6/04/2013

| |

திருக்கோவிலில் புதிய பஸ் நிலையம்

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் 30 இலட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  தனியார் பஸ் நிலையத் தரிப்பிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

தனியார் போக்குவரத்து அமைச்சு, கிழக்கு மாகாணத்தில் தனியார் பஸ் நிலையங்களை அவிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இந்த பஸ் நிலையத் தரிப்பிடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில் தனியார் போக்குவரத்துச் சேவைகள் அமைச்சர் ஆர்.எம்.சி.பி.ரத்நாயக்க, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை,  அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன உட்பட பலர் கலந்துகொண்டனர்.