8/23/2013

| |

எம்.பி.யோகேஸ்வரனின் வேனால் அடிக்கப்பட்ட மாணவி வைத்திய சாலையிலிருந்து வெளியேற்றம்.

கடந்த 17.08.2013 அன்று வாழைச்சேனை புதுக்குடியிருப்பில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களது வாகனம் (PE 9721) விநாயகபுரம் வாழைச்சேனையை சேர்ந்த 18 வயதுடைய மாணவி கே.வரணியா என்ற மாணவியை அடித்து படுகாயங்களுக்கு உள்ளாக்கியது. குறித்த மாணவியை வாழைச்சேனை வைத்திய சாலைக்கு பிள்ளையின் பெற்றோர்கள் கொண்டு சேர்த்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளார்கள். குறித்த மாணவி சிகிச்சை பெற்று கடந்த 20.08.2013 அன்று  வீடு திரும்பினார்.
யோகேஸ்வனை; எம்.பியின் வேனால் அடிபட்ட மாணவி இம்முறை நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவி ஆவார். இம் மாணவி தனக்கு நேர்ந்த விபத்தினால் ஒரு  பாடம் பரீட்சை எழுதவில்லை எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றார்கள். அம்மாணவியின் எதிர்காலம் கேள்விக்குறியடைந்துள்ளது.
குறிப்பு :-
எம்.பி.யோகேஸ்வரனின் வேனை செலுத்திய சாரதி மது போதையில் இருந்ததாக அறியமுடிகிறது. குறித்த சாரதி அருந்திய மதுவானது வெளிநாட்டு ரக உயர்தர மது வகையைச் சார்ந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.பி.யோகேஸ்வரன் அவுஸ்திரேலியாவிலிருந்து வரும்போது அந்த மதுவினை கொண்டுவந்ததாகவும் அறியமுடிகிறது.