8/31/2013

| |

மாமனிதர் அஷ்ரபின் பணியினைத் தொடர்வதனாலேயே எனது அரசியல் பணயம் வெற்றி பெற்றுள்ளது

மாமனிதர் அஷ்ரபின் பணியினைத் தொடர்வதனாலேயே எனது அரசியல் பணயம் வெற்றி பெற்றுள்ளது என தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

கல்முனை சந்தாங்கேணி மைத்தானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் உரையாற்றும்போதே அமைச்சர் அதாவுல்லா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடாந்து உரையாற்றுகையில்,

"கட்சிகள் காலத்தின் தேவை. முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும்போதே தேசிய ஐக்கிய முன்னணியினை தலைவர் அஷ்ரப் உருவாக்கினார். கட்சியின் பெயர் முக்கியமல்ல. அதன் தலைமைத்துவமும் வழி நடத்தல்களுமே  முக்கியமானது. பெரும் தலைவர் அஷ்ரபோடு போராளிகளாக பயணித்து அவரின் பயணத்தின் வழி நடத்தல்களை கற்றுக்கொண்டதன் பயனாகவே இன்று எமது அரசியல் பயணம் வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஏந்தவொரு விடயமாக இருந்தாலும் அது தொடர்பில் நல்ல எண்ணம் வேண்டும். அப்போதுதான் அது சிறந்த வாழ்வை நமக்குத் தரும். எண்ணமே வாழ்க்ககையாக அமைகிறது. ஒரு குடும்பத்தில் 3 ஆண் பிள்ளைகளை பரிபாலிக்க முடியாது எத்தனை பெற்றோர்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

அவ்வாறு நமது சொந்தப் பிள்ளைகளிடையே ஏற்படும் சிக்கல்களைக் கூட சரியான முறையில் கையாள முடியாத நாம், மூவின மக்களும் வாழும் இந்த நாட்டில் சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சினைகளை அவசரப்பட்டு கையாள முற்படுவதேன். இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தி, பொது மேடைகளில் வாய்கிழியப் பேசி, பின்னர் அவை எல்லாமே திறக்கப்பட்ட சோடா போத்தலின் நிலையை அடைய வேண்டுமா?

முஸ்லிம்களால் வாய் கிழியப் பேச மாத்திரம்தான் முடியும் என்று நம்மை நாம் பகிரங்கப்படுத்திக் காட்ட வேண்டுமா? அதை விட பேசாமல் இருந்து எவ்வாறு சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற முடியும் என்று சிந்திப்பது மேல் என்று எண்ணுபவன் தான் நான்.

கல்முனைக் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று நினைத்து பல தடவைகள் பல அபிவிருத்தி பணிகளை மேறகொள்ள வந்தபோது அவை தடுக்கப்பட்டன.இருந்தும் இன்றும் நான் இந்த கல்முனைப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து வருகிறோம். இந்த சந்தாங்கேணி மைதானம் அபிவிருத்தி செய்யப்படாது இருப்பது கவலையளிக்கிறது. 

இம்மைதானத்தை எல்லோரும் இணைந்து அபிவிருத்தி செய்து இதற்கு மறைந்த தலைவரின் பெரைச் சூட்டுவோம் என்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன். அரசியலுக்காக பிரதேசங்கள் கூறுபடுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். ஒருவர் ஒரு பதவிக்கு வருவதை தீர்மானிப்பது இறைவன் செயல். 

எவர் தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் ஒருவருக்கு பதவி கிடைக்க வேண்டுமென்றால் அது கிடைத்துத்தான் தீரும். நான் கல்முனைக் மக்களிடம் வாக்குக் கேட்கவில்லை. இந்த மண்ணை சுதந்திரமாக அபிவிருத்தி செய்ய விடுங்கள் என்று கேட்கின்றேன். 

30 வருடங்களின் பின் இந்த மைதானத்தில் இந்த இரவுப் பொழுதில் இவ்வாறனா ஒரு கால்ப்பந்தாட்டப்போட்டிப் பரிசளிப்பு விழாவை நடாத்தக் கிடைத்தையிட்டு நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். பயங்கரவாதம் நம்மை எந்தளவுக்கு பாதித்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இன்று அந்த நிலை இல்லை. அமைதியாக வாழ்கின்றோம்.

நமது பிரதேசத்தை நமது பதவிகளினூடாக சுதந்திரமாக அபிவிருத்தி செய்யக்கிடைத்தமை கூட ஒரு விடுதலைதான். 
இந்த கிழக்கு மாகாணம் இந்த அமைதியைக் காண வேண்டுமென்ற கனவோடு நாம் பயணித்தோம். அந்த அமைதியை கடந்த 4 வருடங்களாக நாம் அனுவித்து வருகின்றோம்.அவசரப்பட்டு நமது இளைஞர்களை உணர்ச்சிவசமாக்கி நமது நிம்மதியைக் கெடுக்க முனையாது, எந்தப் பிரச்சினை வந்தாலும் நிதானமாக சிந்தித்து அப்பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முயலவேண்டும்" என்றார்.

பிர்லியன்ட கழகத்தின் தலைவர் ஐ.எல்.சம்சுத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கல்முனை மேயர் சிராஸ் மீராசஹிப், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ்,  ஏ.எம்.றஹிப் மற்றும் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் ஜவாட் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.
»»  (மேலும்)

| |

காமுக சுவாமியின் பக்தர்கள் இருவரின் கைகளில் வடக்கு மாகாண நிர்வாகம் சிக்கப்போகின்றது






அந்த காலகட்டத்தில் சுவாமி பிரேமானந்தாவின் லீலைகளை விவரிக்காத நாளே தமிழகப் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்குக் கிடையாது என்ற நிலைமை. சுவாமி பிரேமானந்தாவைப் போன்று வேடமிட்டு நகைச்சுவை நடிகர் செந்தில் பண்ணிய திரைப்படக் கலாட்டாவுக்குப் பெரு வரவேற்பு.

நீதிமன்ற விசாரணைகளின் படி ஆகக்குறைந்தது பதின்மூன்று சிறுமிகளை பிரேமானந்தா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை நிரூபணமாயிற்று. இதில் பல சிறுமிகள் பருவமடைய முன்னரும், பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட சுவாமியால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாயிற்று. பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் அதற்குக் காரணம் சுவாமி பிரேமானந்தாவே என்பதையும் நீதி மன்றத்தில் விஞ்ஞான ஆதரங்களோடு சமர்ப்பித்தனர். 

சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய பாலியல் கொடூரங்களை அறிந்து அதற்கு எதிராகக் கொதித்தெழுந்த ரவி என்ற ஆச்சிரம உதவியாளர் பிரேமானந்தாவினால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம சுற்றாடலிலேயே புதைக்கப்பட்டார். விசாரணைகளின்போது அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. 

பாலியல் வன்புணர்வைத் தாங்கமுடியாமல் ஆச்சிரமத்தை விட்டு ஓட முயன்ற சிறுமிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டு சுவாமியினாலேயே தாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். பொலிஸ், நீதிமன்ற விசாரணைகளின் போது ஆச்சிரமத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு அடுத்த நிலையில் பொறுப்பில் இருந்த மாதாஜி திவ்வியதேவி ராணி என்ற பெண்மணி தலைமறைவானார். சுவாமியின் பாலியல் கொடூரங்களுக்குத் துணை நின்றவர் எனக் கருதப்படும் இந்த அம்மணி இன்னும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாகவே இருக்கின்றார். அவர் கைது செய்யப்படவில்லை. 

நீதிமன்ற விசாரணையை அடுத்து 1997 ஓகஸ்டில் சுவாமி பிரேமானந்தாவுக்கும் அவரது உதவியாளர்கள் ஐவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு எதிரிக்கு இரண்டு வருடச் சிறை கிடைத்தது. சுவாமி உட்பட ஏழு எதிரிகளும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இந்தியப் பணத்தில் 62 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரேமானந்தா செய்த மேன்முறையீடு 2002 டிசெம்பரில் உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு அவருக்கான தண்டனை உறுதிசெய்யப்பட்டது. 2011 பெப்ரவரி 21 இல் தனது 59 ஆவது வயதில் சிறையில் பிரேமானந்தா காலமானார். 
காமுக சுவாமியின் பக்தர்களே இருவரும்

சரி. இந்த பிரேமானந்தா சுவாமிக்கும் இந்த இரண்டு சீ.விக்களுக்கும் என்ன தொடர்பு....?

இந்த இருவருமே அந்த காமுக சுவாமியின் சிஷ்யர்கள் - விசுவாசிகள் - என்பதுதான் முக்கிய அம்சம்.

முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன் எந்தக் கூட்டத்தில் பேசத் தொடங்க முன்னரும் 'குரு பிரம்மா.... குரு தேவா...' என்ற சுலோகத்துடன்தான் தனது பேச்சை ஆரம்பிப்பார். அவர் குரு என்று போற்றுவது இந்த சுவாமி பிரேமானந்தாவைத்தான்.

இன்றும் சீ.வி.விக்னேஸ்வரனின் கொழும்பு வீட்டுக்குச் செல்பவர்கள் அவரது ஹோலில் சுவாமி பிரேமானந்தாவின் படம் தொங்கவிடப்பட்டு மலர்மாலை சாத்தி வணங்கப்படுவதை அவதானிக்கலாம்.

தமிழகம் செல்லும் காலம் எல்லாம் விக்னேஸ்வரன் திருச்சிக்கு செல்லத் தவறுவதில்லை. சிறையில் இருந்த சுவாமி பிரேமானந்தாவை சந்தித்து ஆசி பெறுவதை அவர் வருடாந்த வழக்கமாகவே கைக்கொண்டுவந்தார்.

இந்திய செஷன்ஸ் நீதிமன்றத்தினாலும், பின்னர் உயர்நீதிமன்றத்தினாலும் பாலியல் வன்புணர்வுக் கொடூரங் களுக்காகவும், அடித்துப் படுகொலை செய்த குற்றத்துக்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, மேன்முறையீட்டில் அது உறுதிசெய்யப்பட்ட பின்னரும், அந்தக் குற்றவாளியைக் கடவுளாவும் குருவாகவும் தரிசித்து வணங்கிவரும் ஒருவரின் கைகளில்தான் வடக்கு மாகாண சபை நிர்வாகம் போகப்போகின்றது.

எங்கோ இலங்கை அரசுக்குப் 'பந்தம்' பிடிக்கும் அரசுப்பணியில் இருந்த சீ.வி.விக்கினேஸ்வரனுக்கு இந்த முதலமைச்சர் வேட்பாளர் என்ற அதிர்ஷ்ட அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தது சுவாமி பிரேமானந்தாவின் அருள்தானோ என்பதும் தெரியவில்லை.

திருகோணமலை ஆதிபத்ர காளியை வணங்கும் சம்பந்தனின் கனவில் தோன்றி சீ.வி.விக்கினேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தும்படி அருளாசி வழங்கியவரும் இந்த காமுக சுவாமிதானோ தெரியவில்லை. 

சீ.வி.கே. சிவஞானமும் இந்த சுவாமியின் பக்தர்தான். 1980 களின் முற்பகுதியில் சிவஞானம் யாழ்.மாநகர சபை அலுவலகத்துக்குள் வைத்து புலிகளால் சுட்டுப் படுகாயப்படுத்தப்பட்டார். அச்சமயம் கொழும்புப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த சிவஞானம் 'சுவாமி பிரேமானந்தாவே எனது உயிரைக் காப்பாற்றியவர்' என்று கூறத் தவறவில்லை. பிரேமானந்தாவைப் போற்றிப் புகழ்ந்து சீ.வி.கே.சிவஞானம் வரைந்த ஒரு பக்கக் கட்டுரை எண்பதுகளின் முற்பகுதியில் கொழும்புப் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தது. 

கடைசியாக வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கூட தாமும் சீ.வி.விக்கினேஸ்வரனும் சுவாமி பிரேமானந்தாவின் பக்தர்கள் தாம் என்பதை சாடைமாடையாகக் குறிப்பிட சிவஞானம் தவறவில்லை. 

'எனக்கும் ( சிவஞானத்துக்கும் ) முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சீ.வி.விக்கினேஸ்வரனுக்கும் இடையில் ஏதும் கருத்து வேறுபாடு உள்ளது என்று யாரும் கருதிவிடக் கூடாது. எங்களுக்குள் ஒரு பிரச்சினையுமில்லை. நாங்கள் இருவரும் ஒரே ஆச்சிரமத்தின் பக்தர்கள்தான்' - என்று சிவஞானம் அங்கு குறிப்பிட்டிருந்தார்.

ஆக காமுக சுவாமியின் பக்தர்கள் இருவரின் கைகளில் வடக்கு மாகாண நிர்வாகம் சிக்கப்போகின்றது என்பதுதான் இன்றைய அவல நிலை.

தந்தை செல்வா கூறியமைபோல தமிழினத்தைக் கடவுள் வந்துதான் காப்பாறவேண்டும் என்பது உண்மை. 

ஆனால் அந்தக் கடவுள் சுவாமி பிரேமானந்தா போன்றோரின் வடிவத்தில் வருவார் என்பதுதான் தமிழர்களின் துர்ப்பாக்கியம்....!
ஆருடன்!


நன்றி  இலங்கை நெட் 

»»  (மேலும்)

8/29/2013

| |

தமிழ் கூட்டமைப்பை மாத்திரம் நவநீதம்பிள்ளை சந்தித்தது அநீதி கபே குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக் கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் யாழ். விஜயத்தின் போது அங்கு வட மாகாண சபை தேர்தலுக்காக போட் டியிடும் ஏனைய கட்சிகளினது பிரதிநிதிகளைச் சந்திக்காமல் வெறுமனே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி களை மட்டும் சந்தித்துள்ளமை ஏனைய கட்சிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக கருதுகிறேன் என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் தற்போது தேர்தலொன்றுக்கான ஆயத் தங்கள் இடம்பெற்று வரும் நிலையில் களத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் சந்திப்பதே அவர்களுக்கு வழங்கும் சம உரிமையும் தார்மீக பொறுப்பும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கண்டி ஜனமெதுர கேட்போர் கூடத்தில் (27) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே பணிப்பாளர் நாயகம் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்று கையில்: வட மாகாண சபை தேர்தல் முழு சர்வதேச மட்டத்தில் அவதானத்துடன் நோக்கப்படும் வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பை மட்டும் சந்தித்து செல்வது ஒரு குறித்த பிரிவினருக்கு மட்டும் வழங்கப்படும் விளம்பரமாகும். ஆகவே இவ்வாறான இந்த நடவடிக்கையை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே இன்னும் சில தினங்கள் இலங்கையில் தங்கவிருக்கும் மனித உரிமைக்கான ஆணையாளர் இந்த நேரத்தில் குறைந்தது அரை மணி நேரமாவது காலத்தை ஒதுக்கி வட மாகாண சபையில் போட்டியிடும் ஏனைய கட்சிகளையும் அதன் ஒரு சில பிரதிநிதிகளையும் சந்தித்துச் செல்ல நேரமெடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
»»  (மேலும்)

| |

அமைச்சர் வாசு தலைமையில் மட்டக்களப்பில் சமாதான பேரணி


ஒற்றுமை மிக்க சகோதரத்துவத்துடன் இணைந்த ஒரே இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம் எனும் தலைப்பி லான சமாதானப் பேரணியொன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது. தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இந்த பேரணி நடைபெற்றது.
இதில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒற்றுமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. பாஸ்கரன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர், கே. சிவநாதன் உட்பட தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேச நாணயக்காரவின் இணைப்புச் செயலாளர் கலாநிதி எஸ்.
மோகன் உள்ளிட்ட அரச அதிகாரிகள், சமய பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், தமிழ், முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்தப் பேரணி மட்டக்களப்பு கச்சேரி முன்பாக ஆரம்பமாகி மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரத்தடி ஊடாக சென்று மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நிறைவுபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தின் முன்பாக அமைக்கப்பட்ட விஷேட மேடையில் பொதுக் கூட்டமொன்றும் நடைபெற்றது.
»»  (மேலும்)

