சாத்திரி ரயாகர மயானகாண்டம்
இலண்டன் இலக்கியச் சந்திப்பில் இரண்டு அபத்தக் கூத்துக்கள்
கட்டியகாரன் புலம்பல்
இலண்டன் மாநகரிலே இலக்கியச் சந்திப்பின்- இவ்
அரங்கிலே தந்திரமாக நுழைந்து சுந்தரமாய்
சாத்திரி ராசா வாறார் பாருங்கோ- நம்ம
சனங்களெல்லாம் அவர் புகழ் கேளுங்கோ
சூரிய தேவனின் விசுவாசத் தம்பியர்- தலைவர்
சுட்ட பிணத்துக்கெல்லாம் நியாயம் தெண்டுவர்
மூத்திரச் சந்தியிலே கிறுக்குதல் போலவே- இந்த
சாத்திரியார் சளையாமல் அவதூறு கீறுவார்
இளைய தளபதி இராயகரனும் வருகிறார்- பொய்யில்
இவர் சாத்திரிக்கும் மூத்த மகர்
களையாத அவதூறுப் புயல் இவர்- எல்லோரும்
கை கட்டி வாய் பொத்தி கும்புடுங்கோ.
பொய்யர் வசையர் இருவரை ஏற்றி- கைபிடித்து
கூட்டிவந்த இலக்கியச் சந்திப்பே போற்றி
ஐயோ எனப் போனது நீதியும் தருமமும்- அவற்றிற்கு
ஆப்பு வைத்த அமைப்பாளர்களுக்கு நன்றி.
தத்தோம், தத்தோம் தரிகிட தரிகிட தித்தோம்
தத்தோம், தத்தோம் தரிகிட தரிகிட தித்தோம்
தளாங்கு தித்தோம் தளாங்கு தித்தோம்
செத்தோம் இனி நாங்க மொத்தமாய்ச் செத்தோம்.
முற்கூத்து - சாத்திரி
திரை விலகுகிறது:
ஒற்றை மின்வெளிச்சம் - ஒரு குரல்
இதுவரை நடந்த இலக்கியச் சந்திப்புகளின் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்டும் பாணியை கைவிட்டு புதியதோர் பரிமாணத்துக்கு லண்டன் இலக்கியச் சந்திப்பு தாவியிருக்கிறது பெருமகிழ்வை தருகிறது. எதுவரை நாம் இந்த மாற்று கருத்துக்கு மட்டும் இடம் கொடுப்பது. இது பல்வேறு கருத்துகளின் தளம். களம். இது ஒரு பண்பு மாற்றம்! புரட்சி!!
பேச்சுரிமை, கருத்துரிமை, கொல்லும் உரிமை, கொலையை ஆதரிக்கும் உரிமை, அவதூறு கூறும் உரிமை அனைத்தையும் காக்கும் பாரிய பொறுப்பை லண்டன் இலக்கிய சந்திப்பு குழு தன்னந்தனியாக எடுத்திருக்கிறது. இலக்கியச் சந்திப்பின் பாரம்பரியத்தையும் ஜனநாயக விழுமியங்களையும் புதியதொரு தளத்திற்கு இட்டு செல்லும் லண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவினரின் இவ்வரிய முயற்சி பாராட்டத்தக்கது. மாற்றுக்கருத்து என்ற சொற்பதத்தை பல்கருத்தாக மாற்றி புதியதொரு சாதனை படைத்திருப்பது மிகவும் வரவேற்கத் தக்கது.
’உனது கருத்தில் எனக்கு உடன்பாடில்லாவிடினும் உனது கருத்தைச் செல்லும் உரிமைக்காக எனதுயிரையும் கெடுப்பேன்’ என்ற வால்டயரின் பரம்பரைகள் வாழ்க. தன்னைக் கொல்லவந்த பசுவை கொல்வது நியாயம் என்ற காந்தித் தாத்தாவைவிட அகிம்சையிலும் சகிப்புத் தன்மையிலும் ஒருபடி மேலே சென்று விட்டது நமது லண்டன் சந்திப்பு.
இதற்கெல்லாம் மகுடம் வைப்பதுபோல் சாத்திரியார் இலக்கிய சந்திப்பில் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டு கௌரவிக்கபட்டது மாற்று கருத்தாளரின் குறுகிய சிந்தனை போக்கை தவிடு பொடியாக்கி புதிய பரிமாணத்துக்கு இட்டுசென்றுள்ளது.
சாத்திரியாரின் கருத்துகள் பற்றியும் போதனைகள் பற்றியும் நாம் அறிந்திருப்பது அவசியமே. இது எமது சிந்தனை போக்கை சீர்படுத்தும் அரிய மருந்து.
சாத்திரியார் 2009 மே 18வரை மனித உரிமைகள் குறித்து பென்மெழிகளை தமிழ் மக்களின் பண்பாட்டுக் கலாச்சாரக் காவல் பத்திரிகையான ”ஒரு பேப்பரிலும்” தனது இணையத் தளத்திலும் உதிர்த்து வந்திருக்கின்றார். இப்பெரும் மகானை வெறும் பேச்சாளராக அழைத்திருப்பதில் எமக்கு உடன்பாடில்லை. பாரட்டி விருது வழங்கும் தகுதி கெண்ட சாத்திரி அவர்களை வெறும் பேச்சாளராக அழைத்தது அவரது கடந்தகால சேவையை களங்கப்படுத்தும் செயலாகும். இலக்கியச் சந்திப்பின் தூண்களாக செயலாற்றிய புஸ்பராஜா, சபாலிங்கம் பேன்றவர்களின் சேவையை பாராட்டி புகழ்ந்தவரல்லவா எங்கள் சாத்திரி!!! ஏன் பெண்கள் சந்திப்பு, தலித் மாநாடு குறித்து அவரது சாத்திரப்பார்வை அழிந்து பேகக் கூடியதென்றா?! எனவே அவருக்கு வாழ் நாள் விருதொன்றை கொடுத்து கௌரவிப்பதே சாலச் சிறந்த செயல்.
பல் கருத்துக்களை பரப்புவதற்கான தளம் இலக்கியச் சந்திப்பு. எனவே நாம் பொறுமை காத்து சாத்திரியாரின் நடிப்பை பார்க்க தயாராவோம்.
சாத்திரியார் வருகிறார்- மங்கலான ஒளி சற்று அதிகரிக்கிறது.
சாத்திரியார்:
வியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.
அனைவரும் எழுந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி
சபையோர் கைதட்டல்.
கோசம்: பல் கருத்து வாழ்க! மாற்று கருத்து ஒழிக!!
சாத்திரியார் தனது வரலாற்றை நடித்தும் பேசியும் காட்டுகிறார்.
ஒரு பேப்பருக்காக சாத்திரியார் எழுதுவது-
பெண்கள் சந்திப்பு, தலித் மாநாடு குறித்து:
எனவே இந்த அமைப்புக்களின் ஆதரவை தமிழ் நாட்டில் சிதைத்து விட்டால் மற்றைய ஆதரவுக் கரங்களையும் மடக்கி விடாலாமென்பது இலங்கையரசின் கனவு. இதன் ஆரம்ப கட்டமாக பிரான்சில் சிறீலங்கா அரசிற்கு சேவகம் செய்ய புறப்பட்டவர்களால் சில நிகழ்வுகள் எற்பாடு செய்யபபட்டுள்ளன.
