மட்டக்களப்பு, கல்குடா வலயத்திலுள்ள அக்குறாணை பாரதி வித்தியாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா இன்று பாடசாலையின் அதிபர் எஸ்.சிவனேசராசா அவாகளின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும், மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை – சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டார்.
அத்துடன் அதிதிகளாக கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், கல்குடா வலயக் கல்விப் பணிமனையின் அதிகாரிகளும், கிராம உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.