4/09/2013

| |

சந்திவெளியில் வாழ்வின் எழுச்சி சந்தை


தமிழ் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு வாழ்வின் எழுச்சி உற்பத்திச் சந்தை இன்று 08.04.2013 முதல்  நாளை 09.04.2013 வரை  சந்திவெளி சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் நடைபெறுகின்றது. 
வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சந்தையினை இன்று (08.04.2013) கோறளைப் பற்று தெற்கு பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவரும், முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவசேதுரை சந்திரகாந்தன் அவர்கள் திறந்துவைத்தார்.  சந்தையினை திறந்து வைத்த அவர் அங்கு பொருட்கொள்வனவிலும்  ஈடுபட்டார்.
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் சமுர்த்திப் பிரிவின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இச்சந்தையில் மலிவான விலையில் உற்பத்திப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு வழிசமைக்கப்பட்டுள்ளது.