7/29/2013

| |

யாழ்.இலக்கியச் சந்திப்பு உரத்துப் பேசுவதற்கான சுதந்திரக் குரல்

யாழ்.இலக்கியச் சந்திப்பு உரத்துப் பேசுவதற்கான
 

சுதந்திரக் குரல்

நவாஸ் சௌபி...

41வது இலங்கைச் சந்திப்பை முன்வைத்து....

இலக்கியச் சந்திப்பின் தோற்றம் ஒரு சிறு குறிப்பு
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், சிறு சஞ்சிகையாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் ஆரம்பித்த இலக்கிய உரையாடலின் தொடர்ச்சி "இலக்கியச் சந்திப்பு" எனும் தலைப்பின் கீழ் கதையாடப்பட்டுவருகிறது.
1988.09.24 இல் Nஜர்மனியின் ஹேர்வண் நகரத்தில் இலக்கியச் சந்திப்பின் தொடக்கம் நிகழ்ந்தது. அப்போது இதன் செயற்பாட்டில் மிக முக்கியமானவர்களாக தூண்டில் பத்திரிகை ஆசிரியர் பார்த்திபன், எழுத்தாளர் சுசிந்திரன், சிந்தனை சஞ்சிகை ஆசிரியர் பரா மாஸ்டர் ஆகியோர் செயற்பட்டதைக் குறிப்பிடலாம்.
Nஜர்மனியில் தொடர் இலக்கிய சந்திப்புக்கள் 13 நடைபெற்றுவந்த நிலையில் அதன் செயற்பாடு பரந்த நிலையை எட்ட வேண்டும் என்று, 14 வது இலக்கியச் சந்திப்பு 1992 டிசம்பர் 26,27 களில் பிரான்ஸில் நடைபெற்ற பதிவைச் செய்கிறது. இதனூடாக இலக்கியச் சந்திப்பில் ஆர்வமுடைய பலரும் இணைந்து விரிந்த ஒரு தளத்தில் இலக்கியச் சந்திப்புக்கான உரையாடல்கள் மேலெழுந்தது.
பிரான்ஸில் இலக்கியச் சந்திப்புக்கான செயற்பாடுகளில் முன்னின்றவர்களுள் முக்கியமான வர்களாக புஸ்பராஜh, சபாலிங்கம் மற்றும் பள்ளம், தேடல் பத்திரிகை களின் ஆசிரியர்களான கலைச் செல்வன், கலாமோகன், சுகன், முரளி போன்றவர்களையும் இவர்க ளுடன் இணைந்தவாறு ஸ்ராலின், உமா, நிருபா, விஜp, சிவராஜh, கற்சுறா, nஜபா, ரஞ்சனி, N'hபாசக்தி போன்றவர்களையும் குறிப்பிடலாம்.
இத்தகைய முக்கியத் துவத்தின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளில் இலக்கியச் சந்திப்பின் விரிவாக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் அதனைத் தடுப்பதற்காக 1995 ஆம் ஆண்டில் பரிஸில் வைத்து ஆசியா பதிப்பக ஆசிரியர் சபாலிங்கம் விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இலக்கியச் சந்திப்பின் உயிரோட்டமான இயக்கத்தில் பெரும் தயக்கமும் தடையும் ஏற்படுவதாக இந்நிகழ்வின் தாக்கம் அமைந்தது.
இந்த தயக்கத்திலிருந்து 1997 இல் மீண்டெழும் நிலையாக இலக்கியச் சந்திப்பு பரிஸில் உயிர்ப்பு பெற்றது. அச்சந்திப்பில் சபாலிங்கம் நினைவாக "இனியும் சூழ்கொள்" எனும் இலக்கியச் சந்திப்பு மலர் வெளியிடப்பட்டு இலக்கியச் சந்திப்பின் தொடர்ச்சியும் அதில் பதிவு பெறுகிறது.
இவ்வாறு 1988 இல் ஆரம்பித்த இலக்கியச் சந்திப்பின் உரையாடல்கள் கடந்த 25 வருடங்களில் Nஜர்மன், பிரான்ஸ், என்ற தொடரிலிருந்து சுவிஸ், லண்டன், நெதர்லாந்து, நோர்வே, கனடா ஆகிய நாடுகளில் 40 அமர்வுகளை பதிவு செய்திருக்கின்றமை இதன் ஆரோக்கியத்திற்கும் வரலாற்று அவசியத்திற்குமான முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.
