8/29/2013

| |

புலிகளால் கடத்தப்பட்ட 5000 பேர் தொடர்பில் மனித உரிமைகள் அமைப்புகள் மௌனம்

609 தமிழர்களின் கதி என்னவானது?
முப்படை, பொலிஸ், பொதுமக்கள் உட்பட சுமார் 5000 பேரை காணவில்லை
கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தின் போது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் முப்படையினர், பொலிஸார், பொதுமக்கள் என சுமார் 5000க்கும் மேற்பட்டவர்கள் புலிகளின் சித்திர வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரிவின் புலனாய்வுத்துறை தெரிவிக்கிறது.
1972 ஆம் ஆண்டிலிருந்தே பொது மக்களை கடத்தும் செயலில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். 1981 களிலிருந்து பாதுகாப்புத்தரப்பினரை கடத்தும் செயலில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். அன்றிலிருந்து 2008 ஆம் ஆண்டு வரையில் ஆட்களை கடத்தும் செயலில் புலிகள் ஈடுபட்டு வந்துள் ளனர்.
பெருந்தொகையானோரை அவர்கள் இவ்வாறு கடத்திச் சென்றுள்ள போதும் அவர்கள் பற்றிய விபரங்களை அறிய முடியவில்லை. பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த 3484 பேரையும், 1189 பொலிஸாரையும், 1175 பொதுமக்களையும் அவர்கள் கடத்தி சென்றுள்ளனர். குறிப்பாக வடக்கு கிழக்கில் கடமையில் ஈடு பட்டிருந்தவர்களையே கடத்தியுள்ளனர்.
புலிகள் இயக்கத்துக்கு பலாத்கார மாக இணைத்துக் கொள்வதற்காக சுமார் 609 பேரை கடத்திச் சென் றுள்ளமையும் பதிவாகியுள்ளது. இது தவிர எல்லைக்கிராமங்களுக்குள் புகுந்து விறகு உடைக்கச் சென்றவர்கள், சேனைக்குச் சென்றவர்கள் என பலரை கடத்திச் சென்றுள்ளனர். புலிகள் அழி த்தொழிக்கப்பட்ட பின்னரும் கடத்தப்பட்டவர்கள் வீட்டுக்கு திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அவர்களது உறவினர்கள் காத்து நிற்கிறார்கள்.
கடத்திக் கொண்டு சென்று அடிமைகளாக நடத்தியது மட்டுமல்ல. சிலரை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளனர் என்பதை தற்போது கைது செய்யப்பட்டுள்ள புலிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட புலி உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கும் போது படைத்தரப்பைச் சேர்ந்த 26 பேரை தடுத்து வைத்து விசாரணை செய்த பின்னர் பல நாட்கள் பட்டினியாக கிடக்க விட்டு பின்னர் அவர்களை சுட்டுக்கொன்று மண்ணெண்ணெய் ஊற்றி சீனியும் போட்டு எரித்து விட்டதாக தெரிவித்திருந்தார்.
பாதுகாப்புப் படைத்தரப்பினரை கைது செய்த புலிகள் அவர்களிடமிருந்து பாதுகாப்பு தரப்பின் தகவல்களை கேட்டு சித்திரவதை செய்தது மட்டுமல்லாமல் தகவல்களை வழங்காதவர்களை மிக மோசமாக அடித்து துன்புறுத்தி படுகொலை செய்துள்ளமையும் புலனாய்வுத்துறைக்கு பதிவாகியுள்ளது. காயமடைந்த புலிகளுக்கு கொடுக்கவென கடத்தப்பட்ட படையினரிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் பலாத்காரமாக இரத்தம் பெற்றுகொண்டுள்ளனர்.
இவ்வாறான மிருகத்தனமான செயல்களில் ஈடுபட்ட புலிகளின் செயல்கள் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் கண்களுக்கு ஏன் புலப்படவில்லை என காணமற்போனவர் களின் அமைப்புகள் கேள்வி எழுப்பு கின்றன. 1981 முதல் 2009 வரையிலான காலப்பகுதியில் யுத்தம் காரணமாக 27,953 படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பொதுமக்களின் 2930 சிங்களவர்களும், 3193 தமிழர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளின் தாக்குதலினால் 3537 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2289 பேர் காயமடைந்துள்ளனர்.
1177 முஸ்லிம்கள் தாக்குதல்களினால் கொல்லப்பட்டுள்ளனர். 916 பேர் காயமடைந்துள்ளனர். 189 பேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.இதன்படி 9652 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 10,052 பேர் காயமடைந்துள்ளனர். 1175 பேர் காணாமற்போயுள்ளனர். புலிகளின் இவ்வாறான செயல் காரணமாக பொதுமக்களுக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும் ஏற்பட்ட இழப்புகள், அழிவுகள் தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கண்டு கொள்ளவும் இல்லை.
ஏன் என்ற கேள்வியை எழுப்பவும் இல்லை. இருப்பினும் புலிகளின் புலம் பெயர் அமைப்புகள் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக மட்டும் கேட்பது சரிதானா? என சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.