7/31/2013

| |

துரிதமாக நடைபெற்று வரும் வெபர் விளையாட்டு மைதான வேலைகள்

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் 150 மில்லியன் ரூபா செலவில் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இதன் நிர்மாண வேலைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நிறைவுக்கு கொண்டுவரப்படும் என ஒப்பந்தகாரர் எஸ்.எஸ்.ஆர்.சசி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே மிகவும் புராதன முக்கியத்துவம் வாய்ந்த ஓர் விளையாட்டு மைதானமாக வெபர் மைதானம் காணப்படுகின்றது.
சுமார் 10 ஏக்கர் விசாலமான காணியில் உள்ளக அரங்கு, வெளி அரங்கு ஆகியவற்றை உள்ளடக்கிய சகல வசதிகளுடனும் கூடிய நவீன விளையாட்டு அரங்காக இந்த மைதானம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் வெபர் விளையாட்டு மைதானத்தில் 400 மீற்றர் ஓடு தளம், கூடைப்பந்தாட்டக்கூடம், கால்ப்பந்தாட்ட மைதானம், நீச்சல் தடாகம், கரப்பந்தாட்டக்கூடம், பெட்மீட்டர்ன் தளம்  என அனைத்து விதமான
விளையாட்டுத் தளங்களும் அமைக்கப்படவுள்ளன.
வெபர் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி வேலைகளை கடந்த வருடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

ஈ.பிஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரனின் துணைவியாரான திருமதி ஞானசக்தி -வெற்றிலை சின்னத்தில்

eprlf.mrs.sugu gnanaaaவட மாகாணசபைத் தேர்தலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உட்பட புளொட்இ தமிழர் விடுதலைக் கூட்டணிஇ ரெலோ ஆகிய கட்சிகள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்த போதிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணியினரின் கடும் எதிர்ப்பின் காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டது.

இதனையடுத்து பத்மநாபா ஈ.பிஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரனின் துணைவியாரான திருமதி ஞானசக்தி (ஞானா) சிறீதரன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) வட மாகாணசபைத் தேர்தல் வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.

இதன்மூலம் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் ஆரம்பகாலம் முதல் முக்கிய உறுப்பினராகவிருந்த திருமதி ஞானசக்தி (ஞானா) அவர்களை ஈ.பி.டி.பியின் பக்கம் தள்ளிவிடுவதில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணி வெற்றி கண்டுள்ளது.

சுரேஷ் அணியின் விடாப்பிடியான போக்கே இந்நிலைமை ஏற்படக் காரணமாக இருந்தது என யாழ் குடாநாட்டு மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கவில்லையென்பதே அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரை வடமாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்பதற்கான காரணமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணி தெரிவித்திருந்தது.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவமில்லாத யாரையும் கூட்டமைப்பின் வேட்பாளராக இணைத்துக் கொள்ள முடியாது என்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணி குறிப்பிட்டிருந்தது.

ஆனால் வட மாகாணசபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட சீ.வீ. விக்கினேஸ்வரன் எந்தக் கட்சியையும் சாராதஇ அரசியல் சாராத தனிநபர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

7/29/2013

| |

யாழ்.இலக்கியச் சந்திப்பு உரத்துப் பேசுவதற்கான சுதந்திரக் குரல்

யாழ்.இலக்கியச் சந்திப்பு உரத்துப் பேசுவதற்கான
 

சுதந்திரக் குரல்

நவாஸ் சௌபி...

41வது இலங்கைச் சந்திப்பை முன்வைத்து....