இலக்கியச் சந்திப்பானது ஒரு நிறுவனத் தன்மையற்று, தலைவர் செயலாளர் என்கின்ற நிர்வாக அதிகாரம் அற்று, ஒவ்வொரு இலக்கியச் சந்திப்பின் போதும் கலந்து கொள்கின்ற பங்களிப்பாளர்களின் அபிப்பிராயத்தின்படி அடுத்த உரையாடலுக்கான இடமும்
செயற்பாடும் தீர்மானிக்கப்பட்டு ஜனநாயக முறையில் அதன் தொட ர்ச்சி கைமாறப்பட்டு வருகின்றமை இதன் வெற்றிக்கும் தொடர்ச்சிக்கும் உறுதியளித்திருக்கிறது.
இலங்கையில் இலக்கியச் சந்திப்பின் முன்வைப்பும் விமர்சனமும்
இலக்கியத்திற்கான ஒரு அரசி யலை வகுத்து தொடர் உரையாடல்களை நிகழ்த்திய இலக்கிய சந்திப்பினை இலங்கையில் நடத்துவதற்கான கோரிக்கை 2011 இல் 38 வது இலக்கிய சந்திப்பு பிரான்சில் நடைபெற்றபோது முன்வைக்கப்பட்டது. ஆனாலும் அதன் முடிவு இறுதியில் கனடாவில் நடத்துவதற்கான தீர்மானத்தை எடுத்தது.
சுமதி ரூபனின் ஏற்பாட்டில் 39 வது இலக்கியச் சந்திப்பு கனடாவில் நடைபெற்ற போது தொடர்ந்தும் 40வது இலக்கியச் சந்திப்பினை இலங்கையில் நடத்துவதற்கான விருப்பங்கள் கோரப்பட்டது. அப்போது அதற்கு மாற்றமாக லண்டனில் நடத்துவதற்கான விருப்பங்களும் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் இலக்கியச் சந்திப்பிற்கான இடத்தினை தீர்மானிக்கும் மரபு மீறப்படுவதாக 40 வது இலக்கியச் சந்திப்பு இலங்கையிலா? லண்டனிலா? என்ற கருத்து வேறுபாடுகளுக்குள் இருதரப்பினரும் பேசி இணக்கம் காண வேண்டிய நிலை ஏற்பட்டது.
இறுதியில் இலங்கையில் நடத்துவதற்கான விட்டுக்கொடுப்புடன் லண்டனில் நடத்துதற்கான தரப்பினர் விலகி இருந்தனர். பின்னர் உள்ளகரீதியாக லண்டனில் நடத்துவதற்கு முன்நின்றவர்களுக்குள் என்ன ஏற்பாடுகள் நடந்ததோ தெரியாது மீண்டும் முடிவில் மாற்றம் செய்து லண்டனில் நடத்துவதற்கான கோரிக்கையினை விடாப்பிடியாக முன்வைத்து 40 வது இலக்கியச் சந்திப்பு இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் லண்டனில் நடைபெற்று முடிந்தது. இதன் முக்கிய ஏற்பாட்டாளராக எம்.பௌசர் செயற்பட்டிருக்கிறார்.
இந்தப் பின்னணியில் 41 வது இலக்கியச் சந்திப்பினை இலங்கையில் நடத்துவதற்கான தீர்மானம் லண்டன் சந்திப்பில் உறுதியாக்கப்பட்டது. இலக்கியச் சந்திப்பினை இலங்கையில் நடத்துவதற்கான விருப்பங்களை முன்வைத்து தொடர்ந்தும் அதனை விடாது முன்னெடுத்து செயற்பட்டவர்களுள் பிரான்ஸ் மற்றும் லண்டனில் வாழும் தேவதாஸ், ராகவன், அசூறா, N'hபா சக்தி, முரளி, உமா, சந்தோஸ், தமயந்தி, பானு, விஜp, நிர்மலா, கீரன் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
