தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களது முயற்சியின் பயனால் இன்று மட்/கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது.
வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன், கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், கட்சியின் பிரதி தலைவர் க.யோகவேள், கட்சயின் கிரான் குள அமைப்பாளரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான கந்தசாமி மற்றும் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் ஊhர் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.