இலக்கியச் சந்திப்பின் தோற்றம் ஒரு சிறு குறிப்பு
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், சிறு சஞ்சிகையாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் ஆரம்பித்த இலக்கிய உரையாடலின் தொடர்ச்சி "இலக்கியச் சந்திப்பு" எனும் தலைப்பின் கீழ் கதையாடப்பட்டுவருகிறது.
1988.09.24 இல் Nஜர்மனியின் ஹேர்வண் நகரத்தில் இலக்கியச் சந்திப்பின் தொடக்கம் நிகழ்ந்தது. அப்போது இதன் செயற்பாட்டில் மிக முக்கியமானவர்களாக தூண்டில் பத்திரிகை ஆசிரியர் பார்த்திபன், எழுத்தாளர் சுசிந்திரன், சிந்தனை சஞ்சிகை ஆசிரியர் பரா மாஸ்டர் ஆகியோர் செயற்பட்டதைக் குறிப்பிடலாம்.
Nஜர்மனியில் தொடர் இலக்கிய சந்திப்புக்கள் 13 நடைபெற்றுவந்த நிலையில் அதன் செயற்பாடு பரந்த நிலையை எட்ட வேண்டும் என்று, 14 வது இலக்கியச் சந்திப்பு 1992 டிசம்பர் 26,27 களில் பிரான்ஸில் நடைபெற்ற பதிவைச் செய்கிறது. இதனூடாக இலக்கியச் சந்திப்பில் ஆர்வமுடைய பலரும் இணைந்து விரிந்த ஒரு தளத்தில் இலக்கியச் சந்திப்புக்கான உரையாடல்கள் மேலெழுந்தது.
பிரான்ஸில் இலக்கியச் சந்திப்புக்கான செயற்பாடுகளில் முன்னின்றவர்களுள் முக்கியமான வர்களாக புஸ்பராஜh, சபாலிங்கம் மற்றும் பள்ளம், தேடல் பத்திரிகை களின் ஆசிரியர்களான கலைச் செல்வன், கலாமோகன், சுகன், முரளி போன்றவர்களையும் இவர்க ளுடன் இணைந்தவாறு ஸ்ராலின், உமா, நிருபா, விஜp, சிவராஜh, கற்சுறா, nஜபா, ரஞ்சனி, N'hபாசக்தி போன்றவர்களையும் குறிப்பிடலாம்.
இத்தகைய முக்கியத் துவத்தின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளில் இலக்கியச் சந்திப்பின் விரிவாக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் அதனைத் தடுப்பதற்காக 1995 ஆம் ஆண்டில் பரிஸில் வைத்து ஆசியா பதிப்பக ஆசிரியர் சபாலிங்கம் விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இலக்கியச் சந்திப்பின் உயிரோட்டமான இயக்கத்தில் பெரும் தயக்கமும் தடையும் ஏற்படுவதாக இந்நிகழ்வின் தாக்கம் அமைந்தது.
இந்த தயக்கத்திலிருந்து 1997 இல் மீண்டெழும் நிலையாக இலக்கியச் சந்திப்பு பரிஸில் உயிர்ப்பு பெற்றது. அச்சந்திப்பில் சபாலிங்கம் நினைவாக "இனியும் சூழ்கொள்" எனும் இலக்கியச் சந்திப்பு மலர் வெளியிடப்பட்டு இலக்கியச் சந்திப்பின் தொடர்ச்சியும் அதில் பதிவு பெறுகிறது.
இவ்வாறு 1988 இல் ஆரம்பித்த இலக்கியச் சந்திப்பின் உரையாடல்கள் கடந்த 25 வருடங்களில் Nஜர்மன், பிரான்ஸ், என்ற தொடரிலிருந்து சுவிஸ், லண்டன், நெதர்லாந்து, நோர்வே, கனடா ஆகிய நாடுகளில் 40 அமர்வுகளை பதிவு செய்திருக்கின்றமை இதன் ஆரோக்கியத்திற்கும் வரலாற்று அவசியத்திற்குமான முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.
இலக்கியச் சந்திப்பானது ஒரு நிறுவனத் தன்மையற்று, தலைவர் செயலாளர் என்கின்ற நிர்வாக அதிகாரம் அற்று, ஒவ்வொரு இலக்கியச் சந்திப்பின் போதும் கலந்து கொள்கின்ற பங்களிப்பாளர்களின் அபிப்பிராயத்தின்படி அடுத்த உரையாடலுக்கான இடமும்
செயற்பாடும் தீர்மானிக்கப்பட்டு ஜனநாயக முறையில் அதன் தொட ர்ச்சி கைமாறப்பட்டு வருகின்றமை இதன் வெற்றிக்கும் தொடர்ச்சிக்கும் உறுதியளித்திருக்கிறது.
இலங்கையில் இலக்கியச் சந்திப்பின் முன்வைப்பும் விமர்சனமும்
இலக்கியத்திற்கான ஒரு அரசி யலை வகுத்து தொடர் உரையாடல்களை நிகழ்த்திய இலக்கிய சந்திப்பினை இலங்கையில் நடத்துவதற்கான கோரிக்கை 2011 இல் 38 வது இலக்கிய சந்திப்பு பிரான்சில் நடைபெற்றபோது முன்வைக்கப்பட்டது. ஆனாலும் அதன் முடிவு இறுதியில் கனடாவில் நடத்துவதற்கான தீர்மானத்தை எடுத்தது.
சுமதி ரூபனின் ஏற்பாட்டில் 39 வது இலக்கியச் சந்திப்பு கனடாவில் நடைபெற்ற போது தொடர்ந்தும் 40வது இலக்கியச் சந்திப்பினை இலங்கையில் நடத்துவதற்கான விருப்பங்கள் கோரப்பட்டது. அப்போது அதற்கு மாற்றமாக லண்டனில் நடத்துவதற்கான விருப்பங்களும் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் இலக்கியச் சந்திப்பிற்கான இடத்தினை தீர்மானிக்கும் மரபு மீறப்படுவதாக 40 வது இலக்கியச் சந்திப்பு இலங்கையிலா? லண்டனிலா? என்ற கருத்து வேறுபாடுகளுக்குள் இருதரப்பினரும் பேசி இணக்கம் காண வேண்டிய நிலை ஏற்பட்டது.
இறுதியில் இலங்கையில் நடத்துவதற்கான விட்டுக்கொடுப்புடன் லண்டனில் நடத்துதற்கான தரப்பினர் விலகி இருந்தனர். பின்னர் உள்ளகரீதியாக லண்டனில் நடத்துவதற்கு முன்நின்றவர்களுக்குள் என்ன ஏற்பாடுகள் நடந்ததோ தெரியாது மீண்டும் முடிவில் மாற்றம் செய்து லண்டனில் நடத்துவதற்கான கோரிக்கையினை விடாப்பிடியாக முன்வைத்து 40 வது இலக்கியச் சந்திப்பு இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் லண்டனில் நடைபெற்று முடிந்தது. இதன் முக்கிய ஏற்பாட்டாளராக எம்.பௌசர் செயற்பட்டிருக்கிறார்.
இந்தப் பின்னணியில் 41 வது இலக்கியச் சந்திப்பினை இலங்கையில் நடத்துவதற்கான தீர்மானம் லண்டன் சந்திப்பில் உறுதியாக்கப்பட்டது. இலக்கியச் சந்திப்பினை இலங்கையில் நடத்துவதற்கான விருப்பங்களை முன்வைத்து தொடர்ந்தும் அதனை விடாது முன்னெடுத்து செயற்பட்டவர்களுள் பிரான்ஸ் மற்றும் லண்டனில் வாழும் தேவதாஸ், ராகவன், அசூறா, N'hபா சக்தி, முரளி, உமா, சந்தோஸ், தமயந்தி, பானு, விஜp, நிர்மலா, கீரன் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
41வது இலக்கியச் சந்திப்பிற்கான செயற்பாடுகளை இலங்கையில் ஒருங்கிணைத்துச் செயற்படுத்துவதற்கான செயற்பாட்டாளர்கள் ஒரு செயற்குழுவாக தீர்மானிக்கப்பட்டதற்கமைய இதன் செயற்பாடுகள் இலங்கையில் செயற்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இச்செயற்குழுவில் ஆத்மா, நவாஸ் சௌபி, லெனின் மதிவானம், கருணாகரன், யோகருணன், நிலாந்தன் பேன்றவர்கள் உள்வாங்கப்பட்ட நிலையில் இவர்களால் ஒன்றுபட்டு தொடர்பாடுவதிலும் செயற்படுவதிலும் நடைமுறைசார்ந்த சிரமங்கள் இருந்ததன் காரணமாக இச்செயற்குழுவில் அவர்களால் முழுமையாகச் செயற்பட முடியவில்லை.
இதில் மற்றுமொரு விடயமாக இலக்கியச் சந்திப்பினை இலங்கையி;ல் யாழ்ப்பாணத்தில் நடத்துவது தொடர்பாக எதிர்வினைகள் உருவாகிய நிலையில் இதில் சிலர் செயற்படாத அமைதி நிலையிலும் இருந்தனர். ஆனாலும் இலக்கியச் சந்திப்பிற்கான தீவிர செயற்பாட்டாளர்களாக வாசுகி, திருவரங்கன், ரெங்கன், அகல்யா, கருணாகரன், தமிழ்அழகன் போன்றவர்கள் செயற்பட்டு இலக்கியச் சந்திப்பின் நிறைவான வெற்றிக்கு உழைத்தனர்.
இவ்வாறான ஒரு தொடர்ச்சியைக் கொண்ட இலக்கியச் சந்திப்பின் பாரம்பரியம் என்பது மிகச் சுதந்திரமான உரையாடலுக்கான குரல்களை பதிவு செய்வதாகவே இருந்திருக்கிறது. குறிப்பாக விடு தலை போராட்டத்திற்குள் மறைந் திருந்த வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதும் கருத்துக் கூறுவதும் இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட ஒரு ஒடுக்குமுறையை உருவாக்கி இருந்தது.
போராட்ட வன்முறைகளுக்கு எதிராக மனிதாபிமான, ஜனநாயகக் கருத்துக்களை முன்வைப்பவர்களை துரோகிகள் என்று அடையாளப்படுத்தும் அளவிற்கு கருத்துச் சுதந்திரத்தின் அரசியல் காணப்பட்ட நிலையில் இலக்கியச் சந்திப்பின் உரையாடல்கள் அவற்றை கட்டுடைத்து மிகச் சுதந்திரமாகவும் துணிச்சலாகவும் தமது உரையாடல்களை முன்னெடுத்து வந்திருக்கிறது.
ஆயுதப் போரட்டத்தினாலும், அதற்கு எதிரான படையினரின் தாக்குதலாலும் இலங்கையில் யுத்தம் என்ற பெயரினால் நடந்த அனைத்து ஜனநாயக மீறல்களையும் தமிழ், முஸ்லிம். சிங்கள சமூகங்கள் சார்பில் இலக்கியச் சந்திப்புக்கள் மிக வெளிப்படையான கருத்துக்களால் சுதந்திரமாகப் பேசியிருக்கிறது பதிவு செய்துமிருக்கிறது.
இந்தப் பாரம்பரியத்திலிருந்து விடுபட்டு இலங்கையின் இலக்கியச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதாக அதற்கான எதிர்குரல ;கள் ஒருசில இலக்கியகாரர்களிட மிருந்து எழுந்தது. தற்போதுள்ள இலங்கை அரசுக்கு சார்பான ஒரு இலக்கியச் சந்திப்பாக இதனை விமர்சித்து குற்றம் சுமத்தப்பட்ட பேச்சுக்களும் பேசப்பட்டது.
இலக்கியச் சந்திப்பின் தனித்துவ மும், பாரம்பரியமும் கெடாமல் கருத்துச் சுதந்திரத்துடன் யாழ் இலக்கியச் சந்திப்பு நடைபெற்றதா? என்ற கேள்வியைக் கேட்கின்ற போது அது இத்தகைய குற்றம் சுமத்துதலையும் விமர்சனங்களையும் செய்தவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைவதாகவே பதிலளித்து அனைத்து விமர்சனங்களையும் பொய்யாக்கி இருக்கிறது.
»»  (மேலும்)

