தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் அனுஷ்டிக்கப்பட்டுவரும் வெருகல் படுகொலை ஏபரல் 10 நினைவு நாள் ஏற்பாடுகள் நாளை கட்சித் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் வெருகல் மலை மக்கள் பூங்காவில் நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாணத்தின் விடிவுக்காக உயிர் நீத்த மறவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி வெருகல் வெருகலம்பதி ஆலயத்தில் நாளை விசேட அபிஷேக பூசையும் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்று பிற்பகல் 4.30 மணி தொடக்கம் உயிர் நீத்தவர்களின் நினைவாக விசேட கூட்டமும் வெருகல் மலை மக்கள் பூங்காவில் நடைபெறவுள்ளது.