3/09/2013

| |

மகளீர்தினத்தை சிறப்பாக அனுஸ்டித்த தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள்

இன்று உலகெங்கிலும் கொண்டாடப்பட்ட உலக மகளீர் தினத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வெகுவிமர்சையாக கொண்டாடியது. மட்டக்களப்பிலுள்ள தமது கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று பிற்பகல் கட்சியின் மகளீர் அணித் தலைவி திருமதி ம.செல்வி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், பொருளாளர் ஆ.தேவராஜா, உதவி செயலாளர் ஜெ.ஜெயராசி, மற்றும் மட்டு மாநகர பிரதி மேயர் ஜோர்ச்பிள்ளை, கிழக்கு பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் திருமதி பாரதி கெனடி, மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், மகளீர் அணியினர் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
 அரசியலில் பெண்களின் பங்கு தொடர்பாக கிழக்கு பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் திருமதி பாரதி கெனடி சிறப்புரையாற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் பெண்களின் பங்களிப்பு தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் சிறப்புரையாற்ற அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் மகளீர் தினம் தொடர்பாக வெளியிடப்பட்ட பிரகடணத்தை உதவி செயலாளர் ஜெ.ஜெயராஜ் வெளியிட்டு வைத்தார்.
மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திலிருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயம் வரை மகளீர் அணி ஊhர்வலமாக சென்றமை குறிப்பிடத்தக்கது.
எந்தவொரு கட்சியும் செய்யாத சேவைகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செய்வது ஒன்றும் புதிதல்ல. கடந்த மே முதலாந் திகதி மிகப் பிரமாண்டமான முறையிலே மட்டக்களப்பிலே யாருமே செய்யாத நிலையில் தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சி தொழிலாளர் தினத்தை கொண்டாடியது என்றுமே நினைவுபடுத்த வேண்டியதொன்றாகும். மக்கள் பொறுப்பு மிக்க கட்சி என்பதனை நிருபிக்கும் சாட்சியங்களே இவை.