அவை சமாதானப்பறைவைகள் என்கிற பெயரில் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு என்கிற தலைப்பில் ஒரு எற்பாடு. இதை கேட்டதுமே சிரிப்புதான் வந்தது இதை படிக்கின்ற உங்களும் கட்டாயம் வரும். ஏனெனில் எங்கள் தேசத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அமைதி பூத்துக் குலுங்குகின்றது. எனவேதான் ஈராக்கை பற்றி கதைக்க பேகினமாம். அடுத்த நிகழ்வு 26வது புகலிட பெண்கள் சந்திப்பு இந்த புகலிடப் பெண்கள் சந்திப்பில் வருடா வருடம் வழைமை பேல நடக்கின்ற புலியெதிர்ப்பு தான் இந்த வருடமும் நடக்கப் பேகின்றது. எனவே இதைப்பற்றி அதிகம் அலட்டிக்கௌ;ள தேவையில்லை.
ஆனால் அடுத்ததாக நடக்கப் பேகின்ற முதலாவது தலித்மகாநாடு என்கிற பெயரில் நடக்கப் பேகின்ற மகாநாடுதான் முக்கியமான ஆனால் மேசமான விளைவுகளை ஏற்படுத்த பேகின்ற மகாநாடு. ஏனெனில் நான் முதலே குறிப்பிட்டது பேல இது இந்தியாவில் தலித் அமைப்புகளிடையே ஈழத்தமிழரிற்கு இருக்கும் ஆதரவை சீர்குலைக்கும் ஒரு நிகழ்வு. காரணம் இந்த நிகழ்வை ஒழுங்கு படுத்தியிருப்பவர்கள் இலங்கையரசின் எலும்புத்துண்டை எட்டிப்பிடித்தவர்கள். ஏற்கனவே இந்த மகாநாடு பற்றி நான் எதிர்பார்த்ததை பேல இணைய தளங்களிலும் வலைப்பூக்களிலும் பல சர்ச்சையைகளை கிழப்பி விவாதங்களும் தெடங்கி விட்டது.....
.............
எது எப்படியே இலங்கை புலனாய்வுப் பிரிவினர்களால் திட்டமிட்டு மேற்கௌ;ளப்படும் இந்த நிகழ்வுகள் பற்றி பிரான்ஸ்வாழ் தமிழர்கள் விழிப்பாயிருக்க வேண்டிய காலகட்டம் இது. ஆனால் இந்த ஏற்பாடுகள் இந்தியாவில் ஈழத்தமிழர்களின் ஆதரவுத்தளம் ஆட்டம்காணுமா?? அல்லது இந்தச்சதிகள் தகர்க்கப்பட்டு மேலும் உறுதியாகுமா?? பெறுத்திருந்து பார்க்கலாம்.
நன்றி சாத்திரி.
ரயாகரன் குறித்து சாத்திரி;
ஆனால் இதுவரை என்ன நடந்தது என்கிற உண்மை சரிவர தெரியா விட்டாலும் விஸ்வானந்த தேவன் உயிருடன் இல்லை என்பது மட்டும் உண்மை. பின்னர் இந்த இயக்க தலைமைக்காக ராயாகரனிற்கும் மற்றவர்களிற்கும் நடந்த பிரச்சனைகளில் பலர் அதைவிட்டு வெளியேறி பேய்விட, ராயாகரனும் ஒரு சிலருமே மிஞ்சினார்கள். பின்னர் 86களில் யாழ் குடா புலிகளின் கட்டுப்பாட்டினுள் வந்த பின்னர் அப்பேது மிஞ்சியிருந்த இயக்கங்களும் தடை செய்யப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப்பட்டு அந்த இயக்கங்களால் கௌ;ளையடிக்கபட்டிருந்த பெருட்கள், கடத்தப்பட்ட வானங்கள் என்பனவும் மீட்கபட்டது.
அப்படி ஆயுதங்கள் களையப்பட்டபேது சிலர் ஆயுதங்களுடன் தலைமறைவாகியிருந்தனர். அவர்கள் அந்த ஆயுதங்களை பாவித்து அவ்வப்பேது பல குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதால் புலிகள் அப்படியானவர்களைத் தேடி கைது செய்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
சபாலிங்கம் குறித்து சாத்திரி:
இந்த புத்கத்தில் புஸ்பராசாவும் சரி இன்று புலத்தில் சிலர் தாங்களே சனநாயகத்தின் ஒட்டுமெத்த காவலர்கள் என்றும் மாற்று கருத்து மாணிக்கங்கள் என்றும் கூறிக்கெண்டு ஈழ விடுதலைப் பேராட்டத்திற்கு எதிராகவும் விடுதலைப் புலிகளிற்கு எதிராகவும் கருத்துகளை முன்வைத்தும் செயற்பட்டுக் கெண்டும் இருக்கும் பலரும் இந்த சபாலிங்கம் என்கிற பெயரை அடிக்கடி உச்சரித்தபடிதான் இருக்கிறார்கள்.
....சபாலிங்கம் யார்? எதற்காக?? எப்படிக் கெலை செய்ய பட்டார்???
புலத்தில் மாற்றுக் கருத்தாளர்கள் என்றும் மனிதவுரிமை வாதிகள் சனனாயக வாதிகள் என்னும் பல பேர்வைகளை பேர்த்துகெண்டவர்கள் அவர் யார்? எப்படியானவர்? எப்படி இருப்பார்? என்று கூட தெரியாதவர்களாய் வழைமை பேல தங்கள் வசதிக்கேற்றபடி சாபலிங்கம் படு கெலை புலிகளால் என்று சில தளங்களில் இன்றும் எழுதி புலம்பியபடி இருக்கிறார்கள்...
...........
பொன்னும் பெருளும் சேர்த்தவரிற்கு இப்போ பிடித்து கெண்டது பெண்ணாசை. அவரிடம் அகதி அந்தஸ்த்து கேருவதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய உதவி கேட்டு பேன பெண் ஒருவரை தனியே அழைத்து அவரிடம் தன் காதல் விண்ணப்ப படிவத்தை நீட்டி அதைப் பூர்த்தி செய்யுமாறு விண்ணப்பித்தார். அதை அந்த பெண் நிராகரிக்கவே இவரும் சற்று பலாத்காரமாக தனது கேரிக்கையை மீள்பரிசீலனை செய்யும் படியும் இல்லாவிட்டால் பிரான்சில் அந்த பெண் வாழ்வதே பரிசேதனையாகி விடும் என்று மிரட்ட, மிரண்டுபேன பெண்ணே அழுதபடி அவர் அண்ணனிடம் பேய் அத்தனையையும் ஒப்பிக்க அவள் அண்ணன் எமன் ஆனான். அன்னார் சபாலிங்கம் அகால மரணமானார். இதுதான் நடந்தது. இவரது மரணம் புலத்தில் புலியெதிர்பு பேசித் திரிந்தவர்களிற்கும் வெறும் வாய்சப்பாமல் வெத்திலை துண்டு கிடைக்காதா என அலைந்த மாற்றுகருத்தாளர்களிற்கும் மசாலா பீடாவே கிடைத்ததுபேல தங்கள் விருப்பத்திற்கு பழியை புலிகள் மீது பேட்டு சப்பி துப்பினார்கள்.
