இச்சம்வத்தில் வேறு டஜன் கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளனர். மிஷாஸி என்ற தொழிற்சாலை நகரத்தில் உள்ள இத்தொழிற்சாலையில் தீ ஏற்படுவதற்கு அம்மோனியா வாயுக் கசிவு காரணமா அல்லது மின் கசிவு காரணமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
சிக்குண்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்தில் வாழும் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளி யேற்றப்பட்டுள்ளனர்.
சீனாவில் பணியிடத்தில் தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்கள் பல சந்தர்ப்பங்களில் மிகவும் மோசமாக இருப்பதுண்டு.
அங்கே பெரிய தொழிற்சாலைகளிலும், சுரங்கங்களிலும் தொழி லாளர்கள் உயிரிழக்கும் விபத்துக்கள் நடப்பது வழமை.