41வது இலக்கியச் சந்திப்பிற்கான செயற்பாடுகளை இலங்கையில் ஒருங்கிணைத்துச் செயற்படுத்துவதற்கான செயற்பாட்டாளர்கள் ஒரு செயற்குழுவாக தீர்மானிக்கப்பட்டதற்கமைய இதன் செயற்பாடுகள் இலங்கையில் செயற்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இச்செயற்குழுவில் ஆத்மா, நவாஸ் சௌபி, லெனின் மதிவானம், கருணாகரன், யோகருணன், நிலாந்தன் பேன்றவர்கள் உள்வாங்கப்பட்ட நிலையில் இவர்களால் ஒன்றுபட்டு தொடர்பாடுவதிலும் செயற்படுவதிலும் நடைமுறைசார்ந்த சிரமங்கள் இருந்ததன் காரணமாக இச்செயற்குழுவில் அவர்களால் முழுமையாகச் செயற்பட முடியவில்லை.
இதில் மற்றுமொரு விடயமாக இலக்கியச் சந்திப்பினை இலங்கையி;ல் யாழ்ப்பாணத்தில் நடத்துவது தொடர்பாக எதிர்வினைகள் உருவாகிய நிலையில் இதில் சிலர் செயற்படாத அமைதி நிலையிலும் இருந்தனர். ஆனாலும் இலக்கியச் சந்திப்பிற்கான தீவிர செயற்பாட்டாளர்களாக வாசுகி, திருவரங்கன், ரெங்கன், அகல்யா, கருணாகரன், தமிழ்அழகன் போன்றவர்கள் செயற்பட்டு இலக்கியச் சந்திப்பின் நிறைவான வெற்றிக்கு உழைத்தனர்.
இவ்வாறான ஒரு தொடர்ச்சியைக் கொண்ட இலக்கியச் சந்திப்பின் பாரம்பரியம் என்பது மிகச் சுதந்திரமான உரையாடலுக்கான குரல்களை பதிவு செய்வதாகவே இருந்திருக்கிறது. குறிப்பாக விடு தலை போராட்டத்திற்குள் மறைந் திருந்த வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதும் கருத்துக் கூறுவதும் இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட ஒரு ஒடுக்குமுறையை உருவாக்கி இருந்தது.
போராட்ட வன்முறைகளுக்கு எதிராக மனிதாபிமான, ஜனநாயகக் கருத்துக்களை முன்வைப்பவர்களை துரோகிகள் என்று அடையாளப்படுத்தும் அளவிற்கு கருத்துச் சுதந்திரத்தின் அரசியல் காணப்பட்ட நிலையில் இலக்கியச் சந்திப்பின் உரையாடல்கள் அவற்றை கட்டுடைத்து மிகச் சுதந்திரமாகவும் துணிச்சலாகவும் தமது உரையாடல்களை முன்னெடுத்து வந்திருக்கிறது.
ஆயுதப் போரட்டத்தினாலும், அதற்கு எதிரான படையினரின் தாக்குதலாலும் இலங்கையில் யுத்தம் என்ற பெயரினால் நடந்த அனைத்து ஜனநாயக மீறல்களையும் தமிழ், முஸ்லிம். சிங்கள சமூகங்கள் சார்பில் இலக்கியச் சந்திப்புக்கள் மிக வெளிப்படையான கருத்துக்களால் சுதந்திரமாகப் பேசியிருக்கிறது பதிவு செய்துமிருக்கிறது.
இந்தப் பாரம்பரியத்திலிருந்து விடுபட்டு இலங்கையின் இலக்கியச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதாக அதற்கான எதிர்குரல ;கள் ஒருசில இலக்கியகாரர்களிட மிருந்து எழுந்தது. தற்போதுள்ள இலங்கை அரசுக்கு சார்பான ஒரு இலக்கியச் சந்திப்பாக இதனை விமர்சித்து குற்றம் சுமத்தப்பட்ட பேச்சுக்களும் பேசப்பட்டது.
இலக்கியச் சந்திப்பின் தனித்துவ மும், பாரம்பரியமும் கெடாமல் கருத்துச் சுதந்திரத்துடன் யாழ் இலக்கியச் சந்திப்பு நடைபெற்றதா? என்ற கேள்வியைக் கேட்கின்ற போது அது இத்தகைய குற்றம் சுமத்துதலையும் விமர்சனங்களையும் செய்தவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைவதாகவே பதிலளித்து அனைத்து விமர்சனங்களையும் பொய்யாக்கி இருக்கிறது.