ஒட்டி தமக்கிடையே கைகல ப்பிலும் அவர்கள் ஈடுபட்டு வருவதைப் பரவலாக அவதா னிக்க முடிகிறது. இதில் அதிகமாக தமிழரசுக் கட்சியினரின் வேட்பாளர்களே ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளிடையேயும் பாரிய போட்டி நிலவுவதைக் காண முடிகிறது. வேட்பாளர் தெரிவில் புறக்கணித்தமை, சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் கனடா விஜயம் தொடர்பாக எழுந்துள்ள நிதிச் சர்ச்சைகள் தொடர்பாக சுரேஷ் பிரமச்சந்திரன் தனது அதிருப்தியை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறார்.

தனது அணி வேட்பாளர்கள் தோற்றாலும் பரவாயில்லை தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி அடைய வேண்டும் என்பதில் இவர் கண்ணும் கருத்துமாக இருந்து வருவதாகத் தெரிய வருகிறது. அதேபோன்று கூட்டணிக் கட்சிகளின தலைவர்களான ஆனந்தசங்கரி, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரும் தமது எதிர்ப்பை நேரடியாக வெளிக்காட்டாது தமது வேட்பாளர்கள் மூலமாகச் சாதித்து வருகின்றனர்.

இதேவேளை வீரவசனங்களுடன் தனது பிரசாரத்தை ஆரம்பித்த கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரன் கூட்டுக் கட்சிகளின் உக்கிரமான உட்பூசல் நிலை காரணமாக தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டாது அலுவலகத்திலேயே முடங்கிக் கிடப்பதாகத் தெரியவருகிறது.

மாவை சேனாதிராஜாவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சியின் வடமாகாண உள்ளூர் தலைவர்கள் பலருக்கும் விக்கினேஸ்வரனின் வருகை இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஒன்றாகவே இருந்து வருகிறது.

அத்துடன் மாவை சேனாதிராஜாவும் வெளியே நட்பைக் காட்டினாலும் உள்ளே தனக் கேற்பட்ட அவமானத்தை மறந்துவிடாதவரா கவே செயற்பட்டு வருகிறார். இதனை அவரது இரண்டு தேர்தல் பிரசாரக் கூட்ட உரைகளிலிருந்து தெளிவாகக் காண முடிகிறது.

பட்டம் பதவிக்காக கட்சியின் கொள்கைகளையும் இதுவரை காலமும் கட்டிக் காத்து வந்த ஒற்றுமையையும் சீர்குலைத்துள்ள தமது தமிழ்த் தலைவர்களது நிலை கண்டு தமிழ் மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளதுடன் அரசாங்கக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கவும் முற்பட்டுள்ளனர். அதன் காரண மாகவே ஆளுங்கூட்டணி வேட்பாளர்களது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் திரண்டு வருகை தருவதைக் காணமுடிகிறது.