| |

வேட்பாளர் தெரிவில் சாதிவெறி.......... பேராட்டத்தில் தலித்துக்கள்.............

யாழில் தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் உண்ணாவிரத போராட்டம் :தமிழர் விடுதலை கூட்டணியில் உள்ள - தலித் சமூகத்தைச் சேர்ந்த தங்க முகுந்தன், செல்லன் கந்தையா, செல்லையா விஜிதரன் ஆகிய மூவர் இன்று திங்கட்கிழமை 29ம் திகதி காலை முதல் யாழ்.தந்தை செல்வா சதுக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..

வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பானது வேட்பாளர்களை சாதி அடிப்படையில் தெரிவு செய்கின்றதென்றும் தமிழர் விடுதலை கூட்டணியில் பல்வேறு சாதிய பாகுபாடுகள் இடம்பெறுதாகவும் தெரிவித்தே இவ் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்தாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றதாகவும் சாதியின் அடிப்படையில் வேட்பாளர் நியமித்துள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை நியமிப்பதாக வாக்குறுதி அளித்து விட்டு தற்போது அந்த வாக்குறுதியை மீறியுள்ளதாகவும் குறிப்பிட்ட உண்ணாவிரதிகள் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்காது, தனிப்பிட்ட விருப்பங்களின் பேரில்,தமக்கு வேண்டப்பட்டவர்களும் குடும்பத்தவருமே வேட்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
»»  (மேலும்)

| |

மனைவியை காப்பாற்ற மண்டியிட்ட மாவை

இந்தியாவில் வசிக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மனைவியை இந்தியாவிலிருந்து விரட்டிவிடுவதாகவும், அவ்வாறு செய்யாமலிருக்க வேண்டுமென்றால் சீ.வீ. விக்னேஸ்வரன் வட மாகாண சபையில் முதலமைச்சர் பதவிக்காக போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் எனவும்அதிகாரம் மிக்க இந்தியர்கள் பலர் மாவை சேனாதிராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

வட மாகாண சபையின் முதலமைச்சரின் பெயரை முன்மொழிவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகிக் கொண்டிருக்கின்ற இவ்வேளை, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது எனக் குறிபிடப்படுவதுடன், அமெரிக்கத் தூதுவராலயமும் விக்னேஷ்வரனை முதலமைச்சர் அபேட்சகராக்குவதற்காக பாரிய முன்னெடுப்புக்களைச் செய்துவருகின்றது என்பதும் தெரியவருகின்றது. அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் அமெரிக்கத் தூதுவராலயம் பலமுறை முக்கிய உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் அறியக்கிடக்கிறது. எதிர்காலத்தில் இலங்கையை இரண்டாகப் பிரித்து, இந்தியாவையும் இரண்டாகப் பிரிக்கின்ற சீர்திருத்த யுத்தத்திற்காக மிகவும் பொருத்தமானவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியான விக்னேஷ்வரனே என்பது அமெரிக்காவின் கருதுகோளாக இருக்கின்றது.

எவ்வாறாயினும், பல கட்சிகளுடன் ஒன்றிணைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மை விருப்பாக இருப்பது என்னவென்றால், மாவை சேனாதிராவை வட மாகாண முதலமைச்சராக்க வேண்டுமென்பதே. சேனாதிராஜாவும் இதற்கு விருப்புத் தெரிவித்து ஆயத்த நிலையில் இருக்கின்ற வேளை, இந்தியாவின் ரோ இரகசிய சேவை தலையிட்டு, இந்தியாவில் வசிக்கின்ற அவரின் மனைவியை இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிடுவதாக அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இறுதியில் பெரும்பான்மையினரின் விருப்புத் தன்பக்கம் இருக்கின்றபோதும் ரோவின் தலையீட்டினால் தன் மனைவி மீது இருக்கின்ற பாசத்தினால் மாவை சேனாதிராஜா தனது குறிக்கோளை கைவிட்டுவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. 
»»  (மேலும்)

| |

கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் விபரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனுத்தாக்கல் ஐந்து மாவட்டங்களிலும் இன்று மேற்கொள்ளப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். முதலமைச்சார் வேட்பாளர்; வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் இன்று  காலை 11.00 மணியளவிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதாரகலிங்கம் தலைமையிலும் வவுனியா மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையிலும் மன்னார் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தலைமையிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். 
யாழ். மாவட்ட வேட்பாளர்கள் விபரம், 
தமிழரசுக்கட்சி 
சி.வி. விக்னேஸ்வரன் (முதலமைச்சர் வேட்பாளர்) சீ.வீ.கே.சிவஞானம், பாலசந்திரன் கஜதீபன், ச. சுகிர்தன், எ.ஆனந்தி எஸ்.சயந்தன் எஸ். பரம்சோதி, எஸ். சிவயோகம், ஆர்.ஆர்னோல்ட், ரெலோ எம். சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம், எஸ். குதாஸ்,
 புளொட்
தர்மலிங்கம் சித்தார்த்தன் 
தமிழர் விடுதலை கூட்டணி 
தம்பிப்பிள்ளை தம்பிராசா, கந்தப்பு தர்மலிங்கம்
 ஈ.பி.ஆர்.எல்.எப் 
எஸ்.சர்வேஸ்வரன், எஸ். ஜங்கரநேசன், ஆர். ஜெய்சேகரம், என்.வி. சுப்பிரமணியம் ஆகியோரே போட்டியிடவுள்ளனர். 
»»  (மேலும்)

| |

தனித்துப் போட்டியிட்டாலும் அரசுக்கே எமது ஆதரவு: ஈரோஸ்

'வடமாகாண சபைத் தேர்தலில் ஈரோஸ் தனித்து போட்டியிட்டாலும் ஆளும் மஹிந்தராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கே ஆதரவு தெரிவிக்கும். எமது கட்சியின் ஆதரவு என்றுமே ஆழும் அரசாங்கத்திற்குத்தான்' என ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்தார். 'தமிழ் தேசிய கூட்டமைப்பு 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது. நாடாளுமன்றத்திலும் கிழக்கு மாகாண சபையிலும் ஆசனங்களை வைத்துக்கொண்டு தமிழ் மக்களுக்காக செய்ததென்ன? வடக்கி;ல் அவர்களுக்கு மாகாண சபை ஆட்சி செல்லுமானால் இதேநிலைதான் உருவாகும்' என்றும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு ஈரோஸ் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 'வடக்கிலே அழிந்து போன பூமி மீள்கட்டமைப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக அரசாங்கம் பல கோடி ரூபாய்களை செலவிட்டுவருகின்றது. இந்தப்பணிகள் தொடர்நது வடபகுதி அபிவிருத்தியின் உச்சத்தைத்தொட வேண்டுமானால் வடக்கில் மாகாண சபையை அரசாங்கம் கைப்பற்றவேண்டும். இல்லாவிட்டால் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகத்திலுள்ள உள்ளூராட்சி சபை பிரதேசங்களை போலதான் வடக்கும் மாறும்' என தெரிவித்தார். 
»»  (மேலும்)