| |

புலிகளால் கடத்தப்பட்ட 5000 பேர் தொடர்பில் மனித உரிமைகள் அமைப்புகள் மௌனம்

609 தமிழர்களின் கதி என்னவானது?
முப்படை, பொலிஸ், பொதுமக்கள் உட்பட சுமார் 5000 பேரை காணவில்லை
கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தின் போது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் முப்படையினர், பொலிஸார், பொதுமக்கள் என சுமார் 5000க்கும் மேற்பட்டவர்கள் புலிகளின் சித்திர வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரிவின் புலனாய்வுத்துறை தெரிவிக்கிறது.
1972 ஆம் ஆண்டிலிருந்தே பொது மக்களை கடத்தும் செயலில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். 1981 களிலிருந்து பாதுகாப்புத்தரப்பினரை கடத்தும் செயலில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். அன்றிலிருந்து 2008 ஆம் ஆண்டு வரையில் ஆட்களை கடத்தும் செயலில் புலிகள் ஈடுபட்டு வந்துள் ளனர்.
பெருந்தொகையானோரை அவர்கள் இவ்வாறு கடத்திச் சென்றுள்ள போதும் அவர்கள் பற்றிய விபரங்களை அறிய முடியவில்லை. பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த 3484 பேரையும், 1189 பொலிஸாரையும், 1175 பொதுமக்களையும் அவர்கள் கடத்தி சென்றுள்ளனர். குறிப்பாக வடக்கு கிழக்கில் கடமையில் ஈடு பட்டிருந்தவர்களையே கடத்தியுள்ளனர்.
புலிகள் இயக்கத்துக்கு பலாத்கார மாக இணைத்துக் கொள்வதற்காக சுமார் 609 பேரை கடத்திச் சென் றுள்ளமையும் பதிவாகியுள்ளது. இது தவிர எல்லைக்கிராமங்களுக்குள் புகுந்து விறகு உடைக்கச் சென்றவர்கள், சேனைக்குச் சென்றவர்கள் என பலரை கடத்திச் சென்றுள்ளனர். புலிகள் அழி த்தொழிக்கப்பட்ட பின்னரும் கடத்தப்பட்டவர்கள் வீட்டுக்கு திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அவர்களது உறவினர்கள் காத்து நிற்கிறார்கள்.
கடத்திக் கொண்டு சென்று அடிமைகளாக நடத்தியது மட்டுமல்ல. சிலரை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளனர் என்பதை தற்போது கைது செய்யப்பட்டுள்ள புலிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட புலி உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கும் போது படைத்தரப்பைச் சேர்ந்த 26 பேரை தடுத்து வைத்து விசாரணை செய்த பின்னர் பல நாட்கள் பட்டினியாக கிடக்க விட்டு பின்னர் அவர்களை சுட்டுக்கொன்று மண்ணெண்ணெய் ஊற்றி சீனியும் போட்டு எரித்து விட்டதாக தெரிவித்திருந்தார்.
பாதுகாப்புப் படைத்தரப்பினரை கைது செய்த புலிகள் அவர்களிடமிருந்து பாதுகாப்பு தரப்பின் தகவல்களை கேட்டு சித்திரவதை செய்தது மட்டுமல்லாமல் தகவல்களை வழங்காதவர்களை மிக மோசமாக அடித்து துன்புறுத்தி படுகொலை செய்துள்ளமையும் புலனாய்வுத்துறைக்கு பதிவாகியுள்ளது. காயமடைந்த புலிகளுக்கு கொடுக்கவென கடத்தப்பட்ட படையினரிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் பலாத்காரமாக இரத்தம் பெற்றுகொண்டுள்ளனர்.
இவ்வாறான மிருகத்தனமான செயல்களில் ஈடுபட்ட புலிகளின் செயல்கள் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் கண்களுக்கு ஏன் புலப்படவில்லை என காணமற்போனவர் களின் அமைப்புகள் கேள்வி எழுப்பு கின்றன. 1981 முதல் 2009 வரையிலான காலப்பகுதியில் யுத்தம் காரணமாக 27,953 படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பொதுமக்களின் 2930 சிங்களவர்களும், 3193 தமிழர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளின் தாக்குதலினால் 3537 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2289 பேர் காயமடைந்துள்ளனர்.
1177 முஸ்லிம்கள் தாக்குதல்களினால் கொல்லப்பட்டுள்ளனர். 916 பேர் காயமடைந்துள்ளனர். 189 பேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.இதன்படி 9652 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 10,052 பேர் காயமடைந்துள்ளனர். 1175 பேர் காணாமற்போயுள்ளனர். புலிகளின் இவ்வாறான செயல் காரணமாக பொதுமக்களுக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும் ஏற்பட்ட இழப்புகள், அழிவுகள் தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கண்டு கொள்ளவும் இல்லை.
ஏன் என்ற கேள்வியை எழுப்பவும் இல்லை. இருப்பினும் புலிகளின் புலம் பெயர் அமைப்புகள் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக மட்டும் கேட்பது சரிதானா? என சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
»»  (மேலும்)

| |

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தை பொலிஸாரால் கைது!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையார் இராமநாதன், சுதந்திரக் கட்சியின் சக வேட்பாளர் குமாரு சர்வானந்த் மீது நேற்று இரவு சாவகச்சேரியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடிகாமம் மற்றும் சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிஹேரா தெரிவித்தார்.

இதேவேளை இராமநாதன் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர் தம்பிராசா யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை இன்று ஆரம்பித்திருந்ததுடன், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாணசபை வேட்பாளர்களான மு.றெமீடியஸ், எஸ்.சர்வானந்த், எஸ்.அகிலதாஸ், எஸ்.பொன்னம்பலம் ஆகியோர் இராமநாதன் கைது செய்யப்படாவிடில் தேர்தலிலிருந்து விலகப்போவதாக இன்று மாலை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

8/28/2013

| |

அங்கஜன் சுட்டாரா?அங்கஜனை சுட்டார்களா?முரண்படும் தகவல்கள்

*யாழ் சாவகச்சேரி நகரப் பகுதியில் இன்று மாலை 19.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஆழும் கட்சி ஆதரவாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். மேற்படி துப்பாக்கி பிரயோகம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக உள்ள அங்கஜனின் தந்தை இராமநாதனால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர் குமரசர்வானந்தாவின் ஆதரவாளர் எனத் தெரியவருகின்றது. 


குமரசர்வானந்தா முன்னாள் எம்பி மகேஸ்வரன் மற்றம் அவரது மனைவி விஜயகலா ஆகியயோருக்கு சாரதியாக கடமை புரிந்தவர். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக சாவக்சேரி நகர சபைக்கு தெரிவாகியிருந்தார். தற்போது ஆழும் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ள இவருக்கும் அங்கஜனுக்குமிடையே ஏற்பட்டுள்ள விருப்பு வாக்கு போட்டியே துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணம் எனத் தெரியவருகின்றது:


*யாழ்.குடா நாட்டில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கிடையில் முறுகல் நிலை முற்றியதில், வடக்கின் மேர்வின் சில்வா என வர்ணிக்கப்படும் அங்கஜனின் தந்தை இராமநாதன், சக வேட்பாளரின் ஆதரவாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் இன்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சாவகச்சேரி பிரதேசத்தில் இராணுவத்தினரால் தெரிவு செய்யப்பட்ட சர்வானந்த் என்ற வேட்பாளரின் அலுவலகத்திற்கு முன்பாக, அங்கஜன் இராமநாதனின் ஆதரவாளர்கள் சுமார் 7 பேர் வாகனங்களில் வந்திறங்கியிருக்கின்றனர். இறங்கியது மட்டுமல்லாமல் குறித்த வேட்பாளரின் பெயரை கூறி ஏளனமாக பேசியுள்ளனர். அவர்கள் மட்டுமன்றி அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வந்த கொடிகாமம் பொலிஸாரும், அவ்வாறே நடந்து கொண்டிருக்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர் சர்வானந்தின் ஆதரவாளர்கள் வீதிக்கு வந்து என்ன பிரச்சினை? எதற்காக கூச்சலிடுகிறீர்கள்? என கேட்டவுடன் அங்கஜனின் தந்தை இராமநாதன் வழக்கம்போல், தனது கைத்துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார்.
இதில் சர்வானந்த் என்பரின் ஆதரவாளர் சிறி என்பவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் துப்பாக்கிச் சூட்டை முடித்துக் கொண்டு இராமநாதன் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் போது அவரை பிடிக்க முயன்ற சர்வானந்தின் ஆதரவாளர்கள் மீது கொடிகாமம் பொலிஸார் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனினும் சம்பவம் இடம்பெற்ற பகுதி சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியாகும். எனினும் சர்வானந்தின் ஆட்களே தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அங்கஜன் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
சாவகச்சேரி நகரப்பகுதி, மற்றும் கைதடி பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இரு தரப்பிடமும் துப்பாக்கியும், அதனை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தும் உரிமையும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

