ஊடக அறிக்கை:
41வது இலக்கியச் சந்திப்பு (இலங்கை – யாழ்ப்பாணம்) எதிர்வரும் யூலை 20 – 21ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கீழ்வரும் வகையில் இலங்கை இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி உள்ளடக்கங்கள் அமையும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகம், பன்மைத்துவம், சமனிலை என்பவற்றின் அடிப்படையில் ஈழ இலக்கியத்தில் பேசுபொருளாக இருந்த – இருக்கின்ற அனைத்து விடயங்கள் பற்றியும் எத்தகைய சார்பு நிலைகளுமின்றி, பேசுவதற்கான அரங்குகள் திறந்துள்ளன.
1.பாரம்பரியக் கலைகள்
மலையக, முஸ்லிம், தமிழ்ச் சமூகங்களின் கலை, பண்பாடு, மரபுரிமை மற்றும் அவற்றின் இன்றைய நிலை தொடர்பான அரங்கு.
மலையக, முஸ்லிம், தமிழ்ச் சமூகங்களின் கலை, பண்பாடு, மரபுரிமை மற்றும் அவற்றின் இன்றைய நிலை தொடர்பான அரங்கு.
2.சாதியம்
யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு, கிழக்கு, மலையகம், புலம்பெயர் சூழல் ஆகிய இடங்களில் சாதியம்.
யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு, கிழக்கு, மலையகம், புலம்பெயர் சூழல் ஆகிய இடங்களில் சாதியம்.
3.சமூகச் செயற்பாட்டனுபவங்கள் மற்றும் சமகாலச் சவால்கள்
பொது மற்றும் சமூக சேவைகள், செயற்பாடுகளில் பணிசெய்தல் மற்றும் பணி செய்வோர் தொடர்பான விடயங்கள். (போர் மற்றும் போருக்குப் பிந்தியகால உளவியல்)
பொது மற்றும் சமூக சேவைகள், செயற்பாடுகளில் பணிசெய்தல் மற்றும் பணி செய்வோர் தொடர்பான விடயங்கள். (போர் மற்றும் போருக்குப் பிந்தியகால உளவியல்)
4.இலக்கியம்
மலையக, முஸ்லிம், தமிழ், தலித், விளிம்புப்பால்நிலை, புலம்பெயர் இலக்கியத்தளங்கள் மற்றும் கவின் கலைகள்.
மலையக, முஸ்லிம், தமிழ், தலித், விளிம்புப்பால்நிலை, புலம்பெயர் இலக்கியத்தளங்கள் மற்றும் கவின் கலைகள்.
5.தேசிய இனங்களின் பிரச்சினைகள்
மலையக, முஸ்லிம், தமிழ், சிங்களத் தேசியவாதங்கள், தேசியமும் பெண்களும், காணி தொடர்பான பிரச்சினைகள், தேசிய இனங்களுக்கு இடையிலான உறவுகள்.
மலையக, முஸ்லிம், தமிழ், சிங்களத் தேசியவாதங்கள், தேசியமும் பெண்களும், காணி தொடர்பான பிரச்சினைகள், தேசிய இனங்களுக்கு இடையிலான உறவுகள்.
மேற்கண்ட கருத்தாங்கங்களில் பேசப்படுவதற்கான அரங்குகளில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த ஆளுமைகளும் செயற்பாட்டாளர்களும் பங்கேற்பர். ஒவ்வொரு தலைப்பினையும் பெண்ணிய நோக்கில் அவதானிக்கும் உரைகளும் இடம்பெறும்..
*கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
- 41வது இலக்கியச் சந்திப்புஏற்பாட்டுக்குழு, யாழ்ப்பாணம்.