7/09/2013

| |

களுதாவளை மகா வித்தியாலயம் பட்டிருப்பு வலயத்தில் முதலாவது 1AB Super School ஆக தரமுயர்கிறது

மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயமானது தொழில்நுட்ப பிரிவு ஆரம்பிக்கப்படுவதனால். இப்பாடசாலையானது.பட்டிருப்பு வலயத்தில் முதலாவது 1AB Super School ஆக தரமுயர்கிறது. இது சம்மந்தமான பெற்றோருக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில்  இடம்பெற்றது.
»»  (மேலும்)

7/08/2013

| |

குருநாகலிலிருந்து 50 இளைஞர் யுவதிகள்; மட்டக்களப்பிற்கு விஜயம்

இளைஞர் பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் குருநாகலில் இருந்து 50 இளைஞர் யுவதிகள் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இளைஞர் யுவதிகளை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமாகிய சி.சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராசா, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி ஜே.கலாராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நேற்று 5 ஆம் திகதி வருகை தந்த மேற்படி 50 இளைஞர் யுவதிகளும் புதுக்குடியிருப்பில் உள்ள வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மட்டக்களப்பில் தங்க உள்ள இவர்கள் மட்டக்களப்பில் உள்ள 50 இளைஞர் யுவதிகளுடன் சென்று அனைத்து விடயங்களையும் பார்வையிட உள்ளனர்.
இதன்போது, இவர்கள் மட்டக்களப்பு மக்களின் கலாசாரம், பாரம்பரியங்கள், மொழி பழக்க வழக்கங்கள் என்பனவற்றை அறிந்துகொள்வதுடன் மட்டக்களப்பின் புராதன இடங்களையும் பார்வையிட உள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பில் இருந்து 50 இளைஞர் யுவதிகள் இம்மாத இறுதியில் குருனாகலுக்குச் சென்று இதே இளைஞர் யுவதிகளுடன் அவர்களது வீடுகளில் இருந்து அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, அவர்களது பண்பாடுகளையும் அறிந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

7/06/2013

| |

அமரர் தங்கத்துரை நினைவு தினம் அனுட்டிப்பு

05.07.1997 ஆம் நாள் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில்
இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வு முடிவுற்றதும் வீடு நோக்கி திரும்புகையில் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார்.
அன்றைய தினம் மேற்படி கல்லூரியில் சம காலத்தில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் கைக்குண்டு தாக்குதலில் மேற்படி கல்லூரி அதிபர் உட்பட ஐவர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
17.01.1936 இல் மூதூர் பிரதேசத்தில் உள்ள கிளிவெட்டி கிராமத்தில் பிறந்த அ. தங்கத் துரை தனது ஆரம்ப கல்வியை தி/ கிளிவெட்டி அ. த. க. பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர் தரக் கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் கற்றார். பின்னர் 1979 – 1980 இல் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை கற்று சட்டத்தரணியானார்.
நீர்ப்பாசன திணைக்களத்தில் லிகிதராக (எழுதுநர்) அரச நியமனம் பெற்ற அ. தங்கத்துரை சோமபுரம், இரத்தினபுரி, கொழும்பு முதலான இடங்களில் பணிபுரிந்துள்ளார்.
கொழும்பில் நீர்ப்பாசன திணைக்களத்தில் பிரதம லிகிதராக கடமையாற்றிய சமயம் இலங்கை யின் சிங்கள மொழிச் சட்டத்திற் கமைவாக 1970 இல் அமரர் அ. தங்கத்துரை அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அ. தங்கத்துரை அவர்கள் அப்போது மூதூர் தொகுதி தமிழ் பிரமுகர்களும் மக்களும் கேட்டுக்கொண்டதற் கிணங்கி 1970 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூதூர் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
மூதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1970 இல் 34 வயதில் தெரிவு செய்யப்பட்ட அ. தங்கத்துரை அப்போது வயதில் குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் திகழ்ந்தார்.
பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்கள் பணியே மகேசன் பணி என்னும் தாரக மந்திரத்தை மனதில் கொண்டு மூதூர் தொகுதி மக்களுக்கு அன்றைய காலகட்டத்தில் அளப்பரிய சேவையாற்றினார்.
புன்னகை ததும்பிய சிரித்த முகத்துடன் எவரையும் வரவேற்று அவர்களுடன் மனம் விட்டு பேசி அவர்களின் துயர் துன்பங்களை அறிந்து சேவை செய்யும் இயல்புடைய அரசியல்வாதியாக அ. தங்கத்துரை விளங்கினார். இவர் எச்சந்தர்ப்பத்திலும் எவருடனும் கோபம் கொண்டு பேசியது கிடையாது. எதிரியையும் நேசித்து நன்மை புரிந்தவர் இவர்.
அமரர் அ. தங்கத்துரை அவர்கள் 1970 – 1977 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தபோது மூதூர் தொகுதியின் அபிவிருத்திக்காக பல வகைகளில் சேவையாற்றி யுள்ளார். வீதி அபிவிருத்தி, பாலங்கள் நிர்மாணம், நீர்ப்பாசனத் துறை சார்ந்த அபிவிருத்தி, சமூகப் பொருளாதாரத் துறை சார்ந்த அபிவிருத்தி, கல்வித் துறை சார்ந்த அபிவிருத்தி முதலானவற்றை அப்போது மூதூர் தொகுதியில் மேற்கொண்டார்.
மூதூர் தொகுதியில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு அரச திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதில் அ. தங்கத்துரை தனது பதவிக் காலத்தில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பேசவும் எழுதவும் அ. தங்கத் துரைக்கு ஆற்றல் இருந்தமையால் அரசதுறை சார்ந்த எக்காரியத்தையும் இவரால் இலகுவாக செய்ய முடிந்தது. இதனால் பொது மக்களுடைய பல்வேறு அரச துறை சார்ந்த காரியங்களை இவரால் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடியதாகவிருந்தது.
அமரர் அ. தங்கத்துரை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் 1970 – 1977 காலப் பகுதியில் பதவி வகித்துள்ளார்.
இலங்கை அரசின் தேர்தல் தொகுதி நிர்ணய நடவடிக்கையினால் இரட்டை அங்கத்துவப் பாராளுமன்ற தேர்தல் தொகுதியாகவிருந்த மூதூர் தேர்தல் தொகுதி 1977 இல் ஒற்றை அங்கத்தவர் தேர்தல் தொகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இதேவேளையில் திருகோணமலை மாவட்ட சிங்கள மக்களின் நலன் கருதி அன்றைய 1970 – 1977 அரசினால் சிங்கள மக்களுக்காக புதிய சேருவில தேர்தல் தொகுதி திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது.
இதன் நிமித்தம் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதி, தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும் மூதூர் தேர்தல் தொகுதி முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் சேருவில தேர்தல் தொகுதி சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் அன்றைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசினால் உருவாக்கப்பட்டது.
இதனால் அமரர் தங்கத்துரையை 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மூதூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட முடியாத நிலையேற்பட்டது.
இந்நிலையில் 1970 இல் திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த அமரர் பா. நேமிநாதன் அவர்கள் 1977 இல் திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதை தவிர்த்து அமரர் அருணாசலம் தங்கத்துரை அவர்களை திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடச் செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன.
பொதுமக்களினதும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உயர்மட்டக் குழுவினர் சிலரதும் மேற்படி முயற்சி கைகூடாததால் அமரர் அ. தங்கத்துரை அவர்கள் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடவில்லை. இருந்தும் அதே ஆண்டில் மூதூர் தொகுதி தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முஸ்லிம் வேட்பாளர் எஸ். எம். மக்கீனுக்கு ஆதரவாக அ. தங்கத் துரை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இவர் செயற்பட்டார். இந்நிலையில் 1978 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரான கிளிவெட்டி கிராமத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் இவரையும் பொலிசார் தொடர்புபடுத்தி சந்தேகத்தின் பேரில் இவரைக் கைது செய்ததால் இவர் திருகோணமலை மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் (8) எட்டு மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து விடுதலையானார்.
1981 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் இவர் வேட்பாளராகப் போடியிட்டு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் அமோக ஆதரவைப் பெற்று அதிக வாக்குகளை பெற்று திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட அ. தங்கத்துரை மக்கள் தொண்டனாக திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு சேவை செய்தார். திருகோணமலை மாவட்ட சமூகப் பொருளாதார, கல்வி கலாசார அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.
இந்நிலையில் 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இவர் தனது திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியை துறந்த இவர் திருகோணமலை மாவட்ட மக்களுடன் மக்கள் தொண்டனாக திருகோணமலையிலே வாழ்ந்தார்.
1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு திருகோணமலை மாவட்டத்தில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட இவர் மாவட்ட மக்களுக்கு அளப்பரிய சேவைகளையாற்றி வந்தார்.
இந்நிலையில் தான் 1997 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஐந்தாம் திகதி (05.07.1997) திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவினை தொடர்ந்து பயங்கரவாதியினால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
அமரர் தங்கத்துரை மரணித்த போதும் அவர் திருகோணமலை மாவட்டத்திற்கும் மாவட்ட மக்களுக்கும் செய்த சேவைகள் மக்கள் மனதைவிட்டு நீங்கவில்லை. அன்னாரது சேவைகள் மக்கள் மனதில் நிரந்தரமாக பதிந்துள்ளன.