சிரியா மீதான இராணுவ தலையீடு குறித்து ரஷ்யா, சீனா எச்சரிக்கை

பிராந்தியத்தில் பேரழிவை ஏற்படுத்துமென கவலை
சிரியா மீதான இராணுவத் தலையீடு குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் சீனாவும் ரஷ்யாவும் புதிதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறான ஒரு தலையீடு பிராந்தியத்திலேயே பேரழிவுச் சூழலை ஏற்படுத்தும் என ரஷ்யா குறிப் பிட்டுள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற இரசாயன தாக்குலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியா மீது தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதற்கான மறுக்க முடியாத ஆதாரம் இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
மறுபுறத்தில் ஐ. நா. வின் இரசாயன ஆயுதம் தொடர்பான நிபுணர் குழு தாக்குதல் இடம்பெற்ற டமஸ்கஸின் புறநகர் பகுதியில் இரண்டாவது நாளாக நேற்றைய தினத்திலும் தனது சோதனைகளை மேற்கொண்டது. இங்கு பயணம் மேற்கொள்ளும் போது ஐ. நா. குழுவின் வாகனம் மீது நேற்று முன்தி னம் ஸ்னைப்பர் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிரியா மீது எதிர்பாராத இராணுவ நடவடிக்கை தொடர்பிலான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிரிய சர்ச்சை தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்டும் முகமாக டேவிட் கெமரூன் நேற்று முன்தினம் தனது விடுமுறையை ரத்துச் செய்து திரும்பியுள்ளார்.
ஆனால் சிரியா விவகாரத்தில் சர்வதேச சமூகம் சர்வதேச சட்டத்தை மதித்து முன் யோசனையுடன் செயற்படுமாறு ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அலக்சாண்டர் லுகஷ்விக் எச்சரித்துள்ளார்.
“பாதுகாப்புச் சபையை மீறி மீண்டும் ஒருமுறை குறுக்குவழியில் இராணுவ தலையீட்டை நியாயப்படுத்தும் செயற்கையான கள நிலவரத்தை உருவாக்கி சிரியாவில் மேலும் மோசமான நிலை ஏற்படுத்தப்படவுள்ளது. இது மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா என பிராந்தியத்திலேயே பேரழிவு சூழலை ஏற்படுத்தும்” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் எச்சரித்தார்.
சிரிய விவகாரம் குறித்த ரஷ்யாவுடனான இராஜதந்திர பேச்சுவார்த்தையை அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை ஒத்திவைத்தது. தற்போதைய இரசாயன தாக்குதல் குறித்த ஆலோசனைகள் முன்னெடுக்கப்படுவதாலேயே இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
எனினும் அமெரிக்காவின் முடிவுக்கு ரஷ்யா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. சிரியா பிரச்சினை குறித்து அரசியல் தீர்வு காண்பதற்கு அமெரிக்காவும் ரஷ்யாவும் இன்று புதன்கிழமை ஹேகில் கூடி பேச்சு வார்த்தை நடத்த, முன்னர் திட்டமிட்டிருந்தது. சிரியா விவாகரத்தில் துருப்புக்களை காட்டி அச்சுறுத்துவதை விட நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவது பயன்தரக்கூடியதாக இருக்கும் என ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர் கென்டி கட்டிலே அறிவுறுத்தியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் கடந்த திங்கட்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சிரிய அரசு இரசாயன தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என கெமரூன் குறிப்பிட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
சீன அரச செய்திச் சேவையான ஷின்ஹோ குறிப்பிடுகையில், ஐ. நா. நிபுணர் குழு சிரியாவில் தனது சோதனையை முடிக்கும் முன்னரே மேற்கு சக்திகள் யார் இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தியது என முடிவு காண முயற்சிக்கிறது என குற்றம் சாட்டி இருந்தது.
ஐ. நா. விஜயம்
கடந்த வாரம் இடம்பெற்ற இரசாயன தாக்குதல் குறித்து சிரிய அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர்.
மருத்துவ நலன்புரி அமைப்பான எம். எஸ். எப். என்ற அமைப்பு, டமஸ்கஸின் மூன்று மருத்துவமனைகளில் இரசாயன தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு நரம்பு வழி நச்சு தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 3,600 பேரளவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 355 பேர் மரணமடைந்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
என்றாலும் இந்தத் தாக்குலுக்கு சிரிய அரசு மீது குற்றம் சுமத்துவதற்கு சிறிதளவான சந்தேகமே இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் இரசாயன தாக்குதலுக்கு உள்ளான சிரியாவின் மேற்கு மாவட்டமான முவதமியாவில் ஐ. நா. நிபுணர்கள் நேற்று முன்தினம் சுமார் மூன்று மணிநேரம் கழித்தனர். இதன் போது அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மற்றும் மருத்துவர்களை சந்தித்து வாக்குமூலம் பெற்றனர். இதில் ஒருசில மாதிரிகளும் சேகரிக்கப்பட்டதாக ஐ. நா. பேச்சாளர் ஒருவர் தகவலளித்தார்.
எனினும் இந்த விசாரணைகளை நடத்த பயணமாகும் போது ஐ. நா. நிபுணர் குழுவின் வாகனங்கள் மீது இனந் தெரியாதோர் ஸ்னைப்பர் தாக்குதல் நடத்தினர். இதனால் தனது பயணத்தை சற்று நேரம் நிறுத்திக்கொண்ட குழு மீண்டும் திட்டமிட்டபடி பயணத்தை ஆரம்பித்தது.
இந்த ஸ்னைப்பர் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்ட ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் இந்தத் தாக்குதல் குறித்து சிரியாவிடம் ஐ. நா. குழுவை அறிவுறுத்தினார்.
சிரிய இரசாயன தாக்குதல் குறித்து அமெரிக்கா தரப்பில் இன்னமும் உறுதியான நிலைப்பாடு எட்டப்படவில்லை. ஆனால் இது ஒரு தார்மீகமற்ற செயல் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஐ. நா. குழுவுக்கு சம்பவம் இடம்பெற்ற இடத்தை ஆய்வு செய்ய அனுமதி அளிக்க தாமதித்தன் மூலம் சிரிய அரசுக்கு இந்த விடயத்தில் மறைப்பதற்கு ஏதோ இருக்கிறது என கெர்ரி சந்தேகம் வெளியிட்டார். “சிரியாவில் கடந்த வாரம் இடம்பெற்றது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனை எந்த முறையிலும் நியாயப்படுத்த முடியாது. உலகில் கெளரவமான மக்கள் மீது உலகில் மிக கொடூரமான ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு இருக்கிறது என ஜனாதிபதி ஒபாமா உறுதியாக நம்புகிறார்” என்று கெர்ரி குறிப்பிட்டார்.
சிரிய பதற்றத்தையொட்டி வொஷிங்டன் தனது யுத்த கப்பலை கிழக்கு மத்திய தரை கடலில் தரித்து வைத்திருப்பதோடு இது தொடர்பில் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் அதன் கூட்டு நாடுகளின் இராணுவ தலைமைகள் ஜார்தானில் கூடி ஆலோசித்தன.
இந்நிலையில் சிரிய இராணுவ தளங்களை இலக்குவைத்து அமெரிக்க கடலினூடே எவுகணைத் தாக்குதல்களை முன்னெடுக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இந்த இரசாயன தாக்குதலை சிரிய அரசு நடத்தியதற்கான ஆதாரம் இல்லை என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கை லவ்ரொவ் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் கூறியிருந்தார். அத்துடன் ஐ. நா. அனுமதி இன்றி இராணுவ நடவடிக்கை எடுப்பது சர்வதேச சட்டத்தை மோசமாக மீறும் செயல் என லவ்ரொவ் எச்சரித்தார்.
சிரியா மீது இராணுவ தலையீட்டுக்கு பாதுகாப்புச் சபையில் அதன் நிரந்தர அங்கத்துவ நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றன. ஆனால் பாரிய மனிதாபிமான தேவைக்காக ஐ. நா. வை மீறி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என பிரிட்டனும் பிரான்ஸ¤ம் எசச்ரித்துள்ளன.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் டொனி பிளாயர் தி டைம்ஸ் பத்திரிகைக்கு எழுதிய பத்தி ஒன்றில், சிரியா மற்றும் எகிப்தில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கு மேற்கு நாடுகள் ஆதரவளிக்காவிட்டால் மத்திய கிழக்கு பேரழிவுக்கு முகம் கொடுக்கும் என விபரித்திருந்தார்.
ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் காரணமாக இதுவரை 100,000 க்கும் அதிகமானவர்கள் பலியாகி இருப்பதாக ஐ. நா. குறிப்பிட்டுள்ளது. இந்த மோதல் காரணமாக 1.7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அகதிகளாக பதிவாகியுள்ளனர்.
»»  (மேலும்)

