4/08/2013

| |

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது யார் என்பது தொடபில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் குழப்பம்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் குழப்பநிலை தோன்றியுள்ளதனைக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வரும் கருத்துக்களிலிருந்து அறிய முடிவதாகச் செய்திகள் தெரிவிக்கின்ற நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் அதில் போட்டியிடுவது தொடர்பாக எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லையெனக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடமாகாண சபைத்தேர்தல் இவ்வருடம் நடைபெறுமெனவும், அதில் கூட்டமைப்பு போட்டியிடுமெனவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அரசாங்கம் உறுதியாக அறிவிக்கும் வகையில் தம்மால் எதனையும் கூறமுடியாதெனவும் தான் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவதென வெளிவந்த செய்திகளையும் மாவை மறுத்துள்ளார்.

ஆனால் இவ்வருடம் நடைபெறும் வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடுவது உறுதி எனவும், எனினும் தேர்தலில் இடம்பெறக்கூடிய வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லையென அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.