1997 ஜுலை 5இல் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்த மகளிர் கல்லூரியின் புதிய கட்டிடத் திறப்புவிழாவின் நிறைவில் குண்டுத் தாக்குதலில் பலியான அமரர் அருணாசலம் தங்கத்துரை அவர்களின் 16ஆவது நினைவுதினம் இன்று மாலை 5.00 மணியளவில் தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. கூடவே அவருடன் உயிர்நீத்த அதே கல்லூரியின் அதிபர் திருமதி. இராஜேஸ்வரி தனபாலசிங்கம், அதே கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர் திரு. பெ.சி. கணேசலிங்கம், திருக்கடலூர் நாமகள் வித்தியாலய அதிபர் திரு. சி. ஜோசப், கொழும்பு அதிபர் திரு. கா. சீவரத்தினம் பொறியியலாளர் திரு. வே. ரட்ணராஜா ஆகியோரும் நினைவுகூரப்பட்டனர். யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் இரா. சங்கையா, முன்னாள் யாழ் மாநகர முதல்வர் செல்லன் கந்தையன், கட்சியின் உறுப்பினர் எஸ்.கே.  முத்துலிங்கம், வேலணை பிரதேச சபை உறுப்பினர் கு. சிவகுலசிங்கம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ந. மதியழகராசா மலர்மாலை சூட்டினார். முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர் தங்க. முகுந்தன் தனது அரசியல் குருவின் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டதுடன் அவருக்கு மலரஞ்சலியும் நிகழ்த்தினார்.
»»  (மேலும்)

| |

வட மாகாணசபை தேர்தலை நடத்த ஜனாதிபதி பணிப்புரை

NPCவட மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணையாளருக்கு பிரகடனம் வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் வட மாகாண சபையை நிறுவுமாறும் ஜனாதிபதி தேர்தல்கள் ஆணையாளருக்கு பணித்துள்ளார்.
ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29இல் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும்.
இதன்படி 1987 நவம்பர் 14இல் இலங்கை பாராளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது. 1988 பெப்ரவரி 3 ஆம் திகதி ஒன்பது மாகாணசபைகள் உருவாகக்ப்பட்டன.
மாகாண சபைகளுக்கான முதலாவது தேர்தல்கள் 1988 ஏப்ரல் 28ஆம் திகதி வடமத்திய, வடமேல், சபரகமுவா மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு இடம்பெற்றன. 1988 சூன் 2 இல் மத்திய, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அன்று இலங்கையின் ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஏழு மாகாண சபைகளினதும் ஆட்சியைக் கைப்பற்றியது.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 டிசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனாலும் இந்த பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்க இலங்கை அரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. 1988 செப்டம்பர் 2 இல் அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜயவர்தன இரு மாகாணங்களையும் இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரு மாகாணசபையாக நிருவகிக்க உத்தரவு பிறப்பித்தார்.
இந்த இணைந்த மாகாணசபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.
1993 ஆம் ஆண்டில் வட-கிழக்குத் தவிர்ந்த ஏழு மாகாணங்களுக்கு 2வது தேர்தல்கள் இடம்பெற்றன. ஆறு மாகாணங்களில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. மேற்கு மாகாணசபையை முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான மக்கள் கூட்டணி கைப்பற்றியது.
தெற்கு மாகாணத்தில் ஐதேகவின் சில உறுப்பினர்கள் கட்சி மாறியதை அடுத்து அங்கு 1994 ஆம் ஆண்டில் சிறப்புத் தேர்தல் நடத்தப்பட்டது. மக்கள் கூட்டணி வெற்றி பெற்றது.
3வது மாகாணசபைத் தேர்தல்கள் 1999 இல் வடகிழக்குத் தவிர்ந்த 7 மாகாணங்களுக்கு நடத்தப்பட்டன. ஆளும் மக்கள் கூட்டணி வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணசபைகளைக் கைப்பற்றியது. ஏனைய மாகாணங்களில் சிறிய கட்சிகளின் துணையுடன் ஆட்சியமைத்தது.
2002ஆம் ஆண்டில் மத்திய மாகாண சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்கள் கூட்டணிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து ஐதேக அங்கு ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.
4வது மாகாணசபைத் தேர்தல்கள் ஏழு மாகாணங்களுக்கு 2004 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டன. இலங்கையின் ஆளும் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அனைத்து சபைகளையும் கைப்பற்றியது.
வடக்கு மாகாணம் தவிர்ந்த எட்டு மாகாணங்களுக்கு 5வது மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அனைத்து சபைகளையும் கைப்பற்றியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தல்களில் பங்கேற்கவில்லை.
»»  (மேலும்)