| |

மட்டக்களப்பு மாவட்ட செயலருக்கு சிறந்த பெண்மணி விருது

சிறந்த பெண்­மணி எனும் விரு­தினை பெற்ற மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­லாளர் திரு­மதி பி.எஸ்.எம்.சாள்­ஸுக்கு மட்­டக்­க­ ளப்பு நகரில் மகத்­தான வர­வேற்­ப­ளிக்­கப் ­பட்­டது. காவியா பெண்கள் அமைப்பு, வர்த்தக கைத்­தொழில் விவ­சாய சம்­மே­ள னம் மற்றும் மட்­டக்­க­ளப்பு சிவில் சமூக அமைப்பு ஆகிய நிறு­வ­னங்கள் இணைந்தே இந்த வர­வேற்பு நிகழ்வை ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.
மட்­டக்­க­ளப்பு காந்தி சதுக்­கத்­திற்கு முன் னால் வர­வேற்­கப்­பட்ட திரு­மதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மட்­டக்­க­ளப்பு நகரில் நிர்­மா­ணிக்­க ப்­பட்­டுள்ள காந்தி உரு­வச்­சி­லைக்கு மலர் மாலை அணி­வித்­த­தை­ய­டுத்து ஊர்­வ­ல­மாக மட்­டக்­க­ளப்பு நீதி­மன்ற கட்­டிட தொகு­திக்கு முன்னால் அமைக்­கப்­பட்­டி­ருந்த விசேட மேடைக்கு அழைத்துச் செல்­லப்­பட்டார். இவ் வைப­வத்­திற்கு மட்­டக்­க­ளப்பு வலய கல்­விப்­ப­ணிப்­பாளர் சுபா சக்­க­ர­வர்த்தி அம்­பாறை மாவட்ட மேல­திக அர­சாங்க அதிபர் கே.விம­ல­நாதன், மட்­டக்­க­ளப்பு மாவட்ட திட்­ட­மிடல் பணிப்­பாளர் இர.நெடுஞ்­செழியன், வர்த்­தக கைத்­தொழில் விவ­சாய சம்­மே­ள­னத்தின் தலைவர் வி.ரஞ்­சி­த ­மூர்த்தி, காவியா பெண்கள் அமைப்பின் தலைவி யோக­மலர் அஜித்­குமார், சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்­க­ராஜா, பொரு­ளாளர் கே.எம்.கலீல், சமய பிர­மு­கர்கள் மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­லக கணக்­கா­ளர்கள், மாவட்ட செய­லக உத்­தியோ­கத்­தர்கள், திணைக்­களத் தலை­வர்கள், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள அரச மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்­து­கொண்­டனர்.,
திணைக்களத் தலைவர்கள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச மற்றும் அரச சார் பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
»»  (மேலும்)

8/26/2013

| |

கருணை உள்ளம் கொண்ட புலம்பெயர் உறவுகளே செல்வக்குமார் உயிர் வாழ உதவுங்கள்

View Diagnosis Ticket-2_F_P.jpg in slide showView Untitled-1.jpg in slide show
மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த செல்வக்குமார் வறுமையான குடும்பத்தில் பிறந்து  தனது சிறுவயதிலையே தந்தையை இழந்து தாயின் கடின உழைப்புடன் கூடிய அர்ப்பணிப்பினால் தனது முகாமைத்துவ படிப்பினை முடித்தவர். குடும்பத்தில் இவருக்கு இரண்டு சகோதரிகள் இவரது குடும்பமானது வறுமைக்கோட்டின்  கீழ்  வாழும் ஒரு குடும்பமாகும்.இவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டமையால் இவருக்கு முதலாவது அறுவைச்சிகிச்சை கடந்த 30.09.20012  அன்று மேற்கொள்ள்ளட்டது.இச் சிகிச்சை ரூபா 10இலட்சம் இவரது குடும்பத்தினரால் அவர்களது சகல வளங்களையும் விற்று ஒரு சிறுநீரகம் மாற்றப்பட்டது.தூரதிஸ்டவசமாக அவரது உடம்பில் அதிகமான கல்சியம் ஆக்ஸலேட் படியத் தொடங்கிவிட்டமையால் மாற்றிய சிறுநீரகங்கம் மீண்டும் அகற்றப்பட்டது .இன்று  மீண்டும் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டமையால் உயிருக்கா போராடிக்கொண்டுடிருக்கிறார்.இவருக்கு மீண்டும்  அறுவைச்சிகிச்சை  மேற்கொள்வதாயின் இந்தியா அப்பலோ மருத்துவ மனையிலே மேற்கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் கூறி விட்டனர்.
அங்கு சென்று சிறுநீரக கல்லிரல் மாற்று சிகிச்சை மேற்கொள்வதாயின் இந்திய ரூபா 27 ரூபாய் தேவைப்படுகிறது.இத்தொகையானது செல்வகுமாரின் குடும்பத்தினரால் முடியாத ஒரு தொகையாகும்.
வாழும் நாட்களை எண்ணி துடிக்கும் செல்வக்குமரின் நிலையை நினைத்து கருணை உள்ளம் கொண்ட எமது புலம்பெயர் உறவுகளே  இவர் உயிர் வாழ உதவுங்கள். நீங்கள் ஒவ்வொரும் செல்வக்குமாருக்கு செய்யும்சிறு தொகைப்பணம் கூட அவர் உயிர் வாழும் நாட்களை நீடிக்க உதவும் தொகையாக அமையும் .
பிரான்ஸ் நாட்டில் தளமாக கொண்டியங்கும் பாடுமீன் அபிவிருத்தி சங்கமானது இத்தகவலை  எமது புலம்பெயர் உயவுகளுக்கு பணிவுடனும் உரிமையோடும்தெரியபடுத்துகிறது.
உங்களால் முடிந்த சிறு தொகை என்றாலும் கீழே உள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பி உதவுவீர்கள் என்று திடமாக நம்புகிறோம்
Mr. S.Selvakumar
 Saving A/C No: 7246294
 Branch: Batticaloa
 Code No: 012
»»  (மேலும்)

| |

ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இலங்கையில்

ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில் ஆணையர் நவி பிள்ளை, தனது இலங்கை விஜயம் பற்றி கவுன்சிலுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை இலங்கை சென்றடைந்துள்ளார்.
நவி பிள்ளையுடன் மேலும் நான்கு ஐநா பிரதிநிதிகளும் அங்கு சென்றுள்ளனர்.ஒருவார காலத்துக்கு இலங்கையில் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ள அவர், நிலைமைகளை நேரில் கண்டறியவுள்ளார்.
முன்னாள் போர் வலயப் பகுதிகளுக்கும் நவி பிள்ளை சென்று மக்களை சந்திக்கவுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது நடந்துள்ள மனித உரிமை மீறல்களை விசாரிக்க இலங்கை தவறியுள்ளதாக ள் சர்வதேச மட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், நவி பிள்ளை இலங்கை சென்றுள்ளார்.
தனது விஜயத்தின் முடிவில் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்திற்கு நவி பிள்ளை அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஜனாதிபதி தரப்பை சந்திப்பார்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரையும் நவி பிள்ளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ்,சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரையும் ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில் ஆணையர் சந்தித்துப் பேசுவார்.
போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்களையும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்திப்பார்.
உள்நாட்டுப் போரின் இறுதிக் காலப்பகுதியில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஆனால், இந்தக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் மீது விசாரணை நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் உள்ளன.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை முழுமையான விசாரணைகளை நடத்த முன்வராவிட்டால், எதிர்வரும் நவம்பரில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துவந்துள்ளன.
»»  (மேலும்)

8/25/2013

| |

கூட்டமைப்பின் சாதி வெறி அம்பலம் --அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க TNA தலைவர்கள் தீர்மானம் -


வடக்கே வடமராட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியிலுள்ள வலி வடக்கு, கரவெட்டி மற்றும் பருத்தித்துறை பிரதேச சபைகளின் உப தலைவர்கள் இருவரும் தமது ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் சகிதம் ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டனர்.
கொழும்பு வந்திருந்த உப தலைவர்களான மாணிக்கம் லோகசிங்கம், க. சாந்தசொரூபன் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்வைச் சந்தித்துரையா டியதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தமது அங்கத்துவத்தையும் ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் மேட்டுக் குடியினருக்கான முன்னுரிமை வழங்கல் தன்னைப் பாதித்துள்ளதாகத் தெரிவித்த பருத்தித்துறை பிரதேச சபை உப தலைவர் மா. லோகசிங்கம், வடக்கில் இன்று ஐம்பது சதவீதத்திற்கும் மேலாக சிறுபான்மையின மக்களே வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். எந்தவிதமான அபிவிருத்தி களையும் முன்னெடுக்காத நிலையில், அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்திகளுக்கும் முட்டுக் கட்டையாக இருக்கும் தமிழ்க் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் இருப்பதில் பிரயோசனம் இல்லை என்பதால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வந்ததாக மற்று மோர் உப தலைவரான க. சாந்தசொரூபன் தெரிவித்தார். தம்முடன் இணைந்து ஆளும் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்க பல்லாயிரக்கணக்கான மக்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் செய்யும்போது தமக்கு அங்குள்ள தமது பலத்தைக் காட்டுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

