அமெரிக்க ஆள்ளில்லா விமானம் 29ஆம் நாள் விடியற்காலை பாகிஸ்தானின் வட வஜிரிஸ்தானில் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் தலிபானின் 2வது பெரிய தலைவர் ஹக்மன் தாக்குதலில் உயிரிழந்தார் என்று சில செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், பாகிஸ்தான் தலிபான் இத்தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ரஹ்மன், பாகிஸ்தான் தலிபானின் 2வது மிக முக்கிய தலைவர். அவர் பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிடுவதில் வல்லவர். 2010ஆம் ஆண்டு அவரைக் கைது செய்ய, அமெரிக்க அரசு 50 இலட்சம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்தது என்று அமெரிக்க கொலம்பிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.