| |

திருகோணமலை மாணவர்கள் படுகொலை தொடர்பில் 12 பேர் கைது

இந்த ஐந்து மாணவர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் மீது சர்வதேச மட்டத்தில் கடுமையான விமர்சனங்கள் இருந்துவருகி்ன்றன திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதியன்று ஐந்து மாணவர்கள் கொலையுண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களில், அக்காலப்பகுதியில் திருகோணமலை பகுதியில் பொலிஸ் பரிசோதகராக (இன்ஸ்பெக்டர்) இருந்து தற்போது உதவி அத்தியட்சகராக (ஏஎஸ்பி) பதவி உயர்வு பெற்றுள்ள அதிகாரியும் ஒருவர்.
திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்களை தலைமை நீதவான் யூ.எல்.எம். அஸ்கர் எதிர்வரும் 18ஆம் திகதிவரை அநுராதபுரம் சிறைச்சாலை விளக்கமறியலில் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.திருகோணமலை கடற்கரையில் காந்திசிலை அருகே, இந்த ஐந்து மாணவர்களும் 2006-ம் ஆண்டில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 6 ஆண்டுகள் கடந்தும் இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்றும் தமக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் கொலையுண்ட ரஜீகரின் தந்தை டாக்டர் மனோகரன் இந்த ஆண்டு ஐநா மனித உரிமைப் பேரவையில் நடந்த மீளாய்வு மாநாட்டில் பேசினார்.
இந்தக் கொலைகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்துள்ளன.
இந்தக் கொலைகள் அடங்கலாக இன்னும் பல மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த ஆணைக்குழு, விசாரணை முழுமை பெறாமலேயே அந்த விசாரணைகளை 2009-ம் ஆண்டில் முடித்துக்கொண்டிருந்தது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பான சாட்சியங்களை பதிவு செய்வதில் உள்ள சிக்கல்களைக் காரணம் காட்டி அந்த ஆணைக்குழு பணியை முடித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

7/05/2013

| |

"CHECK MATE"

View 1013891_10200745128448796_2085280701_n.jpg in slide showமட்டக்களப்பைச் சேர்ந்த பத்மநாதன் கோவர்த்தனன் என்ற இந்த இளைஞர் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்றவர் .இவர் தற்போது திருச்சி பல்கலைகழகத்தில் ஹோட்டல் முகாமைத்துவத்தில் தனது டிப்ளோமாவினை நிறைவு செய்துள்ளார்.

அத்தோடு தென் இந்திய திரை இயக்குனர் மட்டக்களப்பைச் சேர்ந்த பாலு மகேந்திரா அவர்களின் பயிற்சி பட்டறையில் மூன்று மாத நடிப்பு பயிற்சியும் ஒரு வருட இயக்குனர் பயிற்சியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவர் பத்மநாதன் (மட்டக்களப்பு தயா மோட்டோர்ஸ் நிறுவன பங்காளர்) மற்றும் சூரியகலா தம்பதிகளின் இரண்டாவது புதல்வன் ஆவார்.இவர் குறும்படங்கள் மீது கொண்ட ஆர்வத்தினால் தற்போது "CHECK MATE" எனும் குறும்படத்தை எழுதி இயக்கி அதில் ஒரு கதாபாத்திரத்திலும் ஏற்று நடித்துள்ளார்.

இந்தியாவிலும் இலங்கையிலும் சேர்த்து மொத்தமாக 8 விருதுகளை பெற்ற "நானும் ஒரு தாய்" எனும் குறும்படத்தை தொடர்ந்து இவர் எழுதி இயக்கிய இரண்டாவது குறும்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இக் குறும்படத்தில் "எங்கேயும் எப்போதும்" திரைப்படத்தில், கதாநாயகி அனன்யாவின் அக்காவாக ஏற்று நடித்து பெயர் வாங்கிய நடிகை வினோதினி வைத்யநாதன் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் இவர் "கடல்" மற்றும் "யமுனா" போன்ற திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவருக்கு துணையாக "மாற்றான்" "மௌன குரு" "எதிர்நீச்சல்" "சிங்கம்-2" போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் அருள் ஜோதி பிரதான வேடத்திலும்,
"ஜில்லுனு ஒரு கலவரம்" குறும்படத்தில் கதாநாயகி வேடம் ஏற்ற ஆர்யா ஹரிதாஸ்,ராஜன் மாயருள்,கீதா குணாளன் மற்றும் இக் குறும்படத்தின் இயக்குனர் கோவர்தன் சிறிய வேடத்திலும் நடித்துள்ளனர்.

மட்டக்களப்பை சேர்ந்த "மண்" திரைப்படத்தில் நடித்த கதாநாயகனும் இலங்கையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற ஜனகன் சுதாகரன் லண்டன் இல் இருந்து இக் குறும்படதிற்கான அனைத்து தயாரிப்பு செலவுகளையும் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இக் குறும்படத்துக்கான ஒளிப்பதிவை "ஜில்லுனு ஒரு கலவரம்" குறும்படத்தை இயக்கி விருது பெற்ற சிவராஜ் பரமேஸ்வரனும், இசையை "நானும் ஒரு தாய்" மற்றும் "ஜில்லுனு ஒரு கலவரம்" குறும்படங்களுக்கு இசை அமைத்த Caine W Sidharth உம், படத்தொகுப்பை (editing) "யோவான்" குறும்படத்துக்காக சிறந்த படதொகுப்பாளர் (editor) விருதை பெற்ற Sreyes உம்,இணை இயக்குனராக "ஜில்லுனு ஒரு கலவரம்" குறும்படத்தில் பணியாற்றிய அபிநயா குணாளனும், உதவி இயக்குனர்களாக vivian Trishan (பாஸ் மார்க் 35/100 குறும்படத்தை இயக்கிய மட்டக்களப்பை சேர்ந்தவர்) , M.Manu மற்றும் ஆர்யா ஹரிதாஸும், ஒலிப்பதிவை D.A.வசந்த் (Vibrant Studios) உம் போஸ்டர் டிசைன்சை P.துஷாந்த் உம் மேட்கொண்டுள்ளனர்.

இக் குறும்படத்தின் வெளியீடானது -
* இம் மாதம் (July) 14 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை அன்று சென்னை வடபழனி இல் உள்ள AVM PREVIEW திரையரங்கத்தில் பிற்பகல் 4.30 மணிக்கும்

* வருகின்ற ஆவணி (August) மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை அன்று மட்டக்களப்பில் உள்ள YMCA மண்டபத்தில் பிற்பகல் 4.30 மணிக்கும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
»»  (மேலும்)

| |

குவர்னிகா - 41வது இலக்கியச் சந்திப்பு மல

தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும்  விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு. 

கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து  எழுதப்பட்ட  எழுபத்தைந்துக்கும்  அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான  களம்.