புஸ்பராஜா குறித்து:
எங்கள் ஈழ மக்களது வரலாற்றில் மிகப்பெரும் ஒரு சாபக்கேடு எங்கள் வரலாறு பற்றி அவ்வப்பேது பேதுமான பதிவுகளை யாரும் மேற்கௌ;ளவில்லை. அப்படி ஒரு சிலர் தங்கள் தனிப்பட்ட முயற்சியால் பதிந்து விட்டுப் பேன பதிவுகளும் எதிரிகளால் அவ்வப்பேது திட்டமிட்டு அழிக்கப் பட்டும் இங்கு புஸ்பராசா பேன்றவர்களால் வேண்டுமென்றே திரிக்கப்பட்டும் எழுதப்படும். புனைகதைப் புளுகுகளே வரலாறாக தூக்கி பிடிக்கப்பட்டு தமிழின எதிரிகளின் தாராள விளம்பரத்தால் அவையே காலப் பேக்கில் தமிழனின் வரலாறாகத் திட்டமிட்டு மாற்றப்படும் அபாயமும் இருக்கின்றது.
புலோலி வங்கி கொள்ளை குறித்து:
ஆனால் அதற்கும் தங்களிற்கும் சம்பந்தமில்லை காவல்துறை அதிகாரிகளே பாதியை அள்ளிவிட்டு மீதியை நீதிமனறத்தில் ஒப்படைத்தனர் என்று புஸ்பராசா குடும்பத்தினரும் தவராசாவும் தங்கள் மீதான குற்றசாட்டை மறுத்தனர். ஆனால் இங்கு யார் எவ்வளவு எடுத்தனர் என்று ஆராய்வது இந்த கட்டுரையின் நேக்கம் இல்லையென்பதால் அடுத்த தெடரில் புஸ்பராசா தனது புத்தகத்திலும் மற்றும் புலத்திலும் மாற்றுக் கருத்தாளர்கள் என்று தங்களை இனங்காட்டுபவர்களும் இன்னெரு முக்கிய கெலைச் சம்பவத்தையும் திருப்ப திருப்ப புலியின் வாலில் கட்டிவிட துடிக்கின்றனர் அது யாழ்பல்கலைக் கழக விரிவுரையாளர் ரயனி திரணகம. எனவே அடுத்த பாகத்தில் ரயனியையும் திரணகமவையும் பார்ப்பேம்.................... விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்
ஈழவிடுதலை பேராட்டத்தை ஈடுவைத்து வாழ்ந்தவர்கள் இறந்து பேனாலும் மன்னிக்க முடியாதவர்களே.
ராஜனி கொலை குறித்து:
படுகெலைகளை கண்டிப்பேம் படுகெலைகளை கண்டிப்பேம் இது இலங்கை அரசு புலிகள் ஒப்பந்தத்திற்கு வந்ததன் பின்னர் புலத்தில் மாற்று கருத்தாளர் என்றும் மனிதவுரிமைவாதிகள் என்றும் செல்லிகெண்டு ஒரு குழுவினரின் குரல் கெஞ்சம் சத்தமாகவே ஒலிக்க ஆரம்பித்துள்ளது. இவர்கள் படுகெலைசெய்யபட்ட சிலரின் பெயர்களை வைத்துகெண்டு தங்கள் சுய நலங்களிற்காக புலிகள்தான் இந்த கெலைகளை செய்தார்கள் என்று திருப்ப திருப்ப செல்லியும் எழுதியும் வருகின்றனர்.
அப்படி அவர்களின் பட்டியலில் படுகெலைசெய்யபட்ட ஒருவரான சபாலிங்கத்தை பற்றிய உண்மையான விபரத்தை இதேதெடரில் முதலில் பார்த்தேம். அடுத்ததாக முக்கியமான இன்னெருத்தர் ரயனிதிரணகம. இவரது பெயர் ரயனி அல்ல ராஜினி என்பதே உண்மையான பெயர் ராஜினி எப்படி ரயனியானார் என்று தெரியாது.
........... ஆம் இரண்டு தலைகள் மற்றது ராஜினி. காரணம் சிறீதரனைவிட ராஜினிக்கு வேறுமனிதவுரிமை அமைப்புக்களுடனான தெடர்புகள் அதிகம் அதைவிட தனிப்பட்டரீதியிலும் வெளிநாட்டு தெடர்புகளும் இருந்தன. ஆகவே சிறீதரனைப் பேட்டால் ராஜினி வெளிநாடென்றிற்கு தப்பிசென்றுவிட்டால் நிலைமை இன்னமும் இடியப்பம் (சிக்கல்)ஆகிவிடும் எனவே இரண்டு தலைகளுமே பேடப்படவேண்டிய தலைகள் தான் எனவே அந்தவேலையை முடிப்பதற்கு அப்பேது ஈ.பி.ஆர் எல் எவ் பின் இராணுவ பிரிவு பெறுப்பாய் இருந்த றெபேட்(சுபத்திரன் சாவகச்சேரியை சேர்ந்தவர் இவர் பின்னர் சினைப்பர் தாக்குதலில் கெல்லபட்டுவிட்டார்) என்பவரிடம் ஒப்படைக்கபட்டு முதல் பேடவேண்டிய தலை யார் எனபதனையும் அடையாளம் செல்லிவழியனுப்பி வைத்தனர். இரண்டு தலையில் முதல் தலை?? அடுத்த பாகத்தில் பார்ப்பேம்.
ராகவன்- நிர்மலா, ராஜேஸ்வரி, மு.நித்தியானந்தன் குறித்து சாத்திரி:
தனக்கு பதவிகள் பெறுப்புக்கள் தராததால் நிர்மலா வெறுப்படைந்து புலிகள் இயக்கத்தை விமர்சிக்க தெடங்கினார் அதே நேரம் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் புலிகளின் தலைமைக்கு மிகநெருங்கியவராகவும் இருந்த வடக்கு புன்னாலை கட்டுவனைச்சேர்ந்த சின்னையா சிவகுமார் (ராகவன்) என்பவரிற்கும் இவரிற்கும் காதல் பூத்து கனிந்தது. இதனை அறிந்த நித்தியானந்தன் புலிகளின் தெடர்புகள் மற்றும் அவர் நடாத்திய பத்திரிகையின் பெறுப்புகளை விட்டு வெளியேறி வெளிநாடென்றிற்கு சென்றுவிட நிர்மலா ராகவனைப் பயன் படுத்தி புலிகளின் தலைமைக்கு எதிராகவும் அதே நேரம் புலிகள் அமைப்பை உடைத்து அதனை கைப்பற்றும் நேக்குடன் காய்கள் பழங்கள் எல்லாத்தையும் நகர்த்திப்பார்த்தார்.
இவர்கள் இருவரும் புலத்து பெண்ணியம் பேசும் ராயேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் உதவியுடன் இங்கிலாந்து வந்து குடியேறி எங்கிருந்து என்ன செய்கிறார்கள் என்றே பல ஆண்டுகள் சத்தமில்லாமல் இருந்தவர்கள். தற்சமயம் புலிகள் இலங்கை அரசுடன் செய்து கெண்ட பேர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் பழைய குருடியின் வீட்டுகதவை தட்டத் தெடங்கியிருந்தாலும் தமிழர்கள் யாரும் இவர்கள் கதை கேட்கும் குருடர்களாய் இல்லை என்பது மட்டுமல்ல ராஜினியுடன் அவர் உயிருடன் இருந்த காலத்திலேயே தெடர்புகள் ஏதும் இல்லாதிருந்த திரணகமவும் மற்றும் மனைவியின் நடத்தைகளால் அவரைவிட்டு பிரிந்த நித்தியானந்தனும் இவர்களுடன் சேர்ந்து புலியெதிர்ப்பு கதைப்பது வேடிக்கை.
