உறுகாமம் பிரதான வீதியில் அமைந்திருந்த வியாபார நிலையத்தை நேற்று இரவு 10.30 மணியளவில் இனம்தெரியாத சிலர் தீயிட்டு கொழுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் சீனிமுகம்மது பரீட் காத்தான்குடி இன்போவுக்கு தெரிவித்தார்.
நேற்று இரவு நடைபெற்ற மேற்படி சம்பவத்தில் கடையும் கடைக்குள் இருந்த பொருட்கள் உட்பட ஒரு முச்சக்கரவண்டியும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக கரடியனாறு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.