3/18/2013

| |

கல்லடி வேலூரில் மகளீர் தினம்

கல்லடி வேலூர் சமுர்த்தி செயலணியும் கல்லடி வேலூர் லைவ்(வலுவூட்டலுக்கான வாழ்வாதார முதலீடு) அமைப்பும் இணைந்து நடாத்திய மகளீர் தின நிகழ்வு கல்லடி வேலூர் சிவசக்தி வித்தியாலய மண்டபத்தில் இன்று(16.03.2013) இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கின் முதல்; முதலமைச்சரும் ஜனாதிபதியின் கிழக்கு மாகாண அபிவிருத்திற்கான விசேட ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்தார். மேலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் உட்பட பல அதிதிகளும் கலந்து கொண்டார்கள்.
10 சமுர்த்தி செயலணிகளிலிருந்து 20 பெண்கள்  சிறந்த சேவையாளர்களாக கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். அதே வேளை லைவ் அமைப்பின் உத்தியோகபூர்வ இணைத்தளமும் ஜனாதிபதியின் ஆலோசகர் சி.சந்திரகாந்தன் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.