3/24/2013

| |

ஒபாமாவின் பயணம் பற்றிய அரபு நாடுகளின் செய்தி ஊடகங்களின் கருத்து

நான்கு நாட்கள் நீடிய மத்திய கிழக்கு பயணத்தை அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா 23ஆம் நாள் முடித்து கொண்டு, ஜோர்டானிலிருந்து வாஷிங்டனுக்குத் திரும்பினார். இப்பயணத்தில் அவர் ஆக்கப்பூர்வமான அமைதித் திட்டத்தை அல்லது முன்மொழிவை முன்வைக்க வில்லை. ஆகவே, அரபு நாடுகளின் செய்தி ஊடகங்கள் இப்பயணம் குறித்து ஏமாற்றமும் சந்தேகமும் தெரிவிக்கின்றன.
ஒபாமாவின் பயணம், சுற்றுலா பயணத்தைப் போன்றது. முக்கியமான அரசியல் அம்சங்கள் எதுவும் இதில் இடம்பெற வில்லை என்று ஜோர்டானின் செய்தி ஊடகம் ஒன்று 23ஆம் நாள் வெளியிட்ட கட்டுரை தெரிவித்தது.
சௌதி அரேபியாவின் ரியாத் நாளேடு, தனது கட்டுரையில், அரபு நாடுகளுக்கான அமெரிக்காவின் கொள்கைகள் அடிக்கடி மாறி வருகின்றன. ஆனால், இஸ்ரேலுக்கான ஆதரவு அமெரிக்கா எப்போதும் மாறாது என்று குறை கூறியது.