4/07/2013

| |

ஏறாவூர் பற்று விவசாயிகளுக்கு இன்றுடன் நிம்மதி பெருமூச்சு – முன்னாள் முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை.

ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் எல்லைக்குட்பட்ட மாவடிஓடை வாயிலான பல்லாயிரம் விவசாய பெருமக்கள் வெள்ள காலங்களில் போக்குவரத்தில் பெரும் கஸ்டத்தை அனுபவித்து வந்துள்ளார்கள். இவர்கள் குறிப்பாக பஞ்சர் ஓடை ஆறு, வண்ணாத்தி ஆறு மற்றும் சில்லிக்கொடி ஆறு போன்ற ஆறுகள் வெள்ள காலங்களில் பெருக்கெடுப்பதனால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருக்கும்.இதனால் பெருமளவிலான விவசாயக் காணிகள் மற்றும் கால்நடைகள் உட்பட தோட்டங்களும் வெகுவாகப் பாதிக்கபட்டிருந்தன.
இவ்வாறு காலங்காலமாக இதனை அண்டிய பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் எதிர் கொண்டு வந்த போக்கு வரத்துப் பிரச்சினைக்கு இன்றுடன் தீர்வு எட்டப்பட்டது. முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று குறித்த பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து பஞ்சர் ஓடை, வண்ணாத்தி ஆறு மற்றும் சில்லிக்கொடியாறு என்பவற்றை பார்வையிட்டு அதற்குரிய பாலங்களை அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை உடன் ஆரம்பிக்கும்படி உத்தரவிட்டார். இத்திட்டத்திற்கான நிதி ஜெய்க்கா திட்டத்தின் கீழான வெள்ளத்தினால் தூர்ந்து போன பாலங்களை புணரமைத்தல் எனும் விசேட திடட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்ய்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக் களவிஜயத்தில் முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தனுடன் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் மகிந்தா மற்றும் தொழிநுட்ப உத்தியோகஸ்த்தர்கள், ஒப்பந்தக்காரர் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.