4/05/2013

| |

81 பெண் பயனாளிக் குழுவினரினால் நடத்தப்பட்ட இரு நாள் உற்பத்திப்பொருட் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும்

Vila Vila--1அம்கோர் நிறுவனத்தின் அனுசரனையுடன் கிரான் பூலாக்காடு கிராமத்தினைச்சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 81 பெண் பயனாளிக் குழுவினரினால் நடத்தப்பட்ட இரு நாள் உற்பத்திப்பொருட் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் நேற்று (04.04.2013ம் திகதி) முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கிரான் பிரதேச பிரிவுக்கு உட்பட்ட புலிபாய்ந்த கல் பிரதேசத்தில் நடத்தப்பட்ட இன் நிகழ்வில் கலந்த கொண்ட முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்கள் மக்களுடன் கலந்துரையாடியதுடன் மகளிரினால் உற்பத்தி செய்யப் பட்ட உற்பத்திப் பொருட்களையும் கொள்வனவு செய்தார். இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் முன்னாள் மாகான சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அம்கோர் பணிப்பாளர் சுரேஸ் த.ம.வி.பு பொருலாளர் தேவராஜா உட்பட பலர் கலந்த சிறப்பித்தனர்.