»»  (மேலும்)

| |

கூரை மீதேறி கோழி பிடிக்க முடியாத கூட்டமைப்பினர் வானம் ஏறி வைகுண்டம் போக நினைக்கின்றனர்

உள்ளூராட்சி சபைகளில் தடுமாறுபவர்களுக்கு மாகாண சபை வேண்டுமாம் - டக்ளஸ் கிண்டல்
மாகாண சபை உரிமைகளை எதிர்த்து வந்த கூட்டமைப்பு 13ஆவது திருத்தத்தை அன்றே ஆதரித்திருந்தால் நாம் சுயாட்சியை நோக்கி சென்றிருக்கலாம் என்பதுடன் தமிழ் மக்கள் இத்தகைய பேரழிவுகளை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட் டிருக்காது என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மக்களுக்காக நாம் சுமக்கும் பாரம் அதிகம். ஆனாலும் செல்ல வேண்டிய இலக்கின் தூரம் அதிகமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
நாம் நடந்து வந்த பாதையில், கடந்து வந்த சவால்களுக்கு மத்தியிலும், உங்களை விட்டு எங்கும் விலகி ஓடி விடாமல், உங்களுடனேயே இருந்து வந்திருக்கிறோம். உங்களை உசுப்பேற்றி அவலங்களை உங்கள் மீது சுமத்தி விட்டு ஓடிப்போனவர்கள், இன்றைய சுமுகமான சூழ்நிலையிலும் தேர்தல் காலங்களிலும் மட்டுமே உங்களிடம் வந்து நிற்பார்கள். நீங்கள் அவலப்படும் போது அவர்கள் இங்கு வந்து நிற்கவில்லை. உங்களது துயர்களை துடைக்கவும் இல்லை.
நாம் சாதித்தவைகளில் சிறு துளியை கூட தேர்தலுக்காக மட்டும் தமிழ் தேசியம் பேசி, போலியான எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்கள் எவரும் இங்கு செய்திருக்கவில்லை. மாகாண சபை உரிமைகளை அருவருப்பாக அணுகியவர்கள் தேர்தல் என்றவுடன் பதவி நாற்காலிகளுக்காக தேடி வந்திருக்கிறார்கள்.
அரைகுறை தீர்வு என்றும், உழுத்துப்போன தீர்வு என்றும் கூறி இதுவரை கிடைத்த அனைத்து தீர்வுகளையும் ஒதுக்கி வைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், வலிகளை உங்கள் மீது சுமக்க வைத்தார்கள். சுயாட்சியை நோக்கி நீங்கள் செல்லும் வழிகளை தோற்கடித்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்த உள்ளூராட்சி சபைகள் செயலிழந்து சோர்ந்து கிடக்கின்றன. உள்ளூராட்சி சபைகளையே நடத்த முடியாமல் திண்டாடுபவர்கள் மாகாண சபையை எப்படி எமது மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு நடத்தப்போகிறார்கள்? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக நினைப்பது போல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனவு இருக்கின்றது. நாம் வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபைகள் மட்டுமே அதிக நிதி வளங்களோடு அபிவிருத்தியை நோக்கி செயற்பட்டு வருகின்றன.
இதற்கு காரணம் நாம் எமது மக்களின் பிரதிநிதிகளாக இருந்து உரிமைக்கு குரல் கொடுத்து, அரசாங்கத்தின் உறவுக்கு கரம் கொடுத்து வருகின்ற எமது ஆக்கபூர்வ இணக்க வழிமுறையே ஆகும் என்றார்.
»»  (மேலும்)

| |

கூட்டமைப்பை சிதைக்க யாழில் ஒரு பிரேமச்சந்திரன் கிளிநொச்சிக்கு ஒரு சிறிதரன்!

                                                                                                      *-எஸ்.எஸ்.கணேந்திரன்-*
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் பல முரண்பாடுகளுக்கு மத்தியிலும் தேர்தலுக்காக மட்டுமே கூட்டமைத்து போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேதாளம் முருங்கை மரம் ஏறும் பரிதாப நிலைக்கு சென்றுகொண்டிருப்பது வேதனையான விடயமே.


பழைய மொந்தில் புதிதாய் வந்த கள்ளைப்போல் தமிழரசுக் கட்சியில் இருந்து வந்த பழசுகள் ஆரம்பத்தில் சந்திரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்வுத்திட்டத்தை எதிர்த்தார்கள், பின்னர் 13 ஜ எதிர்த்தார்கள்,அதன் பின்னர் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் கிழக்கு மாகாண சபையை எதிர்த்தார்கள் இருண்டிருந்த கிழக்கு மாகாணத்தை ஓரளவுதன்னும் ஒளியூட்டிய பிள்ளையானை அரசியலில் ஓரம் கட்ட வரிந்து கட்டி இரண்டாவது கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு தமிழன் ஆண்ட கிழக்கு மாகானத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்து பெருமை சேர்த்து கொள்கையயும் கைவிட்டு, விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தற்போது வடக்கில் போட்டியில் இறங்கி, தமக்கு தாமே குழி பறித்து வடக்கையும் அரசுக்கு தாரை வார்க்கும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளமை தமிழ் மக்களுக்கு செய்யப்போகும் மாபெரும் துரோகமாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியவை எப்படியேனும் வட மாகாணத்தை கைப்பெற்றியே தீரவேண்டும் என்ற சிந்தனையோடு தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் திரு.விக்னேஸ்வரனை விட ஒரு வாக்கு தன்னும் தனது சகோதரன் சர்வேஸ்வரன் அதிகமாக பெற்று முக்கிய அமைச்சர் பதவி பெற்றால் போதும் என்ற தரம் கெட்ட சிந்தனையுடன் சுரேஸ் பிரேமச்சந்திரனின் யாழ் மாவட்ட பிரச்சாரமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்காவிட்டாலும் பறவாய் இல்லை ஆனந்தசங்கரிக்கு வாக்களிக்க வேண்டாமெண்ற சிறிதரனின் கிளிநொச்சி மாவட்ட பிரச்சாரமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பது மட்டுமல்லாது கிழக்கு மாகாண தமிழ்கர்களுக்கு இழைத்த அதே துரோகத்தை வட மாகாண தமிழ் மக்களுக்கும் செய்தே தீருவோம் என மார் தட்டி நிற்பது ஒரு மிகக்கேவலமான விடயம் என்பதை திருவாளர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரனும் சிறிதரனும் ஒருபோதும் உணரப்போவதும் இல்லை அவர்களின் எண்ணங்கள் கைகூடப்போவதும் இல்லை என்பதை தமிழ் மக்கள் உணர்ந்யேயாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிண்றார்கள்.

நான் என்றுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பையோ அல்லது அதன் சிந்தனையற்ற கொள்கையையோ ஆதரித்தவனும் அல்ல ஆதரிக்கப்போவதும் இல்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் இலங்கை வரலாற்றில் வடக்கு மாகாணத்துக்கு நடைபெறும் முதல் தேர்தலில் தமிழர்களின் கௌரவம் நிலை நாட்டப்படவேண்டும் என்பதில் உறுதியாக நிற்பதே இதை எழுத வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

எனவே வட மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன் சிறிதரன் போன்ற கபடதாரிகளுக்கு பகடையாகாமல் விழித்தெழுவது கட்டாயத்தின் தேவையாகும்.
நன்றி இலங்கை நெட் 
»»  (மேலும்)

8/24/2013

| |

புதிய அமைச்சுக்கான காரணம் குறித்து அமைச்சர் ஹக்கீம்

சட்டம் ஒழுங்கு அமைச்சு என்ற பெயரில் புதிதாக அமைச்சு ஒன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கும் பொலிஸ் துறை புதிய அமைச்சின் கீழ் வரும் என்றும் கூறப்ப்ட்டுள்ளது.
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய, போருக்குப் பின்னர் சிவிலியன் விவகாரங்களை கையாளும் பொலிஸ் பிரிவை, அரச படைகளை கையாளும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து பிரித்து தனியாக இந்த புதிய அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இலங்கை நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் இந்த அமைச்சின் செயலராக பணியாற்றுவார்.
»»  (மேலும்)

8/23/2013

| |

சிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்; 1000பேர் வரை பலி?

