4/23/2013

| |

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது 2013 விண்ணப்பம் கோரல்

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் வருடம் தோறும் நடத்தப்படும் தமிழியல் விருது வழங்கலின் 2013ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஆண்டுதோறும் ஈழத்திலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம், தமிழியல் விருது வழங்கி வருகின்றது. இவ்வாண்டும் 5 ஆவது தடவையாக, இவ்விருதினை வழங்குவதற்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் செயல்வடிவம் கொண்டுள்ளது. அந்த வகையில், இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மிகச் சிறந்த மூத்த படைப்பாளி ஒருவருக்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ.கே.பாக்க்கியநாதன் உயர் தமிழியல் விருது வழங்கிக் கௌரவிக்கும். அதே போல் தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மூதத் படைப்பாளிகள் 10 பேருக்கு, வவுனியூர் ஸ்ரீராமகிருஷ்ண்ணா கமலநாயகி தமிழியல் விருதுடன் தலா ரூபா 15,000ரூபா வழங்கிக் கௌரவிக்கும். ஈழத்துப் படைப்பாளி அல்லாத அயல் நாட்டு தமிழ்ப்பணியாளர் ஒருவருக்கு கல்விமான் வ.கனகசிங்க்கம் தமிழியல் விருதுடன் ரூபா 25,000ஃ- வழங்கிக் கௌரவிக்கும். அத்துடன், இனநல்லுறவு தமிழியல் விருது, சிறந்த நூலுக்கான தமிழியல் விருதுகளும், 2012 யில் வெளிவந்த சிறந்த 15 நூல்களுக்கு, சுவாமி விபுலாநந்த அடிகளார் தமிழியல் விருது, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை தமிழியல் விருது, புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் தமிழியல் விருது, அருட்கலைவாரிதி சு.சண்முகவடிவேல் தமிழியல் விருது, நாவலாசிரியை பவளசுந்தரம்மா தமிழியல் விருது, கலைஞர் ஓ.கே.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது, கல்விமான் க.முத்துலிங்கம் தமிழியல் விருது, பம்பைமடு நாகலிங்கம் - நல்லம்மா தமிழியல் விருது பதிவாளர்நாயகம் எஸ்.முத்துக்குமாரன் தமிழியல் விருது, வித்தியாகீர்த்தி ந.சந்திரகுமார் தமிழியல் விருது, தகவம் வ.இராசையா தமிழியல் விருது, செந்தமிழ்ச்செல்வர் சு.ஸ்ரீகந்தராஜா தமிழியல் விருது, பம்பைமடு கந்தையா இரஞ்சிதமலர் தமிழியல் விருது, கவிஞர் கல்லாறன் மு.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது, துறையூர் வே.நாகேந்திரன் தமிழியல் விருதுகளும் வழங்கப்படவுள்ளன. அத்துடன் வருடத்தின் மிகச் சிறந்த ஓவியர் ஒருவருக்கு ஓவியர் கிக்கோ தமிழியல் விருதுடன் ரூபா 10,000ரூபாவும் வழங்கிக் கௌரவிக்கப்படும். அந்த வகையில், 2012ம் ஆண்டுக்க்கான தமிழியல் விருதுக்கான நூல்க்களைத் தேர்வு செய்ய படைப்பாளிகளிடம் இருந்து நூல்களை எழுத்தாளர் ஊக்குவிப'பு மையம் எதிர்ப்பார்க்கின்றது. ஈழத்திலும் வெளிநாடுகளிலும், வாழ்கின்ற ஈழத்து தமிழ்ப் படைப்பாளிகள் நூலுக்கான தமிழியல் விருதுக்காக நூல்களை அனுப்பி வைக்கலாம். நாவல், சிறுகதை, கவிதை, குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம், விடலை இலக்கியம், நாடகம், அறிவியல், ஆய்வியல், வரலாறு, பழந்தமிழ் இலக்கியம், மொழி பெயர்ப்பு, தொழில்நுட்பம் எனப் பல்துறை சார்ந்த நூல்களை தேர்வுக்காக அனுப்பி வைக்கலாம். நூல்கள் 2012 ஜனவரி 1 முதல் 2012 டிசம்பர் 31 காலப்பகுதியில் பிரசுரிக்கப் பட்ட நூல்களின் 3 படிகள் அனுப்பப் பெறுதல் வேண்டும். நூல்களுடன் 15.05.2013க்கு முன்னர் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி கொண்ட விபரத்தினை இணைத்து டாக்டர்.கே.குணநாதன் மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு, இலங்கை.என்ற விலாசத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.