7/05/2013

| |

"CHECK MATE"

View 1013891_10200745128448796_2085280701_n.jpg in slide showமட்டக்களப்பைச் சேர்ந்த பத்மநாதன் கோவர்த்தனன் என்ற இந்த இளைஞர் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்றவர் .இவர் தற்போது திருச்சி பல்கலைகழகத்தில் ஹோட்டல் முகாமைத்துவத்தில் தனது டிப்ளோமாவினை நிறைவு செய்துள்ளார்.

அத்தோடு தென் இந்திய திரை இயக்குனர் மட்டக்களப்பைச் சேர்ந்த பாலு மகேந்திரா அவர்களின் பயிற்சி பட்டறையில் மூன்று மாத நடிப்பு பயிற்சியும் ஒரு வருட இயக்குனர் பயிற்சியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவர் பத்மநாதன் (மட்டக்களப்பு தயா மோட்டோர்ஸ் நிறுவன பங்காளர்) மற்றும் சூரியகலா தம்பதிகளின் இரண்டாவது புதல்வன் ஆவார்.இவர் குறும்படங்கள் மீது கொண்ட ஆர்வத்தினால் தற்போது "CHECK MATE" எனும் குறும்படத்தை எழுதி இயக்கி அதில் ஒரு கதாபாத்திரத்திலும் ஏற்று நடித்துள்ளார்.

இந்தியாவிலும் இலங்கையிலும் சேர்த்து மொத்தமாக 8 விருதுகளை பெற்ற "நானும் ஒரு தாய்" எனும் குறும்படத்தை தொடர்ந்து இவர் எழுதி இயக்கிய இரண்டாவது குறும்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இக் குறும்படத்தில் "எங்கேயும் எப்போதும்" திரைப்படத்தில், கதாநாயகி அனன்யாவின் அக்காவாக ஏற்று நடித்து பெயர் வாங்கிய நடிகை வினோதினி வைத்யநாதன் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் இவர் "கடல்" மற்றும் "யமுனா" போன்ற திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவருக்கு துணையாக "மாற்றான்" "மௌன குரு" "எதிர்நீச்சல்" "சிங்கம்-2" போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் அருள் ஜோதி பிரதான வேடத்திலும்,
"ஜில்லுனு ஒரு கலவரம்" குறும்படத்தில் கதாநாயகி வேடம் ஏற்ற ஆர்யா ஹரிதாஸ்,ராஜன் மாயருள்,கீதா குணாளன் மற்றும் இக் குறும்படத்தின் இயக்குனர் கோவர்தன் சிறிய வேடத்திலும் நடித்துள்ளனர்.

மட்டக்களப்பை சேர்ந்த "மண்" திரைப்படத்தில் நடித்த கதாநாயகனும் இலங்கையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற ஜனகன் சுதாகரன் லண்டன் இல் இருந்து இக் குறும்படதிற்கான அனைத்து தயாரிப்பு செலவுகளையும் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இக் குறும்படத்துக்கான ஒளிப்பதிவை "ஜில்லுனு ஒரு கலவரம்" குறும்படத்தை இயக்கி விருது பெற்ற சிவராஜ் பரமேஸ்வரனும், இசையை "நானும் ஒரு தாய்" மற்றும் "ஜில்லுனு ஒரு கலவரம்" குறும்படங்களுக்கு இசை அமைத்த Caine W Sidharth உம், படத்தொகுப்பை (editing) "யோவான்" குறும்படத்துக்காக சிறந்த படதொகுப்பாளர் (editor) விருதை பெற்ற Sreyes உம்,இணை இயக்குனராக "ஜில்லுனு ஒரு கலவரம்" குறும்படத்தில் பணியாற்றிய அபிநயா குணாளனும், உதவி இயக்குனர்களாக vivian Trishan (பாஸ் மார்க் 35/100 குறும்படத்தை இயக்கிய மட்டக்களப்பை சேர்ந்தவர்) , M.Manu மற்றும் ஆர்யா ஹரிதாஸும், ஒலிப்பதிவை D.A.வசந்த் (Vibrant Studios) உம் போஸ்டர் டிசைன்சை P.துஷாந்த் உம் மேட்கொண்டுள்ளனர்.

இக் குறும்படத்தின் வெளியீடானது -
* இம் மாதம் (July) 14 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை அன்று சென்னை வடபழனி இல் உள்ள AVM PREVIEW திரையரங்கத்தில் பிற்பகல் 4.30 மணிக்கும்

* வருகின்ற ஆவணி (August) மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை அன்று மட்டக்களப்பில் உள்ள YMCA மண்டபத்தில் பிற்பகல் 4.30 மணிக்கும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.