3/19/2013

| |

உலகை தாய்நாட்டோடு பிணைப்ப தற்கான நடவடிக்கைகளின் ஒரு அம்சமாகவே மத்தள விமான நிலையம்

உலகம் பெற்றுக்கொண்டுள்ள வெற்றிகளை எமது தாய் நாடும் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான அபிவிருத்திகளையே நாம் முன்னெடுத்துள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
உலகை தாய்நாட்டோடு பிணைப்ப தற்கான நடவடிக்கைகளின் ஒரு அம்சமாகவே மத்தள விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்த ஜனாதிபதி, நாம் உள்ளவை எதையும் மூடுவதன்றி உள்ளவற்றை மேம்படுத்தி மேலும் புதியவைகளை உருவாக்கவே நடவடிக்கை எடுத்துள்ளோம். மஹிந்த சிந்தனையின் நோக்கம் அதுவே எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மத்தள விமான நிலையம் திறக்கப் பட்டதும் கட்டுநாயக்கா விமான நிலையம் மூடப்பட்டு விடும் என சில சக்திகள் புரளிகளைக் கிளப்பி வருகின்றன. ஒருபோதும் அவ்வாறு நடைபெறமாட்டாது. நாம் உள்ளவைகளை இல்லாதொழிக்காது அவற்றை மென்மேலும் கட்டியெழுப்பு வதுடன் புதியவற்றை கட்டியெழுப்பு வதற்கும் நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தள ராஜபக்ஷ விமான நிலையம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
அமைச்சர்கள் பிரியங்கர ஜயரத்ன, நிமால் சிரிபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம், ஏ. எச். எம்.பெளஸி, ரிசாட் பதியுதீன், மஹிந்த அமரவீர உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள்,
முதலமைச்சர்கள், பாராளுமன்ற உறுப் பினர்கள் உள்நாட்டு, வெளிநாட்டு ராஜ தந்திரிகள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி; கிராமங்களில் உள்ள சுதந்திரம், நம்பிக்கை நகரங்களில் இருந்த தில்லை. நாம் கிராமங்களை நகரங்களோடு இணைப்பது மட்டுமன்றி கிராமிய சூழலை நகரத்திற்கு எடுத்துச் சென் றுள்ளோம்.
அதேபோன்று, நாம் நகரங்களில் உள்ள சகல வசதிகளையும் கிராமங்களுக்கு வழங்கியுள்ளோம். மின்சாரம், வீதிகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சார நிலையங்கள், பாடசாலைகள் மற்றும் ஆஸ்பத்திரிகளென சகலதும் கிராமங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
நாம் வடக்கு, கிழக்கு, தெற்கு என நாட்டின் சகல பிரதேசங்களிலும் அபிவி ருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து ள்ளோம். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கிளிநொச்சி, திருகோணமலை என மாவட்டங்கள் தோறும் எமது அபிவிருத்திச் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
நாம் மக்களிடம் கேட்டுக்கொள்வ தெல்லாம் எமது சுதந்திரம், எமக்கான தனித்துவத்தையும் பாதுகாத்து எமது கலாசாரத்தோடு பிணைந்த வாழ்க்கையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே. அதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
எமது கலாசார விழுமியங்களை மென் மேலும் கட்டிக் காப்பதற்கான செயற்பாடுகள் அவசியம். நாம் நகரைக் கிராமங்களுக்கு எடுத்துச் செல்வதைப் போன்று கிராம சூழலை நகரங்களுக்கு எடுத்துச் சென்றுள் ளோம். கொழும்பு நகரத்திலும் இச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
