தொழிலார்களின் நாளான மேதினத்தினை முன்னிட்டு எதிர்வரும் 01.05.02013 அன்று மாபெரும்மேதின ஊர்வலப் பேரணி ஒன்றினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.இப்பேரணியினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க.மோகன் அவர்கள் ஏற்பாடு செய்வதுடன், இப்பேரணியினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தலமை தாங்கி நடாத்துகின்றார்.
செங்கலடி சந்தியிலிருந்து வாகனங்களின் பவனியுடன் ஆரம்பமாகும் இப்பேரணியானது, மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தை அடைந்து, அங்கு மேதினக் கூட்டமும் இடம்பெற இருக்கின்றது. எனவே அன்றைய தினம் இடம்பெறும் மேதின நிகழ்வகளில் கலந்துகொள்ளுமாறு அனைத்து உழைக்கும் வர்க்கங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அன்புடன் அழைக்கின்றது