 நிலாந்தன் , சோலைக்கிளி, யோ. கர்ணன், அ.முத்துலிங்கம், தமிழ்க்கவி, மு. நித்தியானந்தன், சண்முகம் சிவலிங்கம், ந.இரவீந்திரன், ஸர்மிளா ஸெய்யித், தேவகாந்தன், பொ.கருணாகரமூர்த்தி, ஏ.பி.எம். இத்ரீஸ், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கற்சுறா, செல்வம் அருளானந்தம், லெனின் மதிவானம், லிவிங் ஸ்மைல் வித்யா, றியாஸ் குரானா, எம் .ரிஷான் ஷெரீப், ம.நவீன், ஓட்டமாவடி அறபாத், ஹரி ராஜலட்சுமி, கருணாகரன், மா. சண்முகசிவா, கறுப்பி, மோனிகா, தமயந்தி, பூங்குழலி வீரன், எம்.ஆர்.ஸ்ராலின், திருக்கோவில் கவியுவன், இராகவன், லீனா மணிமேகலை, ராகவன், தேவ அபிரா, கே.பாலமுருகன், குமரன்தாஸ், விஜி, யாழன் ஆதி, லெ. முருகபூபதி, தர்மினி, ஆதவன் தீட்சண்யா, அகமது ஃபைசல், கலையரசன், அ. பாண்டியன், அஜித் சி. ஹேரத், ச.தில்லை நடேசன், எஸ்.எம்.எம்.பஷீர், மகேந்திரன் திருவரங்கன், மஹாத்மன், லதா, ஷாஜஹான், பானுபாரதி, யாழினி, விமல் குழந்தைவேல், மேகவண்ணன், அஷ்ரஃப் சிஹாப்தீன், மெலிஞ்சிமுத்தன், யோகி, அஸ்வகோஷ், ந.பெரியசாமி, தேவதாசன், ராஜன் குறை, ஷோபாசக்தி... மற்றும் பலரின் எழுத்துகளுடன் எண்ணூறுக்கும் அதிகமான பக்கங்கள், 'கருப்புப் பிரதிகள்' வெளியீடு.

2013 ஜுலை 20ம் தேதி யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பில் மலர் வெளியிடப்படும்.  பிரதிகளைப் பெறுவதற்கு:
இலங்கை - கருணாகரன், poompoom2007@gmail.com /
இந்தியா - கருப்புப் பிரதிகள், karuppupradhigal@gmail.com /
மலேசியா - ம.நவீன், na_vin82@yahoo.com.sg /
அவுஸ்திரேலியா -லெ. முருகபூபதி, letchumananm@gmail.com /
கனடா - மெலிஞ்சிமுத்தன், melinchi10@gmail.com /
பிரித்தானியா -ராகவன், raagaa@hotmail.com /
நெதர்லாந்து -கலையரசன், kalaiy26@gmail.com /
ஜேர்மனி -ஜீவமுரளி,  jsinnatham@aol.com /
டென்மார்க் - கரவைதாசன், karavaithasan@yahoo.dk /
நோர்வே - தமயந்தி, simon.vimal@yahoo.no /
பிரான்ஸ் - ஷோபாசக்தி, shobasakthi@hotmail.com  
»»  (மேலும்)

7/04/2013

| |

1906ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட செட்டிபாளையம் வைத்தியசாலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வரலாற்றினைக்கொண்ட வைத்தியசாலைக்கு செட்டிபாளையம் கிராமிய வைத்தியசாலையில் நோயாளர் விடுதிக்கான அடிக்கல் நடப்பட்டது.
கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் 60 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் இதற்கான முதல் கட்ட பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி அமலநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.முகம்மது மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சரின் இணைப்பாளருமான பூ.பிரசாந்தன்,மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி ஞானகுணாளன்,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம்,சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக அபிவிருத்திசெய்யப்படாமல் இருந்த இந்த வைத்தியசாலைக்கு முதன்முறையாக இரண்டு மாடிகளைக்கொண்ட நோயாளர் விடுதி அமைக்கப்படவுள்ளது.
செட்டிபாளையம் கிராமிய வைத்தியசாலையின் கட்டிட நிர்மாணப்பணிக்கு ஒரு கோடி ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1906ஆம் ஆண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை முன்னைய காலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வைத்தியசாலையாக இருந்ததாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி அமலநாதன் தெரிவித்தார்.
கல்லடி பாலம் அமைக்காத காலப்பகுதியில் மட்டக்களப்பு நகருக்கான போக்குவரத்துகள் கிட்டங்கி பாலம் ஊடாக இடம்பெற்றபோது மட்டக்களப்பு மத்திய பகுதியான செட்டிபாளம் அமைந்திருந்ததன் காரணமாக வைத்திசாலை அன்றைய காலத்தில் பிரசித்திபெற்றதாக இருந்ததாக தெரிவித்தார்.அன்றைய நாளில் ஒரு தளவைத்தியசாலை போன்று செயற்பட்டுவந்தது.
வரலாற்று பின்புலத்தைக்கொண்டுள்ள இந்த வைத்தியசாலை அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலேயே கடந்த காலத்தில் இயங்கிவந்தது.கடந்த காலத்தில் இடம்பெற்ற போர்ச்சூழலும் இதற்கு காரணமாகும்.1991ஆம் ஆண்டு தொடக்கம் இப்பிரதேசம் ஒரு யுத்த நச்சுவலயமாக காணப்பட்டது.இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி இடம்பெற்ற மோதல்கள் காரணமாக இந்த நிலையிருந்தது.
இந்த வைத்தியசாலையானது களுதாவளை தொடக்கம் தாழங்குடா வரையிலான பகுதிகளில் உள்ள மக்களுக்கு சேவையாற்றக்கூடியது.இதுசேவை மையப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்த வைத்தியசாலையினை அபிவிருத்திக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட சில தடங்கள்களினால் அவை மேற்கொள்ளப்படவில்லை.இதனை அபிவிருத்திசெய்வதில் நான் உட்பட இந்த பிரதேச மக்கள் அக்கரை செலுத்தாததே இந்த நிலைமைக்கு காரணமாகும்.
இதனை கருத்தில் கொண்டு இதனை இனியாவது அபிவிருத்திசெய்யவேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.இதன் பௌதீக வளங்கள்,ஆளணிப்பற்றாக்குறை உட்பட அடிப்படை வசதிகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முதல் கட்டமாக எடுக்கப்பட்டுள்ளன என்றார்.இதேவேளை
செட்டிபாளையம் கிராமிய வைத்தியசாலைக்கு செட்பாளையம் கண்ணகியம்மன் ஆலயத்தினால் ஒன்றரை ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது.
செட்டிபாளையம் கிராமிய வைத்தியசாலை அபிவிருத்திசெய்யப்படவுள்ள நிலையில் தற்போதைய வைத்தியசாலையில் இடவசதியின்மை காரணமாக கண்ணகியம்மன் ஆலய பரிபாலன சபையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த காணி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான காணி உறுதிப்பத்திரம் இன்று உத்தியோகபூர்வமாக ஆலய தலைவரினால் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.முகம்மது மன்சூரிடம் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அமைச்சரினால் அமைச்சின் செயலாளர் அமலநாதனிடம் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது.
»»  (மேலும்)

| |

உறவுகளின் நினைவுகளை மீட்டும் உதைபந்தாட்ட போட்டி

முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகத்திலிருந்து உயிர் நீர்த்த உறவுககளின் நினைவுகளால் நடாத்தப்பட்ட மாபெரும் உதைபந்தாட்ட சற்று போட்டி நிகழ்வு மிகவும் சிறப்பாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புணரமைக்கப்பட்ட முனைக்காடு பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
 
முனைக்காடு இராம கிருஸ்ணா விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.சத்தியநாயகம் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
 
இவ் உதைபந்தாட்ட சுற்று போட்டியில் பட்டிப்பளை,வவுணதீவு,போரதீவு மற்றும் மட்டக்களப்பு போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து அணிகள் பங்கு பற்றின. இரண்டு நாட்கள் இடம் பெற்ற போட்டிகளில் சம்பியனாக மட்டக்களப்பு புன்னச்சோலை உதயசூரியன் அணி தேர்வு செய்யப்பட்டது.
 
விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் ,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள், ஆலய பரிபாலன சபையினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும்; கிராம சேவையாளர் ஊர் பொது மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள.;
»»  (மேலும்)

7/03/2013

| |

சிங்கள குடிநீர் வேண்டாம் என்று யாழ் மக்கள் கோசமிட்டதை இன்றும் மறக்க முடியவில்லை; அதாஉல்லா

DSC_0193அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்களின் அழைப்பின் பேரில் தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுரட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான அல்ஹாஜ். ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள்  மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்து நானத்தான் பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டிடத்தை  திறந்து வைத்தார்.
“நானத்தான் பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா;
இன்று நானத்தான் பிரதேசத்திற்கு முக்கியமான ஒரு நாளாகும். நானும் இன்றுதான் இப்பிரதேசத்திற்கு வந்திருக்கின்றேன். மன்னார் மாவட்டத்தில் இன்று பல அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்களுடன் இணைந்து திறந்து வைத்தோம்.
இப்பிரதேசம் மிகவும் எழில்மிக்க ஒரு பிரதேசமாகும். பார்ப்பதற்குக் கூட சந்தோசமாகவும் உள்ளது. இப்பிரதேசத்தை பொறுத்தவரை தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்று எல்லா சமூகத்தினரும் மிகவும் சந்தோசமாக வாழ்கின்றனர்.
கடந்த யுத்த காலங்களில் மக்கள் சந்தோசமாக இவ்வாறு வாழவில்லை. மக்கள் தெளிவாக இருந்தாலும் சிலர் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தினார்கள். மக்களுக்கு இனவாதத்தைப் பாய்ச்சினார்கள்.
எந்தளவுக்கு என்றால் யுத்த காலத்தின் போது நான் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சிற்கு பொறுப்பான அமைச்சராக இருந்த போது குடிநீர் வினியோகம் வழங்க யாழ்ப்பாணம் சென்றிருந்த போது சிங்கள குடிநீர் வேண்டாம் என்று மக்கள் கோசமிட்டதை இன்று கூட எனது மனதில் இருந்து அகழவில்லை. அந்தளவிற்கு மக்களின் மனதை அவர்கள் மாற்றியிருந்தார்கள்.
குறிப்பாக அவர்களுக்கு அடங்காத கல்விமான்களையும், வர்த்தகர்களையும், அரசியல்வாதிகளையும் பொதுமக்களையும் நாள்தோறும் கொன்றுகுவித்தார்கள். இன்னும் பல சொல்லொன்னா அநியாயங்களையும் செய்தார்கள். எந்த மதத்திலும் கொலை செய்யச் சொல்லவில்லை. இருந்தாலும் தர்மத்தை மீறி செய்தார்கள். இறுதியில் என்ன நடந்தது?
இறை தண்டனை. சண்டியன் வாழ்வு சந்தியில். எல்லா செயல்களுக்கும் இறைவன் தீர்ப்பளிப்பான். அதுதான் நாம் கொண்டுள்ள இறை நம்பிக்கையாகும். இன்று நாம் நிம்மதியாக வாழ்கின்றோம். சுதந்திரக்காற்றை சுவாசிக்கின்றோம். நாடு பூராக நிறைய அபிவிருத்திப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றது.
அதில் ஓர் அங்கமாக உள்ளுராட்சித் துறையில் வட்டாரத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். வட்டாரத்தில் உள்ளவருக்கு நாம் வாக்களிக்கும் போது நமக்கென்று ஒரு பிரதிநிதித்துவம் நிச்சயிக்கப்படும். அவர் மிகவும் வலுவானவராக இருப்பார். அவருக்கு நிறைய அதிகாரங்கள் வழங்கப்படும். வாக்களித்த மக்களுக்கு நிறைய வேலைகளைச் அவர் செய்வார்.
இவற்றையெல்லாம் நாட்டின் அபிவிருத்தியை மையமாகக் கொண்டே செய்கின்றோம். இன்று நானத்தான் பிரதேச சபைக் கட்டிடம் கூட திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் நான் அறிந்தேன் நானத்தான் பிரதேச சபை தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் பிரதேச சபை என்று. அப்படி நாம் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளும் போது யாருடையது, எந்த இனம், எந்த கட்சி என்று பார்ப்பதில்லை. அபிவிருத்திகள் எனும் போது பொதுவாகவே  நடைபெறுகின்றன.
நானத்தான் பிரதேச சபையின் தலைவர் என்னிடம் நிறைய கோரிக்கைகளை முன்வைத்திருகின்றார். வாழ்கின்ற மக்களுக்காக விரைவில் அதனை செய்து தருவதாக நான் உறுதியளித்திருக்கின்றேன்.
மேலும் இந்தப் பிரதேசத்தில் ஒரு திறமையான அமைச்சர் இருக்கிறார. றிசாட் பதியுத்தீன் இப்பிராந்தியத்திற்கு நிறைய சேவைகளை செய்து கொண்டு வருகின்றார். மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் பணி செய்கின்றார். நானத்தான் பிரதேச சபை அமைச்சர் றிசாட் பதியுத்தீனை தனது அபிவிருத்திக்காக நிறைய பாவிக்கவேண்டும். மக்களுக்காக சேவை செய்ய அவர் தயாராக இருக்கின்றார்” எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாறுக் மற்றும் பிராந்திய அரசியல் தலைவர்களும், அரச உயர் அதிகாரிகளும், பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

»»  (மேலும்)

| |

ஜனாதிபதி ஆலோசகரின் மக்கள் சந்திப்பு அலுவலக முகவரி மாற்றம்

முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் மக்கள் சந்திப்பு அலுவலக முகவரி மாற்றப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பு அலுவலகம் கடந்த காலங்களில் வாவி வீதியில் இயங்கி வந்தது. ஆனால் நேற்றைய தினம் மட்டக்களப்பு யாட்வீதியில் புதிதாகத் திறக்கப்பட்ட ஜனாதிபதியில் ஆலோசகரின் அலுவலகத்திலேயே மக்கள் சந்திப்பு நடவடிக்கைகள் இடம்பெறும்.

»»  (மேலும்)

7/02/2013

| |

ஜனாதிபதி ஆலோசகரின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு

ஜனாதிபதியின் ஆலோசகர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் புதிய அலுவலகம் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு யாட் வீதியில் திறந்துவைக்கப்பட்டது.இந்த அலுவலகத்தை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலாசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் திறந்துவைத்தார்.
இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்களான கிரிதரன், உதயசிறிதர், தனபாலசுந்தரம், மீள் எழுத்திட்ட நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் குன்றக் குமரன் ,சமுர்த்தி ஆணையாளர் ,மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, ஜனாதிபதி ஆலாகரின் செயலாளர் பிரசாந்தன் மற்றும் அலுவலக அதிகாரிகளான ஜோர்ச் பிள்ளை, யோகவேள்மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
»»  (மேலும்)