கூடவே சேர்ந்து வேறுபல புலத்து புலியெதிர்புக் காரர்களையும் நிர்மலா ஒன்றிணைத்து மனிதவுரிமைவாதிகள் என்கிற பெயரில் புலிக்கு புல்லு தீத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை புண்ணாக்காவது தீத்தியே தீருவது என்று புலம்பி திரிகிறார்கள்.
ராஜேஸ் பாலா குறித்து:
பயோடேற்றா
பெயர். (பி)றாஜேஸ் பாலா
வயது. அறைளை பேந்தவயது
தெழில் . ஓய்வுபெற்ற தாதி
உபதெழில். ஓயாத புலியெதிர்ப்பு
விரும்புவது. அடிக்கடி ஊடகங்களில் பெயர் அடிபடுவதை
விரும்பாதது. உள்ளாடைகள் அணிவதை
பெழுது பேக்கு. கட்டுரை கீறுவது. பெண்ணியம்பற்றி கும்மியடிப்பது.
நண்பர்கள். கிழக்கின் வெள்ளியும். வெள்ளிக்கு பிடித்த கள்ளரும்.
எதிரிகள். அவரின் வாயேதான்
நீண்டகாலக்கனவு. புலம்பெயர் தேசத்து புலியெதிர்ப்பாளர்களிற்கு தலைமை தாங்குவது.
அண்மைக்காலக்கனவு. பிள்ளையானின் பி.ஏ ஆவது.
சாதனை . கனடாவிற்கு பேய் கறுப்பியை சந்தித்தது
சேதனை. லண்டனிலேயே இருக்கிற நிர்மலா ராஜசிங்கம்.
படிப்பது. தேனீ
பிடித்தவர். ஜெமினி(நடிகர்அல்ல)
பிடித்த விளையாட்டு. கபடி(இதில்தான் காலைவாரலாம்)
பிடித்த வீரவிளையாட்டு. கறிச்சட்டியடி
பிடித்த பாடல். இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலை உனக்கு கவலைஎதுக்கு (படம் நினைத்தாலே இனிக்கும்)
போல் சத்திய நேசன் குறித்து:
பயேடேற்ரா
பெயர். போல் பொய்நேசன்
வயது. எட்டுக்கழுதை வயசு
தெழில். யாருக்குத்தெரியும்
பெழுது பேக்கு. அனைத்து தமிழர் நிகழ்வுகளிலும் பங்குகௌ;ளுதல்
நினைப்பு. இங்கிலாந்தின் பிரதமர்
பிழைப்பு. உதவி மேயர்
நண்பர்கள். இலங்கையரசின் புலனாய்வுத்துறையும். ஒட்டுக்குழு உறுப்பினர்களும்.
ரசிப்பது. மாற்றான் தேட்டத்து மல்லிகையை
ருசிப்பது. ஓசியிலை எது கிடைச்சாலும்.
பிடித்த பெருட்கள். மேடையும் மைக்கும்.
பிடித்த பாடல். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கெடுத்தவரம் மனது மயங்கியென்ன....(படம் மன்மதலீலை)
பிடித்த விலங்கு. விலாங்கு
பிடிக்காதது.. திருமணம்
படிப்பது தேசம். லண்டன்குரல். உதயன். மற்றது என்னை புளுகிற ஊடகங்கள்.
வெடிப்பது(புளுகுவது) கேடண்பிறவுனேடை கேப்பி குடிச்சனான். ஜேர்ச் புஸ்சேடை யூஸ் குடிச்சனான்.
கனவு. எம்பியாவது.
கற்பனை இங்கிலாந்து தமிழரெல்லாமே எனக்குப் பின்னாலைதான
விஜயானந்தன் கொலை பற்றி
சில நாட்கள் கழித்து உடுவில் பகுதியில் ஒரு வாசகசாலையில் புகுந்து பத்திரிகைகளைப்புரட்டினேன். உதயன் பத்திரிகையில் முதற்பக்கத்தில் ஒரு செய்தி. ”யாழ்மாவட்டத்தின் ரஸ்ய சார்பு கொமினிச அமைப்பாளரான விஜயானந்தன் சுட்டுக்கொலை.” அந்தக்கொமினிச பிசாசிற்கு குழையடிக்கப்பட்டு விட்டது. எனக்குத்தெரியும் நிச்சயமாக அவன் நரகலோகம்தான் போயிருப்பான். ஆனால் இன்று புலம்பெயர்ந்த தேசங்களிலும் கொமினிசம் பேசியபடி சில பிசாசுகள் உலவியபடிதான் இருக்கின்றன. இவைகள் குழையடிக்கப்படுவது எப்போ????????
...............................................................................
மாற்று இயக்கக் கொலைகள் குறித்து சாத்திரி
டெலோ
தெடச்சியாய் பலகௌ;ளைகளை நடத்திக்கெண்டிருந்த (முக்கியமாக வாகனக்கௌ;ளைகள்) ரெலே உறுப்பினர்களிற்கு இடைஞ்சலாயிருந்த இரவு நேரக்காவல் கடைமையில் ரேந்து வரும் புலிகள் அமைப்பினரை கடத்துவது. துன்புறுத்துவது என்று தெடருந்து கெண்டிருந்தபெழுது அவர்கள் எதிர்பார்த்த சர்ந்தர்ப்பமும் வந்தது........
அதற்கு மேலும் ரெலேவுடன் பேசிப்பயனில்லையென்று தெரிந்துகெண்ட புலிகள் அதிரடியாக ரெலேவின்மீது தாக்குதலைத் தெடுத்து அவர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த முரளியையும் பசீர் காக்காவையும் மீட்டு இறுதியாய் சிறீசபாரத்தினமும் கெல்லப்பட்டதுடன் ரெலேவின் ஆதிக்கம் கட்டுப்பாட்டிற்கு கெண்டுவரப்பட்டது
எனவே எடுத்ததற்கெல்லாம் மகாபாரதத்திலும் பகவத்கீதையிலும் உதாரணம் காட்டுபவர்கள். புலிகளின் இந்த யுத்தத்தையும் சகேதர யுத்தமல்ல தர்மயுத்தம் என்று ஏற்க மறுப்பது பகிடியாய்தான் இருக்கின்றது. அன்று நடந்ததும் தர்மத்திற்கான யுத்தம்தான்.
