8/21/2013

| |

மாகாண அமைச்சர் - விவசாய சம்மேளனம் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்திற்கும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் நஸீர் அஹமட்டிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
மட்டக்களப்பு தாமரைக்கேணியில் அமைந்துள்ள மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன அலுவலகத்தில் சம்மேளனத் தலைவர் வி. ரஞ்சிதமூர்த்தி தலைமையில் சந்திப்பு இடம்பெற்றது.
விவசாயிகள், நன்னீர் மீன்பிடியாளர்கள், கால்நடை வளர்ப்போர், சுற்றுலாத் துறையினர், சிறுகைத் தொழில் உற்பத்தியாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டு தமது குறைநிறைகளை அமைச்சரிடம் எடுத்துக் கூறினார். இந்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுப்பதாக மாகாண அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.