தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் முழுவடிவம்
பெண்களை சிரமேற்றா விட்டாலும் சிதைக்காதீர்கள்.
பெண்கள் எம்மில் இருந்து விலக்கியோ, வேறாக்கியோ பார்க்கப்படவேண்டியவர்களல்ல. ஆண்களுக்கு ஈடாக பெண்களையோ பெண்களுக்கு ஈடாக ஆண்களையோ ஒப்பிடும் நிலையினை முதலில் மாற்ற வேண்டும். ஒன்றுடன் இன்னும் ஒன்றை ஒப்பிட முனையும் போதே ஏற்றத் தாழ்வுகளும் பலவீனங்களும் வெளிக்கொண்டுவரப்படுகின்றது. இங்கிருந்தே தாழ்வு நிலை ஆரம்பமாகின்றது.
. எவர் திறமைசாலியோ! எவர் வலிமையுள்ளவரோ! அவர் சமூக அந்தஸ்தைப் பெறலாம் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். ஆனால் சமூகம் இன்னும் பெண்களை போதைப் பொருளாகவும், அடுப்பங்கரைப் பூனைகளாகவும் பார்க்க முற்படுவது கொடுமை அதிலும் பெண்களே இதற்கு வித்திடுவது கொடுமையிலும் கொடுமை.
சமூகத்தில் தலைநிமிர்வுடன் ஒரு பெண் சாதிக்க முனையும் போது அவள் எதிர்நோக்கும் சவால்கள், தடைகள் சொல்லில் அடங்காது. எல்லாக் கட்டங்களையும் கடந்து தலைநிமிரும் போது அவருக்கு உளவியல் ரீதியாக தாக்க முற்படும் சமூகப் பண்பு இன்னும் மாறாமல் இருப்பதும் வேதனைக்குரியது.
சமூகத்தில் தலைநிமிர்வுடன் ஒரு பெண் சாதிக்க முனையும் போது அவள் எதிர்நோக்கும் சவால்கள், தடைகள் சொல்லில் அடங்காது. எல்லாக் கட்டங்களையும் கடந்து தலைநிமிரும் போது அவருக்கு உளவியல் ரீதியாக தாக்க முற்படும் சமூகப் பண்பு இன்னும் மாறாமல் இருப்பதும் வேதனைக்குரியது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைக்கப்பட வேண்டியவையல்ல. அடியோடு ஒழிக்கப்பட வேண்டியவை. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பெண் சிசுக் கொலைகளும் தற்போது பரவலாக முளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இது ஆரம்பத்திலேயே களை எடுக்கப்பட வேண்டிய வியடமாக அனைவரும் பார்க்க வேண்டும். வறுமையும் யுத்தமும் இதற்கு ஒரு காரணமாகக் கூறிக்கொண்டு இருப்பதற்கு மாறாக இதனை மாற்ற முற்பட வேண்டும்.
பல ஆணாதிக்க சக்திகளும் பெண்களின் வறுமை நிலையினை தமக்கு சாதகமாக்கி தவித்த முயலை அடிக்க முற்படக் கூடாது. பெண்களின் சாதனையில் பங்கு கொள்ளா விட்டாலும் பெண்களை சீரopக்காது அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வழி விட்டுக் கொடுப்பது சிறந்ததாக அமையும்.
2013ஆம் வருட மகளீர் தினத்திலிருந்து பெண்களுக்கெதிரான சீதன, சமூக, பொருளாதார, பாலியல் கொடுமைகளை அற்ற நிலை மலர எல்லோரும் ஒத்துழைப்புடன்பாடுபடுவோம்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் வேதனைப்படும் சுமார் 45,000 கணவனை இழந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் வாழ்வதாரத்தில் வலுப் பெற அனைத்து அரசியல் தலைமைகளும் முன்வந்து சேவையாற்ற் வேண்டும் எனவும் இம் மகளீர் தினத்தில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் -