கிளிநொச்சி மாவட்டத்தில் ஏட்டிக்குப் போட்டியாக இரண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சி பழைய வைத்திய சாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி மாவட்ட தமிழர் விடுதலை கூட்டனணியின் அலுவலகம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மாவட்ட தலைமைச் செயலாகம் கிளிநொச்சி என மாற்றப்பட்டு திறக்கப்பட்டு செயற்பாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இதுவரைகாலமும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக கணேசபுரம்பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த தமிழரசு கட்சி கிளிநொச்சி தலைமை அலுவலகமாக இருந்த அறிவகம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாவட்ட தலைமைச் செயலகமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியல் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு மாவட்டத்தில் ஒரே பெயரில் இரண்டு அலுவலகங்கள் இரண்டு துருவங்களாக செயற்பட்டு வருகின்றனர் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்த லட்சணத்தில் இவர்கள் தமிழ் மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணுவார்கள் என நம்பும் மக்களுக்கு ஐயோ கேடு.