சிரி­யாவின் டமஸ்கஸ் நகரின் புற­ந­கர் ­ப­கு­தியில் அந்­நாட்டுப் படை­யினர் இர­சா­யன ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி புதன்­கி­ழமை நடத்­திய தாக்­கு­தலில் 1000 இற்கும் மேற்பட்டோர் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்க செயற்­பாட்­டா­ளர்கள் தெரி­விக்கின்றனர்.
கோயுடா பிராந்­தி­யத்தில் புற­நகர் பகு­தியில் இர­சா­யன வெடி­குண்­டு­களை கொண்ட ஏவு­க­ணை­களை ஏவி தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில், தாம் இர­சா­யன ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக கூறு­வது எது­வித அடிப்­ப­டை­யு­மற்ற குற்­றச்­சாட்­டு என சிரிய அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.
கிழக்கு புற­ந­கரப் பகு­தி­க­ளி­லான சமல்கா, அர்பீன், என்­டர்மா ஆகிய பிராந்­தி­யங்­களில் உக்­கிர ஷெல் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.
சிரி­யாவின் தாக்­குதல் நட­வ­டிக்­கை­க­ளின்­போது இர­சா­யன ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்பில் ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் சம்­பந்­த­மாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் முக­மாக ஐக்­கிய நாடுகள் குழு­வொன்று சிரி­யா­வுக்கு விஜயம் செய்­துள்ள நிலை­யி­லேயே இந்தத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளன.

கடந்த மார்ச் மாதம் கான் அல் –- அஸ்ஸல் பிராந்­தி­யத்தில் 26 பேர் பலி­யா­கு­வ­தற்கு கார­ண­மாக அமைந்த தாக்­குதல் உட்­பட 3 இடங்­களில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களில் இர­சா­யன ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­ததா என்­பதைக் கண்­ட­றி­யவே மேற்­படி ஐக்­கிய நாடுகள் குழு சிரி­யா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்­தது.
இந்த தாக்­கு­தல்­களில் காய­ம­டைந்­த­வர்கள் தற்­கா­லிக மருத்­து­வ­ம­னை­யொன்றில் சிகிச்சை பெறும் காட்­சிகள் யூரியூப் இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. மேலும் படங்கள் பலவும் வெளியாகியுள்ளன.

பலி­யா­ன­வர்கள் மற்றும் காய­ம­டைந்­த­வர்­களில் பெண்­களும் சிறு­வர்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் பிந்­திய தாக்­கு­தலில் இர­சா­யன ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறு­வது ஐக்­கிய நாடுகள் இர­சா­யன ஆயு­தங்கள் தொடர்­பான விசா­ரணை ஆணை­யகத்தின் கடமைகளை நிறைவேற்றுவதை திசை திருப்பும் முயற்சி என சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிரி­யாவில் இடம்பெற்று வரும் மோதல்களில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்கப் படையினரும் கிளர்ச்சியாளர்களும் ஒருவரை யொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

»»  (மேலும்)

| |

ஃபொன்டிராவின் செயற்பாடுகள் இலங்கையில் முடக்கம்

இலங்கையுடனான அனைத்துவிதமான கூட்டுறவு நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவுள்ளதாக நியூஸிலாந்தின் ஃபொன்டிரா நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஃபொன்டிரா பால் மா உற்பத்திகளில் டிசிடி எனப்படும் இரசாயனப் பதார்த்தம் கலந்திருப்பதாக எழுந்துள்ள சர்ச்சையை அடுத்தே நாம் இந் நடவடிக்கையினை எடுத்துள்ளதாக அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை காரணமாகக் கொண்டு இலங்கையுடனான கூட்டுறவு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கத் தீர்மானித்துள்ளோம்.
இலங்கையில் உள்ள எமது ஊழியர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த கால எமது நிறுவனத்திற்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களின் போதுகூட எமது நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தோம். தற்போதைய சூழ்நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

»»  (மேலும்)

| |

ஏறாவூரில் கிணற்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூர் எல்லை வீதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று முற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
கிணற்றினுள் பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து சோதனையிட்டபோது கைக் குண்டு ஒன்றும் மாட்டு எழும்பு எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இக் குடி நீர்க் கிணறு அமைந்துள்ள காணியில் தற்போது உரிமையாளர்கள் மீளக்; குடியமர்ந்துள்ளனர்.
இதன்போது கிணற்றினை துப்புரவு செய்தவேளையிலேயே மேற்படிக் கைக்குண்டு காணப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிசார் சென்று மேலதிக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மீட்க்கப்பட்ட குண்டானது குண்டு செயலிழக்கும் இராணுவப்பிரிவினரினால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது என்று பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

»»  (மேலும்)

| |

கரடியனாறு பகுதியில் துப்பாக்கி, ரவைகூடு மீட்பு

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரடியனாறு பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரவைக் கூடொன்றும் ரி-56 ரக துப்பாக்கியொன்றையும் வியாழக்கிழமை மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று, ரவைக்கூடு ஒன்று மற்றும் ரவைகள் -30 ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வரும் பொலிஸார் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

»»  (மேலும்)

| |

கிழக்கின் எழுச்சி இறுதிநாள் நாள் கண்காட்சி

கிழக்கு மாகாண விவசாய கால் நடை உற்பத்தி கைதொழில் அபிவிருத்தி மீன் பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்கின் எழுச்சி 03 நாள் கண்காட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவ+ர் பிரதேசத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது.
இதன் போது இறுதி நாள் நிகழ்வினை  கடந்த  20.08.2013 அன்று ஆரம்பித்து வைக்கும் முகமாக பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி போக்கு வரத்து கானி அமைச்சர் விமல வீர திஸ்ஸாநாயக்க , அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் அமைச்சின் செயலாளர் க.பத்மநாதன் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அங்கு அமைக்கப் பட்டிருந்த காட்சி கூடங்களையும் பார்வையிட்டதுடன் அமைச்சர் விமல வீர  திஸ்ஸாநாயக்க உரையாட்டினார்
»»  (மேலும்)

| |

எம்.பி.யோகேஸ்வரனின் வேனால் அடிக்கப்பட்ட மாணவி வைத்திய சாலையிலிருந்து வெளியேற்றம்.

கடந்த 17.08.2013 அன்று வாழைச்சேனை புதுக்குடியிருப்பில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களது வாகனம் (PE 9721) விநாயகபுரம் வாழைச்சேனையை சேர்ந்த 18 வயதுடைய மாணவி கே.வரணியா என்ற மாணவியை அடித்து படுகாயங்களுக்கு உள்ளாக்கியது. குறித்த மாணவியை வாழைச்சேனை வைத்திய சாலைக்கு பிள்ளையின் பெற்றோர்கள் கொண்டு சேர்த்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளார்கள். குறித்த மாணவி சிகிச்சை பெற்று கடந்த 20.08.2013 அன்று  வீடு திரும்பினார்.
யோகேஸ்வனை; எம்.பியின் வேனால் அடிபட்ட மாணவி இம்முறை நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவி ஆவார். இம் மாணவி தனக்கு நேர்ந்த விபத்தினால் ஒரு  பாடம் பரீட்சை எழுதவில்லை எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றார்கள். அம்மாணவியின் எதிர்காலம் கேள்விக்குறியடைந்துள்ளது.
குறிப்பு :-
எம்.பி.யோகேஸ்வரனின் வேனை செலுத்திய சாரதி மது போதையில் இருந்ததாக அறியமுடிகிறது. குறித்த சாரதி அருந்திய மதுவானது வெளிநாட்டு ரக உயர்தர மது வகையைச் சார்ந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.பி.யோகேஸ்வரன் அவுஸ்திரேலியாவிலிருந்து வரும்போது அந்த மதுவினை கொண்டுவந்ததாகவும் அறியமுடிகிறது.
»»  (மேலும்)