எமது சிறார்கள் இதுபோன்றதொரு விமான நிலையம் கிராமத்தில் நிர்மாணிக் கப்படும் என வாழ்க்கையில் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
அவர்களின் கனவுகள் தற்போது நனவாகியுள்ளன. கிராமங்கள் கடந்த காலங்களில் இருந்தது போலன்றி வேகமான அபிவிருத்தியைக் கண்டுள்ள மையை மக்கள் அறிவர். நாம் முன்னெ டுக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் பெரும் பலன்களை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
நாம் உணவுக்காகக் கடன் பெறுவதில்லை. நாட்டில் அபிவிருத்தியை முன்னெடுப்பதற் காகவே கடன் பெற்று வருகிறோம். இதன் நிவாரணங்கள் எதிர்காலத்தில் எமது மக்களுக்குக் கிடைப்பது உறுதி எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
சில வருடங்களுக்குள் தாய்நாட்டுக்கு கெளரவமான சமாதானத்தைப் பெற்றுக் கொடுக்க எம்மால் முடிந்துள்ளது. அதேபோன்று மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்குத் திட்டத்தில் ஐந்து துறைகளான கடல், மின், வர்த்தகம், அறிவு மற்றும் வான் கேந்திரத்தையும் கட்டியெழுப்பு வதற்கும் நாட்டை ஆசியாவின் உன்னத நாடாக கட்டியெழுப்பவும் நாம் உறுதி கூறியுள்ளோம்.
அதற்கான பயணத்தை மிகவும் சரி யானதாக முன்னெடுத்து தற்போது எமக் கான விமான நிலையமொன்றையும் நிர்மாணிப்பதற்கு முடிந்துள்ளது.
இது நாட்டின் அபிவிருத்தியை இலக் காகக் கொண்ட முதலாவது விமான நிலையமாகும். இது நமக்கு சிறந்ததொரு வாய்ப்பாகும். விமானம் இறங்கும் போது எமது அபிவிருத்தியும் முன்னேற்ற மடைய வேண்டும். மாஹம்புர விமான நிலையம் மூலம் இப்பகுதியின் பெறுமதி அதிகரிக்கும். யால வனப் பகுதிக்கு மேலும் உலக மதிப்பு கிடைக்கும்.
விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்கும் இந்த விமான நிலையம் பெரும் பலமாக அமையும். இங்கிருந்து மூன்று மணித்தி யாலங்களில் கிழக்கின் பாசிக்குடாவிற்குச் செல்ல முடியும். அம்பாறைக்கும் போக முடியும். இரண்டரை மணி நேரத்தில் நுவரெலியாவிற்கும் செல்ல முடியும். இதுபோன்ற முன்னேறிச் செல்லும் நாட்டையே நாம் தற்போது கட்டியெழுப்பு கிறோம்.
விமானம் மத்தளயிலிருந்து மேலெழும்பும் போது தெற்கு, ஊவா மட்டுமன்றி சப்ர கமுவ உட்பட முழு நாட்டினதும் பெறுமதி அதிகரிக்கும். இதனை சகலரும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.
நாம் பெருமளவு அபிவிருத்திகளை எமது நாட்டின் வருமானத்திலிருந்தே மேற்கொள் கின்றோம். எனினும் இதுபோன்ற பாரிய அபிவிருத்திகளுக்கு வெளிநாடுகளில் கடன்பெற வேண்டியுள்ளது. எமது நட்பு நாடான சீனா அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நிர்மாணிக்க உதவியது. அதேபோன்று இந்த அழகிய மத்தள விமான நிலையத்தை நிர்மாணிக்கவும் உதவியுள்ளது.
மொரகஹகந்த, வெஹேரகல, ரம்புக்கன் ஓய, தெதுறு ஓய போன்ற திட்டங்கள் எமது நிதியிலேயே மேற்கொள்ளப்பட் டுள்ளன. எனினும் இவற்றை நிறைவு செய்வதற்கு எம்மிடமுள்ள நிதி போதாது. அதனால்தான் நாம் சர்வதேச கடனுதவியைப் பெறுகின்றோம். நாம் மட்டுமல்ல உலகின் முன்னேற்றமடைந்த நாடுகளும் தமது நாட்டைக் கட்டியெழுப்ப கடன் உதவிகளைப் பெற்றுவருகின்றன.