7/29/2013

| |

வேட்பாளர் தெரிவில் சாதிவெறி.......... பேராட்டத்தில் தலித்துக்கள்.............

யாழில் தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் உண்ணாவிரத போராட்டம் :தமிழர் விடுதலை கூட்டணியில் உள்ள - தலித் சமூகத்தைச் சேர்ந்த தங்க முகுந்தன், செல்லன் கந்தையா, செல்லையா விஜிதரன் ஆகிய மூவர் இன்று திங்கட்கிழமை 29ம் திகதி காலை முதல் யாழ்.தந்தை செல்வா சதுக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..

வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பானது வேட்பாளர்களை சாதி அடிப்படையில் தெரிவு செய்கின்றதென்றும் தமிழர் விடுதலை கூட்டணியில் பல்வேறு சாதிய பாகுபாடுகள் இடம்பெறுதாகவும் தெரிவித்தே இவ் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்தாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றதாகவும் சாதியின் அடிப்படையில் வேட்பாளர் நியமித்துள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை நியமிப்பதாக வாக்குறுதி அளித்து விட்டு தற்போது அந்த வாக்குறுதியை மீறியுள்ளதாகவும் குறிப்பிட்ட உண்ணாவிரதிகள் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்காது, தனிப்பிட்ட விருப்பங்களின் பேரில்,தமக்கு வேண்டப்பட்டவர்களும் குடும்பத்தவருமே வேட்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.