3/20/2013

| |

தமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்கப்பட்டதற்கு இலங்கை கடும் கண்டனம்

இந்தியாவின் தமிழகத்தில் பெளத்த மதகுருமார் மற்றும் யாத்திரிகர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. அதேநேரம், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நேற்று பாராளுமன்றத்தில் இலங்கை அரசின் ஆட்சேபனையைத் தெரிவித்தார்.
இதேவேளை, பெளத்த மதகுருமார் மற்றும் யாத் திரிகர்கள் தமிழகத்தில் தாக் கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரி வித்து கொழும்பிலு ள்ள இந்திய உயர்ஸ்தானிக ராலயத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன் றும் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் கடும்போக்காளர்களால் இலங்கையர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறி வித்துள்ளது.
மீதான இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவைக் குழப்பும் வகையில் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இலங்கையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த தனது கடுமையான எதிர்ப்பினை இலங்கை அரசாங்கம், இந்தியாவிலுள்ள இந்தியத் தூதர கத்தின் ஊடாக இந்திய மத்திய அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளது.
இலங்கையிலிருந்து தமிழகத்தின் தஞ்சாவூர் மற்றும் சென்னைக்குச் சென்ற யாத்திரிகர்கள் மற்றும் இலங்கையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்துக் கவலையடைவதாகத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சு, இந்தியாவுக்குச் செல்லும் இலங்கையர்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்துக்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் செல்வதற்கு முன்னர் தமிழகத்திலுள்ள துணை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டுச் செல்லுமாறும் வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேநேரம், பாராளுமன்றத்தில் நேற்று வாய்மொழிமூலமான கேள்வியொன்றுக்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தமிழகத்தில் இலங்கையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கடுமையான ஆட்சேபனையைத் தெரிவிக்குமாறு, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக அறிவித்துள்ளதாகக் கூறினார்.
இவ்வாறான தாக்குதல்கள் மிகவும் மோசமானவை. இதற்கு எந்த வகையிலும் இடமளிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். தாக்குதல் சம்பவங்கள் குறித்து உரிய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் உயர்ஸ்தானிகருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாரிய ஆர்ப்பாட்டம்
இதேவேளை, தமிழகத்துக்குச் சென்ற பெளத்த பிக்குமார் தஞ்சாவூர் மற்றும் சென்னை ரயில் நிலையத்தில் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. சிங்கள ராவய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் பெளத்த மதகுருமார் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
‘இந்த நிலைகுறித்து வெட்கமடை கிறோம்’, ‘தமிழ் நாட்டிலுள்ள புலி ஆதரவாளர்கள் மீது கவனம் செலுத்து’ உள்ளிட்ட சுலோகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறும், இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் வரை பேரணியாகவந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது இவ்விதமிருக்க, தமிழகம் செல்லும் யாத்திரிகர்களுக்கு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் பின்வரும் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளது.
56, ஸ்டேர்லிங் வீதி, நுங்கம்பாக்கம், சென்னை-600034, 0091 4428241896, 0091 4428252612, 0091 4428241047 என்ற தொலைபேசி இலக்கங்கள், தொலைநகல்:- 0091 4428241894, 0091 4428254242. யாத்திரிகர்களின் பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கான விமான சேவைகள் குறைப்பு தமிழகத்தில் இலங்கையர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைத் தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் சென்னைக்கான விமான சேவைகளைக் குறைத்துள்ளது. வியாழக்கிழமை முதல் விமான சேவைகள் குறைக்கப்படவுள்ளன. இதற்கமைய, வாரத்துக்கு 28ஆகக் காணப்பட்ட விமான சேவைகள் 14ஆகக் குறைக்கப்படவிருப்பதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.