ஈ பி ஆர் எல் எப்
இப்படி நிறைய இவர்களைப்பற்றி எழுதலாம். அனால் விடயத்திற்கு வருவேம். இவர்கள் பாசிசப்புலிகளை அழிப்பேம் என்று செல்லித்திரிந்து கெண்டிருக்கும் பெழுதே அவர்களின் யாழ்மாவட்டத்தின் இராணுவ பெறுப்பிலிருந்த டக்லஸ்தேவானந்தாவிற்கும் (இன்றைய ஈ.பி.டி.பி. தலைவர்) ஈ.பி. தலைமைக்கும் பிரச்சனை உருவாகி உச்சத்தை அடைந்திருந்தது. அதே நேரம் அந்த அமைப்பின் அரசியல் பிரிவு பெறுப்பாளராயிருந்த டேவிற்சனும்(ஈழமணி) ஈ.பி.ஆர்.எல்.எவ்.தலைமையுடன் முரண்பட்டு வெளியேறியிருந்தார். இதனால் அவர்களின் புலிகள் மீதான தாக்குதலும் வாயளவிலேயே இருந்து கெண்டிருந்த நிலையில் 86ம் ஆண்டு மார்கழி மாதம் புலிகள் வடக்கு கிழக்கெங்கும் ஒரு நள்ளிரவு ஈ.பி.ஆர்.எல்.எவ். முகாம்கள் மீது தாக்குதலை தெடுத்து காலை விடிவதற்குள்ளாகவே அனைத்து முகாம்களையும் தங்கள் கட்டுபாட்டிற்குள் கெண்டு வந்தனர். இவை இரண்டும்தான் புலிகளின் மீது சுமத்தப்படுகின்ற சகேதர யுத்தம் என்கிற செலாடல். யுத்தகளத்தில் நிற்கும் வீரன் அது யாராகஇருந்தாலும். அவனிற்கு தெரிந்தது இரண்டேயிரண்டுதான். அதாவது கெல் அல்லது கெல்லப்படுவாய். எனவே செய் அல்லது செத்துமடி.புலிகளிற்கும் அன்று அதே நிலைமைதான் கெல்லாவிடில் கெல்லப்பட்டிருப்பார்கள்.
மெல்லிய ஒளியில் ஒருகுரல்
இன்று நீங்கள் பார்த்தது சாத்திரியென்ற சமுத்திரத்தின் சில துளிகள்.
சாத்திரியின் போதனைகள் பொன்மொழிகள் பற்றி மேலும் அறிய விரும்பின் http://sathirir.blogspot.co.uk என்ற வலை தளத்தை அழுத்துங்கள். உங்கள் இதயம் பரந்து விடும்.
இலக்கிய சந்திப்பு இதுபோன்ற பல்கருத்துக்களுக்கு இடமளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. விளிம்பு நிலை மக்கள் பெண்ணியம் தலித்தியம் பற்றி பேசுபவர்கள் இடது சாரி சிந்தனை கொண்டவர்கள் மாற்று கருத்து கொண்டவர்கள் அனைவரும் சாத்திரியின் பாத்திரம் அவசியம் என்பதை புரிந்திருப்பீர்கள். பொறுமை சகிப்புதன்மை இது மிக அவசியம். பெண்ணியம் பேசுவோர் கூத்தடிப்பவர்கள்; உள்ளாடை இன்றி திரிபவர்கள். விளிம்பு நிலை பற்றி பேசுவோர் அரச கைக்கூலிகள்; உளவு படையினரின் கையாட்கள். மாற்றுக்கருத்தாளர்கள் கொல்லபட வேண்டியவர்கள். தாமாக இறந்தாலும் மன்னிக்க கூடாது. விஜயானந்தன் போன்ற கம்யூனிஸ்டுகள் பிசாசுகள். குழையடித்தல் ( கொலை) அவசியம். மாற்று இயக்கங்களுக்கு மேல் நடந்த கொலை வெறி தர்ம யுத்தம். இதுவே சாத்திரியின் சாரம். குறுகிய பார்வையை விடுத்து சாளரங்களை திறந்து விடுங்கள். இதுவரை காலமும் நீங்கள் உறக்கத்தில் இருந்தீர்கள்.
சாத்திரி உங்கள் தூக்கத்தை கலைத்துவிட்டார். புதியதோர் உலகம் செய்ய புறப்படுங்கள். கருத்துகளுக்கு களமமைப்போம்.
எல்லோரும் சேர்ந்து கோரஸ்:
சங்கிலி புங்கிலி கதவத் திற, நான் மாட்டேன் போங்க புலி!
இருள் சூழ திரை மூடப்படுகிறது.
************************************************
பிற்கூத்து -இரயாகரன்
திரை விலகுகிறது. மேடையில் துள்ளிக் குதித்து சேனாதிபதி இரயாகரன் வருகிறார். இலக்கியம், பெண்ணியம், தலித்தியம், சமபாலுறவு போன்ற அனைவற்றையும் சங்காரம் செய்யவேண்டி அவதரித்த அவர் இலக்கியச் சந்திப்புத் தொடர் குறித்தும், தோழர் டொமினிக் ஜீவா குறித்தும் கண்கள் சிவந்து தமிழரங்கத்தில் (www.tamilcircle.net) உறுமுகிறார்.
இலக்கியச் சந்திப்பு: மலடாகிப் போன வக்கற்ற வக்கிர இன்ப நுகர்ச்சி, இலக்கிய விபச்சாரம்.
பாராளுமன்றம் பன்றிகள் கூடிக் குலாவும் சகதியாக இருக்குமளவுக்கு அதன் பிரதிநிதிகள், ஊழல், லஞ்சம், விபச்சாரம், சாதிச் சங்க அரசியல், நிற அதிகாரம், ரவுடித்தனம், கடத்தல், திருட்டு, உழைப்பை உறிஞ்சும் அட்டைகள் என்று சமுதாயத்தின் இழிந்து போன அனைத்து சமுதாய விரோதிகளும் கூடி புரண்டு எழும் நாற்றத்தால் அழுகிக் கிடக்கின்றது. இந்தப் பாராளுமன்றங்கள் எப்படி மக்களுக்கு விரோதமாக இருக்கின்றதோ, உலகத்தில் உள்ள கழிசடைகள் எல்லாம் ஜனநாயகத்தின் பெயரில் கூடுமிடமாக இருக்கின்றதோ, அது போன்று தான் புலம் பெயர் இலக்கியச் சந்திப்பும் இருக்கின்றது என்றால் மிகையாகாது.
