மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்கா எனும் காந்தி சதுக்கத்தினை அழகு படுத்தும் வேலைகள் நிறைவடையும் நிலைக்கு வந்துள்ளது. மட்டக்களப்பு நகரை அழகுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் நிதியுதவியுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. காந்தி சதுக்கத்தின் காந்தி பூங்காவில் மகாத்மா காந்தியின் உருவச்சிலை அழகாக வடிவமைக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளதுடன் இங்கு வாவியோரம் மக்கள் தமது ஓய்வை கழிப்பதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளன இந்த சது;ககத்தில் பூ மரங்கள் நடப்பட்டுள்ளதுடன் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் இறுதிக்கப்பட்ட புனரமைப்பு வேலைகள் இடம் பெற்றுவருதுடன் மிகவிரைவில் இது பூர்த்தி செய்யப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது.