8/20/2013

| |

கிழக்கில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

கிழக்கு மாகாணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான மைதானமொன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை கிழக்கு மாகான முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் நிர்வாக தலைநகரான திருகோணமலையிலேயே இந்த கிரிக்கெட் மைதனாம் நிர்மாணிக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார். இதற்கான முன்னேற்பாடுகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனமும் கிழக்கு மாகாண சபையும் இணைந்து மேற்கொண்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பான ஆரம்ப பேச்சுவாத்தையொன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன பிரதிநிதிகளுக்கும் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதிற்கும் இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.