வடக்கு மாகாணசபைத் தேர்தலை நிறுத்தி வைக்கும் எண்ணம் இல்லை. அதைச் செய்து விமர்சனங்களை எதிர்கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய எட்டு மாகாணசபைகளும் அனுபவிக்கும் அதிகாரங்களை விடவும் கூடுதலான அதிகாரங்களை வடக்கு மாகாணசபை கொண்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
'த ஹிந்து' பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.