வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணகிபுரம் கிராமம் வருடாவருடம் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்ற ஒரு கிராமமாகும். இக் கிராமத்தில் மழை காலம் மற்றும் வெள்ள காலங்களில் கிராமங்களில் தேங்கி கிடக்கின்ற நீர் வடிந்தோடுவதற்கான இயற்கையான வடிகான்கள் இருந்தும் அது செயலற்றதன் விளைவாக அவ் வெள்ள நீர் வடிந்தோடாமல் கிராமத்திலே தேங்கி கிடப்பதனால் அக் கிராம மக்கள் பெரும் கஸ்டத்திற்கு முகம் கொடுத்து வந்திருக்கின்றார்கள்.
இது குறித்து;; மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோகசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அக் கிராம மக்களோடு நேரடியாக கலந்துரையாடி அவர்களது கருத்துக்களை ஏற்று அதனடிப்படையில் உடனடியாக வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான வடிகான் அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
மக்களின் கருத்துக்களைக் கேட்கும் கூட்டம் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் தலைமையில் கண்ணகிபுரம் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இடம்பெற்றது. அக்கிராம மக்களின் விருப்பத்திற்கு அமையவே குறித்த வடிகான் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. இக் கூட்டத்திற்கு கிராம உத்தியோகஸ்த்தர் மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தார்கள்.
முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களது எற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இத் திட்டத்திற்கு தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 650 மீற்றர் குறித்த வடிகான் அமைக்கப்படும். இதனை வாழைச்சேனை பிரதேச சபை மேற்பார்வை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.