5/04/2013

| |

வாழ்வின் எழுச்சி மீளாய்வு கூட்டம்.

வறுமையை ஒழிக்கும் விசேட திட்டமான திவிநெகும (வாழ்வின் எழுச்சி) தொடர்பிலான மீளாய்வு கூட்டம் கடந்த 02.05.2013 அன்று மண்முனை வடக்கு பிரதேசத்தின் அபிவிருத்தி குழுத்தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோகசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச அபிவிருத்தி குழுத்தலைவர் சந்திரகாந்தன் அவர்களின் ஆழுகைக்குட்பட்ட பிரதேச செயலகங்களான வாகரை,வாழைச்சேனை,கிரான்.செங்கலடி மற்றும் மட்டக்களப்பு ஆகிய 5 பிரதேச செயலகங்களிலுமுள்ள கிராமங்கள் தோறும் தலா 50 குடும்பங்களைத் தேர்வு செய்து, அவர்களது வறுமையை முற்றாக ஒழிப்பதே இலக்காகக் கொண்டு வாழ்வின் எழுச்சி திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ் வேலைத்திட்டத்தினை செயற்படுத்த விசேடமாக பொருளாதார அமைச்சின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்களும் செயலாற்றுகின்றார்கள். கிராமங்கள் தோறும் சென்று அடிப்படைத்தரவுகளைச் சேகரிப்பதுடன் பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டள்ளார்கள். இதில் தலா ஒரு கிராமத்திலிருந்து 50 குடும்பங்கள் தேர் செய்யப்பட்டுள்ளன. இதில் 25 குடும்பங்களை பட்டதாரி பயிலுனர்களும் 25 குடும்பங்களை சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்களும் தேர்வு செய்துள்ளார்கள்.
இன்று பயனாளி தேர்வு மற்றும் திட்டத்தினை அமுல்படுத்தல் தொடர்பிலான விசேட மீளாய்வு கலந்துரையாடல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ் கிரிதரன் மற்றும் கச்சேரியின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதாகர் மற்றும் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர்,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் திவிநெகும திடடத்தின் விசேட இணைப்பாளர் பூ.பிரசாந்தன்  உட்பட பட்டதாரி பயிலுனர்கள். சமுhத்தி உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டார்கள்.