புலம் பெயர் இலக்கியச் சந்திப்பு ஏன் நடத்துகின்றார்கள் என்று கேட்டால் அதற்குக் கூட பதிலளிக்க முடியாத வகையில், சமூக நோக்கம் சிறிதும் அற்றவையாகி வக்கற்றுப் போய் மலடாகியுள்ளது. கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் பின்பும், சமூகத்தின் நோக்கத்தில் உண்மையையோ, நேர்மையையோ கொண்டிருப்பதில்லை. மலடாகிப் போன மலட்டுத் தனத்தில் வக்கற்றவர்களாகி உயிர்ப்பற்ற வம்புகளின் இன்ப நுகர்வில் காலத்தையும், சமூகத்தையும் இட்டு வக்கரித்து பிதற்றுவதே இதன் பொழுது போக்கு. காழ்ப்பு உணர்வுகள், சதிகள், திட்டமிட்டே தாக்குவது, முதுகு சொறிவது, குறுகிய நோக்கில் சாதி மற்றும் சமுதாயத்தில் எதாவது ஒன்றை இட்டு, சமூக நோக்கமின்றி முன்னிலைப்படுத்தி அதில் குளிர் காய்வது, பெண்ணியம் பேசிய படி கலந்து கொள்ளும் பெண்களை ஆணாதிக்க வடிவில் இழிவாக கொச்சைப்படுத்துவதும் பயன்படுத்துவதும், தமது உப்புச் சப்பற்ற பல பக்கக் கட்டுரைகளை பைபிள் மாதிரி, எழுதியதை ஒப்புவிப்பதை நோக்கமாக கொள்வது, விவாதங்கள் நடத்த முடியாத அளவுக்கு அறிவற்ற குருட்டுத்தனத்தில் இருந்து வீம்பு பண்ணுவது, எங்கள் அறிவுத் தேடலை பன்முகப்படுத்துகின்றோம் என்ற வம்பு வாதங்களின் பின்பு ஓணான் போன்று தமது நிறம் மாற்றும் வக்கற்ற தன்மைக்கு விளக்கம் அளிப்பது, நேரடி வன்முறை என்று, சமுதாயத்தை இட்டு அலட்டிக் கொள்ளாமல், போதைவஸ்து கடத்தியவர்களும், ஜனநாயக படுகொலைகளை நியாயப்படுத்தியவர்களும், உற்றர்ரும், உறவினரும், நண்பர்களும், இலக்கியம் சமுதாயத்துடன் தொடர்பற்றது என்று சமுதாயத்தில் இருந்து விலகி வக்கற்று பீற்றுபவர்களும் என்று பல வண்ண சமூக இழிவுகள் சேர்ந்து, யதார்த்தத்துக்கு புறம்பாக தமது வம்புத் தனங்கள் மூலம் சீரழிந்து கிடக்கின்றனர்.
இலங்கை இந்தியாவில் வாழும் மலட்டு இன்ப நுகர்ச்சி இலக்கிய நீட்சைகள், டிஸ்கோ நடனக்காரிகள் போல் உரிந்துவிட்டு ஆடும் சுதந்திர, ஜனநாயக, வேஷைத்தனத்தில் தலைகால் தெரியாமல் குதித்தாடுகின்றனர். இந்த வெளிநாட்டு பயணக் குலுக்கல் மற்றும் தமது தெரிவில் தமது குறுகிய வக்கற்ற திடீர் மலட்டு அதிர்ச்சி கோசங்களை உச்சரித்து, கூப்பிட்டவரை உச்சி குளிர வைக்கும் நபர்களை முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். அனைத்துக்கும் பணத்தை ஆதாரமாக, அடிப்படையாக கொள்ளுகின்றனர். இந்தியா, இலங்கையில் இருந்து பிழைப்புவாத பிரமுகர்களை கூப்பிடுவதே ஜனநாயக புரட்சியாகவும், புலம் பெயர் இலக்கியமாகிப் போனது ஆச்சரியமானது அல்ல. இது சாதி பார்த்து, பிரமுகத்தனம் பார்த்து, மார்க்சிய எதிர்ப்பின் அளவு கோல் பார்த்து, இதில் எது தமது வக்கற்ற அரசியல் மலட்டு பிழைப்பவாத பிளவு அரசியலுக்கு சாதகமானது என்று கணிப்பிட்டே, தமது குலுக்களில் கூட மோசடி செய்கின்றனர்.
இந்தியாவில் இருந்து இலங்கை வரை இந்த குலுக்கல் விரவிப் பரவுகின்றது. ஏகாதிபத்திய பாலியல் நோயால் வக்கிரம் பிடித்த ஆணாதிக்க கழிசடை நாயகன் சாருநிவேதாவின் ஐரோப்பிய இலக்கிய வக்கற்ற மலட்டுச் சுற்றுப் பயணமும் (பார்க்க பெட்டிச் செய்தியை), இலங்கையில் இருந்து வந்த டொமினிக் ஜீவா என, வக்கற்ற இரு மலட்டு எதிர் அணி சார்ந்து இலக்கியச் சந்திப்பின் கோஷ்டி கானத்தில் கலந்து கொண்டனர். இது போன்றே சில மாதத்துக்கு முன் நடந்த பெண்கள் சந்திப்பிலும் நடந்தது. புலம் பெயர் இலக்கிய நடத்தை என்பது, இலங்கை இந்தியாவில் வக்கற்றுப் போன பிரமுகர்களின் தயவிலான கோஷ்டி கானத்தில் புலம் பெயர் இலக்கிய வானில் பாடப்படுகின்றது. இந்த வக்;கற்றவர்கஙளின் இன்ப நுகர்ச்சி எப்போதும் சந்திப்புகளின் இறுதியில் அருந்தும் மதுவில் புளுத்து வெளிப்படுவது வழக்கம்;. இங்கு வன்முறை, சாதி வக்கிரம், நிற வக்கிரங்கள், ஆணாதிக்க கொப்பளிப்புகள் உச்ச வெறியில் உளறும் போதும் தலைகால் தெரியாது பீறிடுவதே புலம் பெயர் இலக்கியத்தின் உச்சமாகும்.
இலக்கிய சந்திப்பிலும், வெளியிலும் கோஷ்டி சேரும் வக்கற்றவர்கள், இலக்கிய சந்திப்பு புலிகளின் அராஜகத்துக்கு எதிரானது என்றும், அதனால் தான் புலிகள் இதை விரும்பவில்லை என்றும் பலவிதமாக தாலிக்கு முடிச்சுப் போடுகின்றனர். புலிகளின் அராஜகத்துக்கு இலக்கியச் சந்திப்பு எதிரானது என்பது எந்தவிதமான அரசியல் அடிப்படையோ, அதை இதுவென்று சொல்ல எந்தவிதமான அடிப்படையும் ஆதாரமும் கிடையாது.
புலியெதிர்ப்புக் கோசத்தின் கீழ் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தையே மறுத்து, இலங்கை அரசின் கைக்கூலியாக கோட்பாட்டிலும், நடைமுறையிலும் கோசம் போடுவது வக்கரித்துக் கிடக்கின்றது. எல்லாவற்றுக்கும் புலியெதிர்ப்பு ஊடாக நியாயப்படுத்தி, ஜனநாயக வேடம் போடுவதன் மூலம், பெரும் தேசிய வெறியர்களாக பவனிவருவதில் இலக்கியச் சந்திப்பு வக்கரித்து வெதும்பிக் கிடக்கின்றது. மறுபுறத்தில் புலியெதிர்ப்பில் புலிகளின் ஜனநாயக விரோத நடத்தைகளை தனித்துவமாக்கி, அரசியல் விபச்சாரம் செய்வது மலட்டு தனத்தில் ஒரு வடிவமாகியுள்ளது. இந்த மலட்டுத்தனத்தைத் தான், எம் மண்ணில் நடந்த உன்னதமான ஜனநாயக போராட்டமாக காட்ட முனைவது நிகழ்கின்றது.
