வறுமை, ஆதரவின்மை, சமூக ரீதியாக ஒடுக்கபட்டவர்களின் நலன்களுக்காகவே நான் போட்டியிடுகின்றேன். அவர்களின் குரலாக இருக்கவே விரும்புகின்றேன். வீடில்லாமல், தொழில் இல்லாமல், மலசலகூட வசதியில்லாமல், பிள்ளைகளுக்கு சரியான கல்வியில்லாமல் ,அடிப்படையான மருத்துவ வசதியில்லாமல், மின்சாரம் இல்லாமல், சரியான, செப்பனான பாதை இல்லாமல், போக்குவரத்து வசதியில்லாமல், குடிநீர் அன்னறாட தேவைகளுக்கு நீர் இல்லாமல் வாழ்பவர்களுக்காகவே நான்செயற்பட விரும்புகிறேன்;.
“பாழ்பட்டு வறுமை மிஞ்சி வாழும் மக்களுக்காக, “காணி நிலம் வேண்டும் பராசக்தி காணிநிலம் வேண்டும்” என்று பாரதி பாடினானே அந்த நிலமற்றவர்களின் நில உரிமையை நிலைநாட்டவேண்டும்
இடம் பெயர்ந்து அகதிகளாக தமது வாழ்நாளில் பெரும் பகுதியை தொலைத்துவிட்ட மக்களின் மீள்குடியேற்றம் ,கண்ணியமான வாழ்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பாடசாலைக்கு செல்ல நேர்த்தியான உடையில்லாமல்,சத்தான உணவில்லாமல், புத்தகம் இல்லாமல் அறிவுத்தாகம் இருந்தும் படிக்க வழியில்லாமல் இருக்கும் பிள்ளைகளின் எதிர்காலம் நம்பிக்கையானதாக அமையவேண்டும்.
சமூகத்தில் ஒதுக்கப்பட்டு, ஓடுக்கப்பட்டு ,அழிக்கப்பட்டு வாழ்வு கந்தலாய் போன மக்களின் நலன்களுக்காக வாழ விரும்புகிறேன்.
‘தனிமனிதன் ஒருவனுக்கு உணவில்லையானால் இந்த ஜகத்தினை அழி;த்திடுவோம’; என்ற பாரதியின்; சத்திய ஆவேசம் நிதர்சனமாவேண்டும்.
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஏழை மேலும் ஏழையாக அநீதியான சமூக அமைப்புமுறை பற்றி அரங்கத்தில் கேள்வி எழுப்ப இத் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றேன்.
‘நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த ஞான செருக்குடன் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாக இருக்க விரும்புகின்றேன்.
இந்த நாடு தமிழ் ,சிங்களம், ,முஸ்லீம் ,மலையகத் தமிழர், பறங்கியர், மலாயர் என் அனைத்து இன சமூகங்களின் நாடாக விளங்க வேண்டும் எல்லோரும் இன்புற்றிருக்கத்தான் இந்த நாடு.
இன , சாதி , பால் ரீதியான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் அரங்கில் கேள்வியெழுப்ப, ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்
அநீதி இழைக்கப்பட்டு ஒளியில்லாமல் இருளில் மூழ்கி கிடக்கும் கிராமங்களுக்கு ஒளியேற்ற வேண்டும்
சிறைகளில் வாழ்பவர்களின் விடுதலைக்காகவும் ,நீண்ட நெடிய யுத்தத்தில் சகலதையும் இழந்த மக்களுக்காகவும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்காவும், ஊனமற்றவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றவும் நான் படுபடுவேன்.
என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் தேர்தலில் இறங்கியிருக்கிறேன்.
ஏழை மக்களுக்கு இருக்க வீடு, பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, நல்ல பாதை, போக்குவரத்து, வசதிகளுடனும் வாழ என்னால் ஆனதைச் செய்வேன்
நஞ்சாகி ,மாசாகிப் போய்கொண்டிருக்கும் எமது சுற்றாடலை புத்துயிர்ப்படைய செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
அகங்கார அதிகார கட்டமைப்புக்குப் பதிலாக மக்களுக்கு எந்நேரமும் சேவையாற்றத் தயராக இருக்கும் ஒரு நட்பான நிர்வாகத்தை எமது பிரதேசங்களில் மேலிருந்து கீழ் வரை ஏற்படுத்த பாடுபடுவேன்.
‘நாம் ஆர்க்கும் குடியல்லோம’; என்ற சுயமரியாதையுடன் கூடிய வாழ்வை மெய்ப்பிக்க அனைத்தையும் மேற்கொள்வேன்.
ஈ.பி.டி.பி, முற்போக்கு ,இடதுசாரி கட்சிகள், பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஏழைகளின் நண்பர்களாக தோழர்களாக இருக்கிறார்கள்.
வேறு சுயமான சமூக ஆர்வலர்கள் இருக்கிறார்கள்.
இங்குள்ள சாதாரண மக்களில் அக்கறையுள்ள தமிழர்கள் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறார்கள்.
இவர்களின் பலருடனும் இணைந்து எனது பணிகளை முன்னெடுப்பேன்.
13வதின் கீழான அதிகாரங்கள் தேய்வடைந்திருந்தாலும் அதனை மீண்டும் உயிர்பிக்க செழுமைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
எனது அனைத்து உழைப்பும் மக்களுக்காகவே.
எனது சின்னம் வெற்றிலை
எனது இலக்கம் 13
ஞானசக்தி ஸ்ரீதரன்