8/22/2013

| |

லயன் காம்பராக்களை மூடி மலையக மக்களுக்கு தனி வீடுகள்

* தொழிலாளர்களின் சகல பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும்

மலையக சமூகத்தினர் மத்தியில் ஜனாதிபதி உறுதி

லயன் காம்பரா யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து மலையக மக்களுக்கு சொந்த விடுகளைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்ய அவர்கள் தெரிவித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று திரண்டிருந்த பல்லாயிரக்கணக் கான பெருந்தோட்ட மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட சிக்கல்கள் அனைத்துக்கும் விரைவான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்றைய தினம் கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள் மூவாயி ரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வைபவமொன்று நடைபெற்றது. அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் அமைச்சர் காமினி லொக்குகே, முன்னாள் பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ், பாராளுமன்ற உறுப்பினர்கள் பி. திகாம்பரம், டி.
இராஜதுரை மத் திய மாகாணத்தில் வெற்றிலைச் சின் னத்தில் போட்டியிடும் தமிழரான மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி, மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் :-
கண்டி ஜனாதிபதி மாளிகையில் பெருந்தோட்டத்துறை மக்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். கண்டி மாவட்ட மக்கள் நாட்டுக்குச் செய்யும் சேவையை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். தோட்ட மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் நான் அறிவேன். மலையக மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக நாம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை நிறுவியுள்ளோம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சிக் காலத்திலேயே தோட்ட மக்களுக்கென தனியான அமைச்சொன்று ஆரம்பிக்கப்பட்டது.
இதன் மூலம் மலையகப் பிரதேசங்களில் கல்வி, சுகாதாரம், மின்சாரம், வீதி அபிவிருத்தி உட்பட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு நாமே பெருமளவு ஆசிரிய நியமனங்களை வழங்கினோம். எனினும் ஒரு சிலர் அவற்றைத் தாமே செய்ததாக தம்பட்டம் அடித்துத் திரிகின்றனர். பொய் பிரசாரங்களை மக்கள் ஒருபோதும் நம்பக்கூடாது.
ஜனவசம தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி பிரச்சினை தொடர் பிரச்சினையாக உள்ளது. அதனை நான் கனத்திற் கொண்டுள்ளேன். விரைவில் அதனைப் பெற்றுக் கொடுக்க உரிய அதிகாரிகளுக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன். இக்காலங்களில் பல அரசியல்வாதிகள் வாக்குக்காக தோட்டங்கள் வழியே அலைவதைப் பார்க்க முடிகிறது.
நான் உங்கள் நண்பனாகவும் உறவினராகவும் உள்ளேன். நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் நான் தீர்த்து வைப்பேன். பன்வில கல்பீலி தோட்டப் பிரச்சினை எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. நான் அங்கு சென்று நேரில் பார்த்தேன். அத்துடன் மேலும் மூன்று தோட்டங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். அந்த தோட்டங்களை மீண்டும் இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தோட்ட நிர்வாகங்கள் இனிமேல் முறையாக இயங்கும் என்பதை நான் மக்களுக்குக் குறிப்பிட விரும்புகிறேன். தோட்ட மக்கள் பல்லாண்டு காலமாக லயன் காம்பராக்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தனியான குடியிருப்புகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். ஏனைய கிராமங்களைப் போல தோட்ட மக்களுக்கும் வசதியாக வாழக்கூடிய வீடுகள் தோட்டங்களைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம்.
குடும்பத் தலைவர்களின் குடிப் பழக்கம் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக தோட்டத்துறைப் பெண்களிடமிருந்து எனக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. குடியை நிறுத்தினால் தோட்ட மக்களும் முன்னேற முடியும் என்றார்.
»»  (மேலும்)

| |

‘நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த ஞான செருக்குடன் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாக இருக்க விரும்புகின்றேன்.

Ganasakthi sritharanவறுமை, ஆதரவின்மை, சமூக ரீதியாக ஒடுக்கபட்டவர்களின் நலன்களுக்காகவே நான் போட்டியிடுகின்றேன். அவர்களின் குரலாக இருக்கவே விரும்புகின்றேன். வீடில்லாமல், தொழில் இல்லாமல், மலசலகூட வசதியில்லாமல், பிள்ளைகளுக்கு சரியான கல்வியில்லாமல் ,அடிப்படையான மருத்துவ வசதியில்லாமல், மின்சாரம் இல்லாமல், சரியான, செப்பனான பாதை இல்லாமல், போக்குவரத்து வசதியில்லாமல், குடிநீர் அன்னறாட தேவைகளுக்கு நீர் இல்லாமல் வாழ்பவர்களுக்காகவே நான்செயற்பட விரும்புகிறேன்;.
“பாழ்பட்டு வறுமை மிஞ்சி வாழும் மக்களுக்காக, “காணி நிலம் வேண்டும் பராசக்தி காணிநிலம் வேண்டும்” என்று பாரதி பாடினானே அந்த நிலமற்றவர்களின் நில உரிமையை நிலைநாட்டவேண்டும்
இடம் பெயர்ந்து அகதிகளாக தமது வாழ்நாளில் பெரும் பகுதியை தொலைத்துவிட்ட மக்களின் மீள்குடியேற்றம் ,கண்ணியமான வாழ்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பாடசாலைக்கு செல்ல நேர்த்தியான உடையில்லாமல்,சத்தான உணவில்லாமல், புத்தகம் இல்லாமல் அறிவுத்தாகம் இருந்தும் படிக்க வழியில்லாமல் இருக்கும் பிள்ளைகளின் எதிர்காலம் நம்பிக்கையானதாக அமையவேண்டும்.
சமூகத்தில் ஒதுக்கப்பட்டு, ஓடுக்கப்பட்டு ,அழிக்கப்பட்டு வாழ்வு கந்தலாய் போன மக்களின் நலன்களுக்காக வாழ விரும்புகிறேன்.
‘தனிமனிதன் ஒருவனுக்கு உணவில்லையானால் இந்த ஜகத்தினை அழி;த்திடுவோம’; என்ற பாரதியின்; சத்திய  ஆவேசம் நிதர்சனமாவேண்டும்.
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஏழை மேலும் ஏழையாக அநீதியான சமூக அமைப்புமுறை பற்றி அரங்கத்தில் கேள்வி எழுப்ப இத் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றேன்.
‘நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த ஞான செருக்குடன் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாக இருக்க விரும்புகின்றேன்.
இந்த நாடு தமிழ் ,சிங்களம், ,முஸ்லீம் ,மலையகத் தமிழர், பறங்கியர், மலாயர் என் அனைத்து இன சமூகங்களின் நாடாக விளங்க வேண்டும் எல்லோரும் இன்புற்றிருக்கத்தான் இந்த நாடு.
இன , சாதி , பால் ரீதியான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் அரங்கிலGansakthi் கேள்வியெழுப்ப, ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்
அநீதி இழைக்கப்பட்டு ஒளியில்லாமல் இருளில் மூழ்கி கிடக்கும் கிராமங்களுக்கு ஒளியேற்ற வேண்டும்
சிறைகளில் வாழ்பவர்களின் விடுதலைக்காகவும் ,நீண்ட நெடிய யுத்தத்தில் சகலதையும் இழந்த மக்களுக்காகவும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்காவும், ஊனமற்றவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றவும் நான் படுபடுவேன்.
என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் தேர்தலில் இறங்கியிருக்கிறேன்.
ஏழை மக்களுக்கு இருக்க வீடு, பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, நல்ல பாதை, போக்குவரத்து, வசதிகளுடனும் வாழ என்னால் ஆனதைச் செய்வேன்
நஞ்சாகி ,மாசாகிப் போய்கொண்டிருக்கும் எமது சுற்றாடலை புத்துயிர்ப்படைய செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
அகங்கார அதிகார கட்டமைப்புக்குப் பதிலாக மக்களுக்கு எந்நேரமும் சேவையாற்றத் தயராக இருக்கும் ஒரு நட்பான நிர்வாகத்தை எமது பிரதேசங்களில் மேலிருந்து கீழ் வரை ஏற்படுத்த பாடுபடுவேன்.
‘நாம் ஆர்க்கும் குடியல்லோம’; என்ற சுயமரியாதையுடன் கூடிய வாழ்வை மெய்ப்பிக்க அனைத்தையும் மேற்கொள்வேன்.
ஈ.பி.டி.பி, முற்போக்கு ,இடதுசாரி கட்சிகள், பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஏழைகளின் நண்பர்களாக தோழர்களாக இருக்கிறார்கள்.
வேறு சுயமான சமூக ஆர்வலர்கள் இருக்கிறார்கள்.
இங்குள்ள சாதாரண மக்களில் அக்கறையுள்ள தமிழர்கள் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறார்கள்.
இவர்களின் பலருடனும் இணைந்து எனது பணிகளை முன்னெடுப்பேன்.
13வதின் கீழான அதிகாரங்கள் தேய்வடைந்திருந்தாலும் அதனை மீண்டும் உயிர்பிக்க செழுமைப்படுத்த அனைத்து  முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
எனது அனைத்து உழைப்பும் மக்களுக்காகவே. 
எனது சின்னம் வெற்றிலை
எனது இலக்கம் 13
ஞானசக்தி ஸ்ரீதரன்
»»  (மேலும்)