சபாலிங்கம் குறித்து இரயாகரன்
புலம் பெயர் வக்கற்ற மலட்டு இலக்கியத்தின் நியாயப்படுத்தலை படுகொலை செய்யப்பட்ட சபாலிங்கம் பெயரில் பூசி மெழுகுகின்றனர். புலம் பெயர் இலக்கிய சஞ்சிகை சரி, இலக்கியச் சந்திப்பு தொடங்கியவர்களும், தொடங்கிய சமூக நோக்கம் சீரழிந்த போது, பலரை அதில் இருந்து ஒதுங்க வைத்தது. இந்த இலக்கியச் சந்திப்பு தொடங்கியதுக்கும் சபாலிங்கத்துக்கும் எந்தவித உறவு ஒட்டோ கிடையாது. சபாலிங்கம் கடைந்தெடுத்த வகையில், புதிதாக வந்த அகதிகள் சார்ந்து நியாயமற்ற வகையில் அவர்களை மூலதனமாக்கிய ஒரு வியாபாரி தான். இங்கு அல்லல்பட்டு வந்த அகதிக்கு நியாயமான வகையில், பணம் பெற்று உதவிய சமூகவாதியல்ல. சமூகப்பற்று என்பது இந்த அகதிகளை மனிதநேயத்துடன் அணுகுவதும், அவர்களிடம் இயன்றதை மட்டும் பெற்று உதவுவதுமே. ஆனால் இதற்கு மாறாக பணத்தை கறந்ததன் மூலம், அவரின் சொந்த வாழ்வை மேம்படுத்தும் ஊடகமாக இந்த அகதிகள் இருந்தனர். இலங்கையில் இருந்து வரும் அகதிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தவர், அவர்களிடம் வியாபாரியாக நடந்தவர், புலம்பெயர் மற்றும் சமூகம் பற்றி இலக்கியத்தில் மனிதாபிமானியாக, சமூகப் பற்றாளனாக இருந்தார் என்று பசப்புவது உண்மைக்கும், நேர்மைக்கும் மாறானது. இரட்டை நடத்தைகள் சமூக உறவில் சாத்தியமானது அல்ல. மனித உரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தில் பணம் பெற்று, இலங்கை அரசின் பாதுகாப்பு பெற்று வெளியிடும் வெளியீடுகளை, மொழி பெயர்த்து ஏகாதிபத்திய அரசியல்வாதிக்கு விசுவாசமாக விநியோகித்து, ஏகாதிபத்திய கைக்கூலியாகி புலம் பெயர் இலக்கியவாதியாகியவர். இவர் படுகொலை செய்யப்பட முன்பு மிக குறுகிய காலமே, இந்த இலக்கியச் சந்திப்புகளுக்கு சென்று வந்தவர். ஆனால் புலம் பெயர் இலக்கிய செயற்பாட்டால் தான் கொல்லப்பட்டார் என்பது அப்பட்டமான சோடிப்பும் மோசடியுமாகும். அது சரி இந்த இலக்கிய பிரமுகர் என்ன இலக்கியத்தை புலம் பெயர் சமூகத்துக்கு தந்துள்ளார்! அதில் எது சார்ந்த குறிப்பாக கொல்லப்பட்டார்! வக்கற்றுப் போன மலட்டு எந்த இலக்கியவாதியும் வைக்க முடியாத மர்மமான இலக்கியமாம் அவர் இலக்கியம்!
இராஜேஸ்வரி குறித்து இரயாகரனின் நோக்கும், நரம்பிலா நாக்கும்.
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்: மகிந்தவுக்காக முந்தானை விரிக்கின்றார்.
மகிந்தவுக்கு ஏற்ப தாளம் போடும் இந்த கிழக்கு பாசிட் தான், புலியெதிர்ப்பு பாட்டுப்பாடும் தேனீயில் மகிந்தவுக்காக முந்தானை விரிக்கின்றார். எழுத்துச் சுதந்திரம் பற்றி, இன்றைய எதார்த்தத்தையே தனக்கு ஏற்ப திரித்துப் புரட்டுகின்றார்.
எழுத்துச் சுதந்திரத்துக்கு எதிராக தானே மகிந்தாவுடன் குலாவியபடி, புலிக்கு எதிராக புலம்புகின்றார். இன்று இலங்கையில் அதிகளவில் ஊடகச் சுதந்திரத்தை மறுக்கின்ற பேரினவாத பாசிச அரசை காப்பாற்றும் வகையில், ஒரு பாசிட்டுக்கே உரிய கோமாளித்தனதுடன் கதை சொல்லுகின்றார். இன்று இலங்கையில் அதிகளவில் ஊடகச் சுதந்திரத்தை நசுக்குவது அரசு தான். இது உலகமறிந்தது. இப்படி இருக்க இந்தப் பேரினவாத அரசுக்கு எதிராக கருத்துரைக்காது, ஒரு போக்கிலிக்குரிய வகையில் சுதத்திரத்தைப் பற்றிப் பேசுகின்றார். ரவுடி பிள்ளையானை கிழக்கின் விடிவெள்ளியாக எழுதிய இந்தப் பரதேசி தான், இலங்கை அரசின் இன்றைய பாசிச கொடூரங்களை மறுத்து, அதை புலிக்கு எதிராக மட்டும் திரித்து எழுத முடிகின்றது.
இந்தப் பரதேசி இலங்கை அரசுடன் ஓட்டிகொண்ட, பிழைப்புவாதிகளுடன் சேர்ந்து துரோகிகளுக்கு அஞ்சலிக் கூட்டத்தை நடத்துகின்றது. இந்தக் கேடுகெட்ட இந்த அரசியலை நாம் அம்பலப்படுத்தி எழுதுவதால், நாம் இந்தக் கொலை சரி என்று நியாயப்படுத்துவதாக கூட இந்தக் கும்பல் திரித்துக் கதை சொல்கின்றது.
இவர்கள் எல்லாம் மாற்றுக்கருத்து என்று இன்று கருதுவது, அரசுடனும், ஏகாதிபத்தியத்துடனும், தன்னார்வ சதிக் கும்பலுடனும், தாம் கூடிக் குலாவி புணரும் அரசியலைத் தான்.
பெண்கள் சந்திப்புக் குறித்து தமிழரங்கத்தில் வெளியான 100% அவதூறு
பெண்கள் சந்திப்பு: உள்ளாடைப் புரட்சி
சுய இன்பங்களுக்காகவும், தங்களுடைய உடல்களை மூலதானமாக வைக்கிறார்கள். நம் சமூகத்தில் இந்நிலை மிக மோசமானதாகவே இருக்கின்றது. இப்படிப்பட்ட பெண்கள் தங்களுடைய சுய தேவைகளுக்கு இலக்கியம் வழியாகவும், பெண்ணீயம் பேசியும், பெண்ணிலைவாதிகளாகவும் காட்டவே முற்படுகின்றார்கள்.
.பெண்கள் சந்திப்பு நடத்துபவர்கள் நிலையும் இப்படியே! இவர்கள் சக பெண்களுக்காக என்ன சொல்ல வருகிறார்கள் என்பதில் 27 - வருடங்களாக இன்னும் தடுமாற்றத்திலேயே இருக்கிறார்கள். இதன் அரசியல் பின்னணி மிக ஆபத்தாகவே இருக்கின்றது. பெண்கள் சந்திப்பு நடத்துபவர்கள் பின்னணியில் ஏதோ சில, பல காரணங்களுக்காக ஆணாதிக்கத்தின் பாலீயல் சுரண்டலுக்குள் கட்டுப்பட்டிருக்கின்றது. மறுபுறம் ஈழத்து அரசியல்.
பல கேள்விகளை கேட்டாகி விட்டது. பெண்கள் சந்திப்பு உறுப்பினர்களின் மொத்த அசிங்கங்களும் 27- ஆம் வருட பெண்கள் சந்திப்பில் அம்பலப்பட்டு நிற்கின்றது. இதற்கு மேலும் இப்பெண்கள் சந்திப்பு நிகழ்வு தொடருவது மிக ஆபத்தானது.
பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ”காட்சி அரசியலில் பெண்ணின் உடல்” என்ற தலைப்பில் கட்டுரை வாசிக்கப்படுகிறது. உள்ளாடைகள் தொங்கவிடப்படுகின்றது. ஆணுறையால் பேணர்கள் அலங்கரிக்கப்படுகின்றன. அறிக்கைகள் பல விடப்படுகின்றன. பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வந்தவர்ககள் இன்னும் வீடு போய் சேரவில்லை. இலக்கியச்சேவையில் இன்னும் நாடுநாடாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர். செலவுகளுக்கு கணக்கு வழக்கு கேட்டுவிடக் கூடாது. பெண்ணீயத்தின் இறுதி தீர்வாக யோனி கட்டுடைப்பில் இருக்கின்றது என்ற புரட்சி வாக்கியம் வெடித்துவிட்டது. தீவிரவாதத்தை இணையம் மூலம் ஊக்குவிக்கிறார்கள் பெண்கள் சந்திப்பு நடத்துபவர்கள்.
தனி மனிதர்கள் மிரட்டல்கள், பொறுக்கி கூட்டங்களுடன் பெண்கள் சந்திப்பு உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டு சவுண்டு விடுவார்கள். ”காட்சி அரசியலில் பெண்ணின் உடல்” என்று குமுறி குமுறி கட்டுரை வாசித்தவர் ”ஆண்குறியை உள்நுளைப்பதுக்கு இப்போது எந்த முக்கியத்துவமும் இல்லை. இருவர் கைகள் முட்டுப்படுவது போல்தான் இதுவும். குறியாயிருந்தாலென்ன, மூக்காயிருந்தாலென்ன எல்லாம் ஒன்றுதான்” என்று கூட்டுக்கலவிக் கூட்டத்துடன் மூக்கை உள்நுளைத்துக் கொண்டிருப்பார்.
பெண்ணின் உடல், காட்சி அரசியல், ஆணாதிக்கம் மொத்தத்திற்கும் ”பெப்பே” காட்டப்படும் பின்னணி!
சென்ற வருடம் சத்திய கடதாசியில் நளினி ஜமீலா பற்றி ”மதிப்பு மறுப்பறிக்கை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதில் மூன்று பின்னூட்டங்கள். இரு பின்னூட்டங்கள் ஜெயஸ்ரீ என்ற பெயரில் இருக்கும். அதன் கருத்துக்களை நீங்கள் வாசித்து பாருங்கள். யார் இந்த புதிய ஜெயஸ்ரீ என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். கொரிய எழுத்து ஆராய்ச்சியாளினியின் இயற்பெயர் தான். கட்டுரையில் கூட ஓரிடத்தில் ஜமீலா ஜெயஸ்ரீயை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். (கேரளத்தை சேர்ந்த அய்யர் வீட்டுப் பெண் ஜெயஸ்ரீயுடன் கூட்டுக்கலவி கூட்டம் கூடும் போது புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏன் உயர்சாதிப் பெண்ணை கட்டினார்? என்று இனி கேள்வி கேட்க கூடாது. கூட்டுக்கலவிக்கு தலீத் பெண்ணை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்று இனி யாராவது கேள்வி எழுப்பலாம்)
அரசியல்வாதிகள் ஒருபுறம் மக்களை நாற அடித்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் தகாத இலக்கியவாதிகளின் பின்னணி அரசியல், பாலீயல் சுரண்டலிலும் இணைந்த கூடலிலும், அரசியல் பேசுவதும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதும் நடக்கிறது.
. இந்த தெனாவட்டு தான் நாங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவோம். என்ன வேண்டுமானாலும் செய்வோம். இந்தியக் கைக்கூலிகள், ஈழஅரசு கைக்கூலிகளாக நாங்கள் கும்மாலமடிப்போம், கூத்தடிப்போம் என்பார்கள். கொலை செய்வார்கள்! கொள்ளை அடிப்பார்கள்! ஜனநாயகம் பேசுவார்கள்! புலியெர்ப்பு என்று எகுறுவார்கள்! பெண்ணீயம் பேசுவார்கள்!
தலித்தியம் குறித்த இரயாகரனின் வெள்ளாம் வீம்பு
தலித்தியம் சாதி கட்டமைப்பை அடிப்படையாக கொண்டு நிறுவனமாக மாறுவதுடன் தனக்குள் சாதிப்பிளவை கடக்க முடியாதுமான சாதியை கடந்த சமூகத்தை கோராதுமான தனக்குள் சுரண்டும் வர்க்கத்தை பாதுகாக்கும் வகையில் முன் வைக்கும் தலித் அரசியலையும் தனக்குள்ளும் வெளியிலும் சாதிஅமைப்பை தக்கவைத்து சுரண்டும் வர்க்கத்தால் தனித்து அரசியலை கொண்டு தலைமை தங்கும் வகையில் தனக்குதான் அணைகட்டியது தான் தலித்தியம்.
முன்பு உயர்சாதிகள் கிராமங்களில் ஒதுக்குபுறத்தில் கீழ்சாதிகளை ஒதுக்கி அணைகட்டி வைத்து இருந்த சமூக கட்டமைப்பு தகர்க்க எழுந்து வரும் போரட்டத்தை காக்க இன்று தலித் அரசியல் அதையே தனக்குதான் வேலிபோட்டு செய்கின்றது. இதை தலமைதாங்கும் தனித் முதலாளிகளும் பூர்சுவா வர்க்கமும் தமது சொந்த நலன்களை பெறவும் தக்க வைக்கவும் தேவைப்படுவது தலித் அரசியல் ஊடான ஒரு சமுக அடித்தளமே. இதைதான் சுரண்டப்படும் தலித்துக்கு முன் வைப்பதன் மூலம் மொத்த சமூகத்தையும் இதை இன்றி பாதுகாக்க முனைகின்றனர் இன்றுதலித் அணிக்குள் பல சாதிகள் உள்ளதுடன் அணிக்குள் உள்ள சாதி கட்டமைவு உடைக்க முடியாத வகையில் தம்மை தாம் தீண்டதகாதவர்களாக பிரகடனம் செய்ய பார்ப்பனியத்திற்கு போட்டியாக தலித் அரசியலை பிரகடனம் செய்கின்றனர்.
மேடை இருள, மேடையின் கீழிருந்து கோரஸ் ஒலிக்கிறது:
நல்ல கருத்துச் சொன்னீர் இரயாகர நயினாரே
நாடு விளங்கிவிடும் நம்ம நயினாரே
திமிர் வெள்ளாளர் வாழட்டும் நயினாரே
தலித்துகளும் பெண்டுகளும் சாகிறோமே
முற்றிற்று!
வெளியீடு:
நிர்மலா
விஜி
பானு
உமா
ராகவன்
முரளி
தேவதாஸ்
சந்துஸ்
அசுரா
தமயந்தி
கீரன்
சோபாசக்தி
நித்தியானந்தன்
காண்டீபன்
அனுசன்
06.04.2013 அன்று இலண்டன் இலக்கியச் சந்திப்பின் அமர்வுகளுக்குமுன் வெளியிடப்பட்டது.
"கருத்துச் சுதந்திரம் என்பது அவதூறுகளுக்கும், பாலியல் வசைகளுக்கும், படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கும் வழங்கப்படும் சுதந்திரமாகாது"