3/04/2013

| |

மட்டக்களப்பில் மேலும் மூன்று இந்தியர்கள் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி மற்றும் கரடியனாறு ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமான முறையில் தங்கியிருந்த மூன்று இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அதில் இருவர் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவுப்பகுதியில் சோதிடம் கூறித்திரிந்த கணவன் மனைவி இருவரும் கைதுசெய்யப்பட்டு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் நிறுத்தப்பட்டபோது தலா 1000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டுளள்னர்.
சுற்றுலா வீசாவில் வந்து சோதிடம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலா வீசாவில் வந்து தொழில் செய்யமுடியாது என களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் எச்சரிக்கை செய்து அவர்களை விடுவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனைப்பகுதியில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இந்தியர் ஒருவரை கரடியனாறு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சுற்றுலா வீசாவில் வருகைதந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாகவே இவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 14க்கும் மேற்பட்ட இந்திய பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.