4/17/2013

| |

ஈரானில் மீண்டும் பாரிய பூகம்பம்

40 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
பாகிஸ்தான் எல்லையையொட்டிய தென் கிழ க்கு ஈரானில் நேற்று இடம்பெற்ற பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக ஆரம்பகட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ் சப்படுகிறது.
ஈரானில் மையம் கொண்ட இந்த நில அதிர்வு ரிச்டர் அளவு கோலில் 7.8 வீரியம் கொண்டதாக இருந்தது என அமெரிக்க புவி யியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. எனினும் ஈரான் புவியியல் மையம் மேற்படி அதிர்வு 7.5 ரிச்டர் அளவில் பதிவானதாக குறிப்பிட்டுள்ளது. இந்த பூமியதிர்வு வளை குடா மற்றும் தெற்காசிய நாடுகள் வரை உண ரப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம், வட இந்தியா உட்பட பிராந்தியத்தில் பாரிய அதிர்வு உணரப்பட்டதால் கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதில் ஈரானின் தென் கிழக்கு நகரமான காஷிலிருந்து கிழக்காக 53 கிலோ மீற்றரிலும் ஷிரான்ஷஹரிலிருந்து வட கிழக்காக 103 மைல்களுக்கு அப்பாலும் சஹ்தானின் தென் கிழக்காக 123 மைல்களுக்கு அப்பாலும் இந்த பூமியதிர்வு மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. பாகிஸ்தான் காலநிலை திணைக்களத்தின் அதிகாரி ஷபிக் அஹமட், இந்த நில அதிர்வு தென் கிழக்கு ஈரானின் பாகிஸ்தான் எல்லையையொட்டி பதிவானதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த பூமியதிர்வு தெற்கு பாகிஸ்தானின் கராச்சி நகர் உட்பட பலுகிஸ்தான் மாநிலம் எங்கும் உணரப்பட்டதோடு தென் கிழக்கு கடற்கரை நகரான குவட்டாவிலும் உணரப்பட்டுள்ளது.
பூமியதிர்வின் சேத விபரங்கள் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட செய்தி எதுவும் வெளியாகவில்லை. எனினும் 7.8 ரிச்டர் அளவான பூமியதிர்வு மையம் கொண்ட பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் தினங்களில் பின்னதிர்வுகளும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த பூமியதிர்வால் நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என ஈரான் அரச அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இது ஒரு பாரிய பூமியதிர்வாகும். நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கக் கூடும்” என பெயரை வெளியிடாத ஈரான் அதிகாரி ஒருவர் அல் ஜkரா தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டார்.
பூமியதிர்வு ஏற்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பணியாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக ஈரானுக்கான செம்பிறை சங்கத்தின் தலைவர் அந்நாட்டின் இஸ்னா செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.
பூமியதிர்வு ஏற்படும் பூகோள களத்தில் இருக்கும் ஈரானில் கடந்த வாரம் ஏற்பட்ட 6.3 ரிச்டர் அளவான பூமியதிர்வில் குறைந்தது 37 பேர் பலியானதோடு 850க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதேபோன்று கடந்த 2003 டிசம்பரில் தெற்கு நகரான பாமில் இடம்பெற்ற பூமியதிர்வில் 31,000 பேர் கொல்லப்பட்டனர். இதன் போது நகரத்தின் கால் பகுதியான மக்கள் கொல்லப்பட்டனர்.